Advertisment

Explained: நிலையான அபிவிருத்தி இலக்கு அட்டவணை (SDG Index) என்றால் என்ன?

ஒரு மாநிலம் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறது என்றால், 2030ம் ஆண்டில் ஐ.நா மூலம் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளை அடையும் என்று பொருகள் கொள்ளப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Kerala’s Andhra Pradesh,Tamil Nadu and Telangana tops in NITI latest SDG India Index 2019

Kerala’s Andhra Pradesh,Tamil Nadu and Telangana tops in NITI latest SDG India Index 2019

நிதி ஆயோக் தனது சமீபத்திய நிலையான அபிவிருத்தி இலக்கு அட்டவணையை (எஸ்டிஜி இந்தியா இன்டெக்ஸ் 2019)  வெளியிட்டுள்ளது.

Advertisment

இது இந்தியாவின் அனைத்து மாநிலத்தையும், யூனியன் பிரதேசத்தையும்  16 நிலையான அபிவிருத்தி வளர்ச்சி இலக்குகளில் (எஸ்டிஜி) மதிப்பிடுகிறது. 70 மதிப்பெண்களுடன் கேரளா முதலிடத்திலும், பீகார் 50 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. யூனியன் பிரதேச தரவரிசையில் சண்டிகர் 70 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

 

நல்ல ஆரோக்கியம் முதல் தரமான கல்வி, பாலின சமத்துவம் மற்றும் காலநிலை நடவடிக்கை வரை என கணக்கிடப்படும் 16 இலக்குகளில் ஒவ்வொன்றிலும் பல இன்டிகேட்டர்ஸ் உள்ளன. இந்த  இன்டிகேட்டர்ஸின் எண்ணிக்கை ஒவ்வொரு எண்ணிகையிலும் மாறுபடுகிறது.

ஒவ்வொரு குறிக்கோளுக்கும் மாநிலத்திற்கு மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. ஒரு மாநிலத்தின் மொத்த மதிப்பெண்னை தெரிந்து கொள்ள  அனைத்து இலக்குகளிலும் பெற்ற மொத்த எண்ணிக்கையைத் திரட்டுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

ஒவ்வொரு மாநிலத்துக்கும் அல்லது யூடியுக்கும் கூட்டு மதிப்பெண் இந்த இலக்குகளில் அவற்றின் செயல்திறனைத் திரட்டுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது, பின்னர் தனிப்பட்ட கோல் மதிப்பெண்களின் எண்கணித சராசரியை எடுத்துக்கொள்வதன் மூலம் கணக்கிடப்படுகிறது. 100 மதிப்பெண் என்பது மாநில / யூடி 2030 க்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைந்துள்ளது என்பதைக் குறிக்கிறது.

இன்றும் ஏன் பெரியார் தமிழகத்தின் முக்கியமான ஒருவராக திகழ்கிறார்?

ஒரு மாநிலம் 100 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறது என்றால், 2030ம் ஆண்டில் ஐ.நா மூலம் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்குகளை அடையும் என்று பொருகள் கொள்ளப்படுகிறது.

Good governance index : மாநிலங்களின் நிர்வாகத்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது

 

இந்த 16 நிலையான அபிவிருத்தி  இலக்குகளில் (எஸ்டிஜி), கடல் சுற்றுச்சூழல் தொடர்பான இலக்குகள்  கடலோர மாநிலங்களுக்கு மட்டுமே கணக்கு செய்யப்படுகின்றன.  மேலும் இவை மொத்த மதிப்பெண்களில் சேர்க்கப் படுவதில்லை .

மற்ற இலக்குகளில் ,

வறுமையை ஒழித்தல் ’ இலக்கில் தமிழகம் சிறந்து விளங்குகிறது

அனைவருக்கும் உணவு' இலக்கில் கோவா  சிறந்து விளங்குகிறது;

நல்ல ஆரோக்கியம்’  இலக்கில் கேரளா சிறந்து விளங்குகிறது ;

தரமான கல்வி’ இலக்கில்  இமாச்சலப் பிரதேசம் சிறந்து விளங்குகிறது;

பாலின சமத்துவம்’ இலக்கில் மீண்டும் இமாச்சலப் பிரதேசம் சிறந்து விளங்குகிறது ;

சுத்தமான நீர் மற்றும் தூய்மை சுகாதாரம்’ இலக்கில்  ஆந்திரா சிறந்து விளங்குகிறது ;

மலிவு மற்றும் சுத்தமான ஆற்றல்’  இலக்கில் சிக்கிம் சிறந்து விளங்குகிறது ;

வேலை & பொருளாதார வளர்ச்சி’  இலக்கில் தெலுங்கானா சிறந்து விளங்குகிறது;

தொழில் புதுமை மற்றும் உள்கட்டமைப்பு' இலக்கில் குஜராத் சிறந்து விளங்குகிறது;

ஏற்றத்தாழ்வுகளை குறைத்தல் ’ இலக்கில்  தெலுங்கானா சிறந்து விளங்குகிறது;

நிலையான நகரம் மற்றும் சமூகங்களுக்கான’ இலக்கில்  கோவா சிறந்து விளங்குகிறது ;

நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி ' இலக்கில் நாகாலாந்து சிறந்து விளங்குகிறது ;

காலநிலை நடவடிக்கை’ இலக்கில்  கர்நாடகா சிறந்து விளங்குகிறது ;

வாழ்க்கை மற்றும்  நில வளம் ’ இலக்கில் மணிப்பூர்  சிறந்து விளங்குகிறது ;

அமைதி, நீதி, வலுவான அரசு நிறுவனங்கள்’ இலக்கில் ஆந்திரா மற்றும் குஜராத் சிறந்து விளங்குகிறன;

 

கேரளாவின் கூட்டு மதிப்பெண் 70யைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசம் 69 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகியவை ஒவ்வொன்றும் 67 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டன.

கர்நாடகா (66), சிக்கிம் (65), கோவா (65) ஆகிய மாநிலங்ககள்  அடுத்தடுத்து உள்ளன.

 

Niti Aayog Kerala Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment