Advertisment

நாகலாந்து துப்பாக்கிச்சூடு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கொன்யாக் பழங்குடிகள் அழைக்கப்படுவது ஏன்?

நாகலாந்தின் போர் குணம் கொண்ட பழங்குடிகளாக அறியப்பட்ட கொன்யாக்கள் போரின் போது எதிரிகளின் தலைகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டவர்கள். 1980களின் பிற்பாதி வரை இந்த பழக்கம் நடைமுறையில் இருந்தது.

author-image
WebDesk
New Update
Konyak tribe numbers, Military attack, Nagaland News, today news, Tribal issues

Konyak tribe numbers : நாகலாந்து மாநிலம் மோன் (Mon) மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒடிங் (Oting) என்ற கிராமத்தில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையின் காரணாமாக சனிக்கிழமை மாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் 8 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் அனைவரும் நாகலாந்து பழங்குடிகளில் பெரும்பான்மை கொண்ட பழங்குடியினமான கொன்யாக்கை (Konyak tribe) சேர்ந்தவர்கள்.

Advertisment

அருணாச்சலம் வரை பரவி உள்ள கொன்யாக்கின் மொத்த மக்கள் தொகை 3 லட்சத்திற்கும் அதிகம். மியான்மர் நாட்டிலும் குறிப்பிடத்தக்க அளவில் இம்மக்கள் வசித்து வருகின்றனர்.

நாகலாந்தின் போர் குணம் கொண்ட பழங்குடிகளாக அறியப்பட்ட கொன்யாக்கள் போரின் போது எதிரிகளின் தலைகளை வேட்டையாடும் பழக்கத்தைக் கொண்டவர்கள். 1980களின் பிற்பாதி வரை இந்த பழக்கம் நடைமுறையில் இருந்தது.

நாகலாந்து மாநிலத்தில் உள்ள மோனில் மட்டும் தான் பிரிவினைவாத இயக்கம் என்று கருதப்படும் நாகலாந்து தேசிய சோசியலிச கவுன்சில் (ஐ.எம்.) (National Socialist Council of Nagaland) அமைப்பால் ஒரு முகாமை கூட ஏற்படுத்த இயலவில்லை. கொன்யாக்கள் கொடுத்து வந்த எதிர்ப்பின் விளைவாக அவர்களால் மோனில் நுழைய இயலவில்லை.

தொடர் அடக்குமுறைகளுக்கு ஆளாகும் காடர் பழங்குடியினர்; பட்டா நிலத்தில் குடிசைகளை அகற்றிய வனத்துறை

அவர்களின் மக்கள் தொகை மற்றும் என்.எஸ்.சி.ஐ (ஐ.எம்) அமைப்பிற்கு எதிரான நிலைப்பாடு போன்றவை தான் நாகலாந்து தேசிய அரசியல் குழுவின் (Nagaland National Political Group) முதுகெலும்பாக கொன்யாக் மக்களால் செயல்பட முடிகிறது. இந்த அரசியல் குழுவில் நாகலாந்தை பூர்வீகமாகக் கொண்ட 7 கிளர்ச்சியாளர்கள் குழு இடம் பெற்றுள்ளது. ஆனால் மணிப்பூரின் தாங்குல் பழங்குடியினர் ஆதிக்கம் என்.எஸ்.சி.என். அமைப்பில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.

இதனால் அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதிலும், பேச்சு வார்த்தைக்கு பிறகு அமைதியை நிலை நிறுத்தவும் கொன்யாக்கள் மிகவும் முக்கியமானவர்களாக கருதப்படுகின்றனர். கொன்யாக் மக்களை அமைதிப்படுத்தாவிட்டால் அமைதி நடவடிக்கைகள் மொத்தமாக சீர்குலையும் என்று நாகலாந்தின் மூத்த அரசியல் தலைவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சார்பு நிலையில் மட்டுமே மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதியில் வளர்ச்சிப் பணிகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்பதை காரணமாக காட்டி பல ஆண்டுகளாக மோன் உட்பட கிழக்கு நாகலாந்து மாவட்டங்கள் தனி நாகலாந்து முன்னணி மாநிலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Nagaland
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment