இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா மற்றும் கோ ஏர் நிறுவனங்கள் நகைச்சுவையாளர் குணால் கம்ராவிற்கு, தங்களுடைய விமானத்தில் பயணிக்க தடை விதித்துள்ளது. இண்டிகோ விமானத்தில் பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமியை தரக்குறைவாக பேசியதின் அடிப்படையில் இந்த முடிவை எடுத்துள்ளன விமான நிறுவனங்கள்.
பயணிகளை விமானத்தில் பயணிக்க தடை விதிக்க பின்பற்றப்படும் சட்டமுறைகள் என்ன?
விமான பயணத்தின் போது பயணிகள் மற்றவர்களுக்கு தொந்தரவு தருமாறு நடந்து கொள்வதை தடுக்க உதவும் வகையில் 2017ம் ஆண்டு சில விதிமுறைகளை கொண்டு வந்தது மத்திய அரசு. அந்த விதிமுறைகள் மற்றும் திட்டங்களின் படி பயணிகள் செய்யும் பிரச்சனைகளுக்கு ஏற்ற வகையில் விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்படுகிறது.
தொந்தரவு தரும் வகையில் நடந்து கொண்ட பயணிகள் குறித்து விமானிகள் தங்களுடைய ஏர்லைன் நடத்தும் இண்டெர்நெல் கமிட்டியிடம் முறைப்படி புகார் அளிக்க வேண்டும். விசாரணைகள் நடத்தப்பட்டு பயணிகளுக்கு தடை விதிக்க 30 நாட்கள் வரையில் கால அவகாசம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தரக்குறைவான பேச்சுக்கு 3 மாதங்கள் வரை தடையும், தாக்குதல் போன்ற சண்டைகளில் ஈடுபட்டால் 6 மாதங்கள் வரை தடையும், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டால் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரையும் தடை விதிக்கப்படும்.
Why is there a no-fly list?
சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) வெளியிட்டுள்ள சிவில் ஏவியேஷன் தேவைகள் குறித்து அறிக்கை வெளியிட்டது. விமானங்களின் மற்ற பயணிகளுக்கு அச்சுறுத்தல் தரும் விதமாக நடந்து கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்தது. சாதாரண ஒரு பயணியால் மொத்த விமான பயணமும் பாதிப்படையும். 2017 ஆம் ஆண்டில் சிவசேனா எம்.பி. ரவீந்திர கெய்க்வாத் ஏர் இந்தியா ஊழியரைத் தாக்கிய சம்பவத்தின் பின்னர் அரசாங்கம் இந்த விதிகளை உருவாக்கியது. அதைத் தொடர்ந்து, பல விமான நிறுவனங்கள் கெய்க்வாத்திற்கு பயணிக்க தடை விதித்தது. இதனை தொடர்ந்து நோ-ஃப்ளை லிஸ்ட் பட்டியலை அந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டது மத்திய அரசு.
விமான பயணத்தின் போது மற்றவர்களுக்கு வார்த்தைப் பிரயோகம், உடல் ரீதியான தாக்குதல் மற்றும் உயிருக்கு சேதம் விளைவுக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் போன்றவற்றால் ஒருவரை விமானத்தில் பறக்க தடை விதிக்கலாம். மது அருந்துதல், போதை மருந்து போன்றவை காரணமாகவும் கூட ஒருவருக்கு பறக்க தடை விதிக்கலாம். மேலும் சக பயணிகள், விமான பணியாளர்களை தரக்குறைவாக பேசுதல் போன்றவற்றின் காரணமாகவும் ஒருவரை பறக்க தடை விதிக்கலாம். இது போன்ற நடத்தைகளில் ஈடுபடும் பயணிகள் குறித்த புகார்களை விமானி முதலில் கமிட்டிக்கு தர வேண்டும். விசாரணையின் போது, விமான நிறுவனம் அதிகபட்சமாக 30 நாட்கள் வரை பயணிகளை பறக்க தடை செய்யலாம். கூடுதலாக, டி.ஜி.சி.ஏ மற்றும் விமான நிறுவனங்களுக்கு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்களாக அடையாளம் காணப்பட்ட தனிநபர்களின் பட்டியலை உள்துறை அமைச்சகம் வழங்குகிறது.
இண்டெர்நெல் கமிட்டி என்றால் என்ன?
ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் அல்லது செசன் நீதிபதிகள் சேர்மென்களாக இருப்பார்கள். விமான நிறுவனத்தின் நிர்வாக குழுவில் ஒருவரும் பயணிகள் அசோசியேசனில் இருந்து ஒருவரும் இந்த குழுவில் இடம் பெற்றிருப்பார்கள். இந்த விமான கமிட்டியினர் 30 நாட்களில் புகாரை விசாரணை செய்து முடிவுகளை சம்பந்தபட்ட விமான நிறுவனத்திற்கு தரவேண்டும். 30 நாட்களில் கமிட்டியினர் முடிவினை எடுக்கவில்லை என்றால் பயணிகள் எந்தவிதமான தடையும் இன்றி பயணிக்கலாம்.
தடையை பெற்ற எந்த ஒரு விமானியும் தடை விதிக்கப்பட்ட 60 நாளில் இருந்து விமான போக்குவரத்து துறையால் நியமிக்கப்பட்ட மேல்முறையீட்டு குழுவிடம் மேல் முறையீடு செய்யலாம். இந்த மேல் முறையீட்டுக் குழுவானது பயணிகள் சங்கம் அல்லது நுகர்வோர் சங்கத்தின் பிரதிநிதி; மற்றும் துணைத் தலைவர் அல்லது அதற்கு சமமான பதவிக்கு கீழே இல்லாத ஒரு விமான பிரதிநிதியை கொண்டுள்ளது இந்த குழு. இந்த மேல்முறையீட்டுக் குழுவானது குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைக்குமா என்பது போன்ற தகவல்களை இந்த குழு வழங்கவில்லை. மேல்முறையீட்டு குழுவின் முடிவே இறுதியானது. இதற்கும் மேலே மேல்முறையீடு செய்ய வேண்டுமென்றால் பயணி உயர் நீதிமன்றத்தைத் தான் அணுக வேண்டும்.
ஜெட் ஏர்வேசில் பயணித்த மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் விமானத்தில் வெடிபொருட்கள் உள்ளது என்று அவர் கூற விமானத்தை அவசரமாக தரையிரக்க நேரிட்டது. அந்த தொழிலதிபர் தான் முதன் முதலாக விமானத்தில் தடைவிதிக்கப்பட்டவர். மேலும் கடத்தல் தடுப்பு சட்டம் 2016-ன் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு என்.ஐ.ஏ நீதிமன்றம் 5 கோடி ரூபாய் அபராதமும் ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.