Interesting Facts About Lunar Eclipse: இன்று ஜூலை 16 இரவு சந்திர கிரகணம் ஏற்பட உள்ளது. இது குறித்து அறிவியல் அறிஞர்களும் சோதிடவியலாளர்களும் பலவாறாக கருத்து தெரிவிக்கின்றனர். அதனால், இந்த சந்திர கிரகணத்தைப் பற்றிய சில சுவாரசியமான அறிவியல் மற்றும் வரலாற்று தகவல்களை பார்க்கலாம்.
21 ஆம் நூற்றாண்டில் மொத்தம் 85 சந்திர கிரகணங்கள் இருக்கின்றன. அவற்றில், புவிப்பரப்பில் குறிப்பிட்ட இடத்திலிருந்து மொத்தம் 40 முதல் 45 சந்திர கிரகணங்களை மட்டுமே காண முடியும். அல்லது 2 ஆண்டுகள் 3 மாதங்களுக்கு ஒரு முறை ஒரு சந்திர கிரகணத்தை மட்டும் காண முடியும்.
இன்று சந்திர கிரகணம்...11 மணி நேரம் மூடப்படும் கோயில்கள் முழு விபரம்!
இது முழு சூரிய கிரகணங்களில் இருந்து மாறுபடுகிறது. முழு சூரிய கிரகணம் புவியில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து பார்த்தால் சராசரியாக ஒவ்வொரு 375 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. இந்த பெரிய வேறுபாடுக்கான காரணம் மிகவும் எளிது.
சூரியனின் மொத்த கிரகணத்தைக் காண, நீங்கள் சந்திரனின் இருண்ட நிழலின் (அம்ப்ரா) பாதையில் அதிர்ஷ்டவசமாக இருக்க வேண்டும், இது பல ஆயிரக்கணக்கான மைல்களுக்கு நீட்டிக்கப்படலாம், ஆனால், அது 167 மைல்களுக்கு மேற்பட்ட விட்டம் கொண்டதாக இருக்க முடியாது.
இதற்கு நேர்மாறாக, மொத்த சந்திர கிரகணம் பூமியின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு தெரியும் அளவுக்கு நீண்டுள்ளது. இந்த சந்திர கிரகண நிகழ்ச்சியில் பில்லியன் மக்கள் பங்கேற்க அனுமதிக்கிறது.
சந்திர கிரகணத்தின்போது வெப்ப அதிர்வலை
சந்திரனின் நிலப்பகுதியை பூமியின் நிழல் கடக்கிறபோது வெப்பநிலை மிகவும் தீவிரமாக குறையும். உண்மையில், இதனுடைய விளைவாக உருவாகும் வெப்ப அதிர்வால் சந்திரனின் பாறைகள் நொறுங்கி, சந்திரனுக்குள் இருந்து வாயு வெளியேறலாம். பொதுவாக, சூரியன் மெதுவாக சந்திரனில் அஸ்தமிக்கும்போது, வெப்பநிலை வீழ்ச்சி படிப்படியாக இருக்கும். ஆனால், சந்திரனின் வானத்தில் சூரியன் அதிகமாக இருக்கும்போது சூரிய ஒளி நிறுத்தப்பட்டால், மிக வேகமாக வெப்பநிலை குறைவு ஏற்படும். இந்த வெப்ப நிலை குறைவு வெறும் 10 முதல் 30 நிமிடங்கள் வரையில் ஏற்படும்.
1971 ஆம் ஆண்டிலிருது முழு சந்திர கிரகணங்களின்போது 2 அப்பல்லோ வின்கலங்கள் தரையிறங்கிய இடங்களில் வெப்பநிலை கண்காணிக்கப்பட்டது. அப்போது, அப்பல்லோவின் 12 இடங்களில் புயல் பெருங்கடலின் வெப்பநிலை 168.3 டிகிரி பாரன் ஹீட்-டிலிருந்து மைனஸ் 153 டிகிரி பாரன் ஹீட்டாக குறைந்தது. சரியாக 321.3 டிகிரி பாரன் ஹீட் வெப்பநிலை மாற்றம் காணப்பட்டது.
முழு கிரகணத்தின்போது சந்திரனில் வெப்பமாகும் இடங்கள்
சந்திர கிரகணத்தின் இன்ஃப்ராரெட் படங்கள் சந்திரனின் நிலப்பரப்பில் அதனுடைய வெப்ப நிலையை விட அதனுடைய பெரும்பாலான பகுதிகள் வெப்பமாக இருப்பதை காட்டுகிறது. சந்திரனில் டைகோ போன்ற சில முக்கிய பள்ளங்களின் ஸ்கேன்கள், சந்திரனின் உட்புறத்திலிருக்கும் வெப்பத்தை விட சேமிக்கப்பட்ட சூரிய வெப்பத்தால் வெளியாகும் வெப்ப வெளியீட்டு முறையை முக்கியமாக காட்டியது. அதே நேரத்தில் காஸ்ஸெண்டி போன்ற பிற பள்ளங்களும் எதிர்பார்க்கும் வெப்ப மாற்றங்களைக் காட்டுகின்றன.
இந்த நிகழ்வுகள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வு செய்யப்பட்டு, அதை விளக்க பல கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தாலும், பூமியின் இருண்ட நிழலில் சந்திரன் முழுவதுமாக மூழ்கும்போது இதுபோன்ற சூடான இடங்கள் ஏன் இருக்கின்றன என்பதற்கு யாரும் உறுதியான தீர்வை தீர்மானமாக முன்வைக்கவில்லை.
மிக நீண்ட சந்திர கிரகணம்
மிக நீண்ட சந்திர கிரகணத்தின் மொத்த கால அளவும் 106 நிமிடங்கள் ஆகும். இது சந்திரன் பூமியின் நிழலின் நடுவே கடக்கும்போது அல்லது சந்திரன் அபோஜீக்கு (பூமியிலிருந்து அதன் சுற்றுப்பாதையில் மிக தொலைவில் உள்ள புள்ளி) மிக அருகில் இருக்கும்போது நிகழலாம். சந்திரன் அபோஜிக்கு அருகில் இருக்கும்போது, அது மெதுவாக நகர்கிறது மற்றும் பூமியின் நிழலைக் கடக்க நீண்ட நேரம் தேவைப்படுகிறது.
கூடுதலாக, வடக்கு அரைக்கோள கோடைகாலத்தில், பூமி ஏபிலியனுக்கு (சூரியனில் இருந்து அதன் சுற்றுப்பாதையில் மிக தொலைவில் உள்ள புள்ளி) அருகில் இருக்கும்போது மிக நீண்ட கிரகணங்கள் நிகழ்கின்றன. பூமி அதன் சுற்றுப்பாதையின் ஏபிலியன் பகுதியில் இருக்கும்போது, அதன் நிழல் சூரியன் நமக்கு நெருக்கமாக இருக்கும்போது விட சற்று பெரியதாக இருக்கும், இதன் விளைவாக நீண்ட சந்திர கிரகணங்கள் உருவாகின்றன. பசிபிக் பெருங்கடல், கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காணப்பட்ட ஜூலை 16, 2000 ஆம் ஆண்டில் நிகழ்ந்த மொத்த சந்திர கிரகணம் 106 நிமிடங்கள் 25 வினாடிகள் நீடித்த மிக நீளமான சந்திர கிரகணங்களில் ஒன்று. ஆகஸ்ட் 13, 1859 இல், மொத்தம் 3 வினாடிகள் நீடித்தது. ஆகஸ்ட் 19, 4753 ஆம் ஆண்டு வரை மிக நீண்ட சந்திர கிரகணம் இருக்கும் என்றும் அது 106 நிமிடங்கள் மற்றும் 35 வினாடிகள் நீடிக்கும் என்று வில்மேன்-பெல், இன்க் 2002 ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்ட .ஜீன் மியூஸ் எழுதிய "கணித வானியல் மோர்சல்ஸ் II-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த சந்திர கிரகணங்களின் முடிவை முன்னரே கூற முடியுமா?
சமீபத்திய ஆண்டுகளில், மொத்த சந்திர கிரகணத்திற்கும் ஒரு புதிய வார்த்தை ஊடகங்களில் கையாளப்படுகிறது. அது என்ன வார்த்தை என்றால் முழு சந்திர கிரகணத்தின் போது நிலவு ரத்தச் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது என்ற பொருளில் ரத்த நிலா (Blood Moon) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த புதிய வார்த்தை ஒரு மத போதகர் எழுதிய புத்தகத்தில் இருந்து வந்தது என்றும் இது 2014 ஏப்ரலில் தொடங்கியது என்றும் கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக 4 சந்திர கிரகணங்கள் யூத பண்டிகை விடுமுறை நாளில் ஒரே நேரத்தில் நடந்தது. அது பகுதி சந்திர கிரகணங்கள் இல்லாமல் 6 முழு நிலவுகளுக்கு இடையே நடந்தது. இது இறுதி காலத்தின் சகுனமாக குறிப்பிட்ட மத ரீதியாக நம்பப்படுகிறது. இந்த தொடர் சந்திர கிரகணத்தை சந்திர டெட்ராடண்ட் அல்லது டெட்ராட் என்று அழைக்கப்படுகிறது.
பிரான்ஸில் பதினான்காம் லூயி மன்னராக இருந்தபோது அந்த காலத்தில் தொடர் சந்திர கிரகணம் ஏதும் இல்லை என்று பெல்ஜியன் வானியல் அறிஞர் ஜீன் மீசஸ் குறிப்பிடுகிறார். 1909 ஆம் ஆண்டிலிருந்து 2156 ஆம் ஆண்டு வரைக்கும் 16 தொடர் சந்திர கிரகண டெட்ராட்கள் நடக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் டெட்ராட்கள் யூத விடுமுறை நாட்களுடன் ஒத்துப்போன காலங்கள் இருந்தன, ஆனால், அப்போது சாதாரணமாக எதுவும் நடக்கவில்லை.
வினோத நிறத்தில் நிலவு
நாம் ஏன் அவசியமில்லாமல் ஒவ்வொரு முழு சந்தி கிரகணத்தையும் ரத்த நிலவு என்று சொல்லி முத்திரை குத்துகிறோம்? முழு சந்திரன் உண்மையில் எவ்வாறு தோன்றும் என்பது தெரியவில்லை. நமது வளிமண்டலத்தால் சூரிய ஒளி சிதறடிக்கப்பட்டு பூமியின் விளிம்பில் ஒளி விலகல் ஏற்படுவதே அவ்வாறு சந்திரனை காண்பதற்கு காரணம்.
அது முழு கிரகணம் அடைந்த சந்திரனின் நிறம் மற்றும் பிரகாசம் உலகளாவிய வானிலை மற்றும் காற்றில் இடைநிறுத்தப்பட்ட தூசியின் அளவைப் பொறுத்தது. பூமியின் தெளிவான வளிமண்டலம் ஒரு பிரகாசமான சந்திர கிரகணம் என்று பொருள். ஆனால், சந்திர கிரகணம் ஏற்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய எரிமலை வெடித்து வளிமண்டல அடுக்குகளில் துகள்களை செலுத்தியிருந்தால், கிரகணம் மிகவும் இருட்டாக இருக்கும்.
சில கிரகணங்கள் அடர்ந்த கருஞ்சாம்பல் நிறத்தில் இருக்கிறது. அப்போது சந்திரன் நம் பார்வையில் இருந்து கிட்டத்தட்ட மறைந்துவிடும். அதனால், இதை நாம் இதை கரி நிலா என்று அழைக்கலாமா? அல்லது பழுப்பு நிறத்துடன் மங்கலாக ஒளிரும் நிலவை சாக்லேட் நிலா என்று அழைக்கலாமா? அல்லது பிரகாசமாக ஆரஞ்சு நிறத்தில் ஒரு செப்பு நாணயம் போல காட்சி அளிக்கும் சந்திர கிரகணத்தை செப்பு நிலா என்று அழைக்கலாமா? எப்படியானாலும் அது சந்திர கிரகணம் அவ்வளவே. ஆனால், இந்த ரத்த நிலா என்ற சொல் சிலரால் பயத்தை தூண்டவும் வணிக நோக்கத்திலும் பயன்படுத்தப்படுகிறது.
முழு சந்திர கிரகணம் நிலநடுக்கத்தை முன்னறிவிக்கிறதா?
1971 ஆம் ஆண்டு சான் பெர்னாண்டோ பூகம்பம் (சில்மர் பூகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது) பிப்ரவரி 9 ஆம் தேதி அதிகாலையில் தெற்கு கலிபோர்னியாவின் சான் கேப்ரியல் மலைகளின் அடிவாரத்தில் ஏற்பட்டது. அது 6.7 ரிக்டர் அளவில் இருந்தது. இதையடுத்து, பதினைந்து மணி நேரம் கழித்து, முழு சந்திர கிரகணம் நிகழ்ந்தது, இதற்கு சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகிவற்றின் நிலைதான் காரணம் என்று சிலர் கூறினார்கள்.
அப்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கிரிஃபித் பார்க் ஆய்வகத்தின் இயக்குநராக இருந்த டாக்டர் வில்லியம் காஃப்மேன், "இன்று சூரியனும் சந்திரனும் பூமியை சரியாக எதிர் திசைகளில் இழுத்து வருகிறார்கள். இதன் விளைவாக, பூமி கோள வடிவத்துக்கு பதிலாக ஒரு கால்பந்து வடிவத்துக்கு பிழியப்படுகிறது. இந்த ஈர்ப்பு சக்தியும் அலை அழுத்தங்களும் பூகம்பத்தைத் தூண்டியது என்று நாம் நம்புகிறோம் என்று குறிப்பிட்டார்.
இருப்பினும், சமீபத்திய வரலாற்றில் முழு சந்திர கிரகணங்கள் பல உள்ளன. மற்றும் ஒரு சில தனியான நிகழ்வுகள் மட்டுமே குறிப்பிடத்தக்க பூகம்ப நடவடிக்கைகளுடன் இருந்தன. நிலநடுக்கத்தை ஏற்படுத்துவதில் சூரியன் – பூமி - சந்திரன் அமைப்பு syzygy என அழைக்கப்படுகிறது. நிலநடுக்கம் ஏறபடுவதற்கு முழு சந்திர கிரகணம் ஒரு மூலகாரணியாக இருக்கலாம். ஆனால், அதற்கான தொடர்பும் உறுதியற்றது.
கொலம்பஸை காப்பாற்றிய சந்திர கிரகணம்
கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய நிலப்பரப்பை தேடிச் சென்றபோது, சிறந்த ஜெர்மன் வானியலாளரான ஜோஹன்னஸ் முல்லர் வான் கோனிக்ஸ்பெர்க் எழுதிய வானியல் நாள்காட்டியை அவருடன் கொண்டு சென்றார். இது அவரது லத்தீன் புனைப்பெயரான ரெஜியோமண்டனஸால் அறியப்பட்டது. இந்த வானியல் நாட்காட்டி 1475-1506 ஆண்டுகளை உள்ளடக்கியது. ரெஜியோமண்டனஸின் வானியல் நாட்காட்டி வரவிருக்கும் சந்திர கிரகணங்களை பட்டியலிட்டுள்ளது.
கொலம்பஸ் மே 1502 ஆம் ஆண்டு தொடங்கிய தனது மூன்றாவது மற்றும் இறுதி பயணத்தில், 1503 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஜமைக்கா தீவில் அவரது கப்பல் விபத்துக்குள்ளானது. மேலும், அவர் தனது குழுவினருக்கு உணவு மற்றும் தண்ணீரை வழங்க மறுத்த உள்ளூர் பூர்வீக மக்களுடன் பிரச்னையில் சிக்கினார். பிப்ரவரி 29, 1504 ஆம் ஆண்டு மாலை சூரிய உதயத்திற்குப் பிறகு சந்திரனின் மொத்த கிரகணம் எதிர்பார்க்கப்படுகிறது என்பதை கொலம்பஸ் ரெஜியோமண்டனஸின் வானியல் நாட்காட்டியில் இருந்து அறிந்திருந்தார். எனவே சந்திரனின் ஒளியை தவிர்க்கும்படி அவர் பூர்வீக மக்களை அச்சுறுத்தினார்.
கிரகணம் முன்னேறும்போது, பயந்துபோன பூர்வீக வாசிகள் கொலம்பஸுக்கு உதவ ஒப்புக்கொண்டனர். அவருக்கு முழு சந்திர கிரகணம் எப்போது முடிவடையும் என்று தெரிந்ததால், சந்திரன் எப்போது மீண்டும் தோன்றும் என்று கொலம்பஸ் பூர்வீகவாசிகளிடம் கூறினார். அவர் அங்கே நிலவை மீண்டும் கொண்டுவந்ததாக கருதியதால், அதன்பிறகு அவருக்கு பூர்வீகவாசிகளுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை.
வினோதமான செலினிலியன்ஸ்
சூரியன் மற்றும் கிரகண சந்திரன் இரண்டையும் ஒரே நேரத்தில் கவனிக்கும்போது, நமக்கு ஒரு "செலினிலியன்" அல்லது "செலினெலியன்" பார்க்க கிடைக்கும். இது சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்பு அல்லது சூரிய உதயத்திற்குப் பிறகு நிகழக்கூடும். இரு கோள்களும் அடிவானத்திற்கு மேலே வானத்தில் கிட்டத்தட்ட எதிர் புள்ளிகளில் தோன்றும். பூமி சூரியனுக்கும் கிரகண சந்திரனுக்கும் இடையில் நேரடியாக நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும், வானத்தில் இரண்டையும் பார்ப்பது ஒரு வடிவியல் சாத்தியமற்றது என்றாலும், பூமியின் வளிமண்டலத்தின் வழியாக ஒளிவிலகலால் இரு கோள்களும் அவற்றின் உண்மையான வடிவியல் நிலையை விட வானத்தில் உயர்ந்ததாகத் தோன்றுவதால் இது சாத்தியமாகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.