மனிதக் கழிவை மனிதனே அகற்றுதல் என்னும் தொழில்முறை அதிகாரப்பூர்வமாக தடை செய்யப்பட்ட ஒன்று. டிசம்பர் 6, 2013 முதல் அனைத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் இந்த தடை அமலில் உள்ளது.
கையால் கழிவுகளை அகற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை, 2013-2014 முதல் 2020 ஜனவரி 31 வரை 13 மாநிலங்களில் நகராட்சிகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் மொத்தம் 14,559 பேர் பணியாற்றுவதாக அடையாளம் காணப்பட்டனர். இது தவிர, 18 மாநிலங்களில் 194 மாவட்டங்களில் ஒரு தேசியக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, அதில் கடந்த மாதம் (ஜனவரி 31 வரை) 48,345 பேர் கையால் கழிவகற்றும் பணியாளர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர். மக்களவையில் எழுப்பப்பட்ட எம்.பி.க்களின் கேள்விகளுக்கு மத்திய சமூக நலத்துறை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இந்த பதிலை அளித்திருக்கிறார். இதற்கான புள்ளிவிவரம் துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் (National Commission for Safai Karamcharis) மூலம் பெறப்பட்டுள்ளது.
கொரானா வைரஸில் இருந்து தப்பித்துக் கொண்டதா ஆப்பிரிக்க நாடுகள்?
ஆணையக் குழுவின் அறிக்கைகளின்படி, கடந்த ஒவ்வொரு ஆண்டும் பாதாளச் சாக்கடையில் மேன் ஹோல் எனப்படும் ஆளிறங்கும் சாக்கடைக்குழியிலோ அல்லது கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணிகளில் விஷவாயு தாக்கியோ தொடர்ந்து மனித உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2020/02/a1403-265x300.jpg)
2018-ல் 68, 2017-ல் 93, 2016-ல் 48, 2015-ல் 57 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐந்து ஆண்டுகளில் கடந்த 2019-ல் மட்டும் மிக அதிக எண்ணிக்கையில், 110 துப்புரவுப் பணியாளர்கள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகள் 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து பதிவாகியுள்ளன.
அமைச்சகம் தாக்கல் செய்துள்ளபடி, செப்டிக் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது இறந்தவர்களின் இறப்பு எண்ணிக்கை 2015 மற்றும் 2019 க்கு இடையில் 376 ஆக உள்ளது.
அசாம் இஸ்லாமியர்களுக்கான சென்சஸ்... எதற்காக நடக்கிறது இந்த கணக்கெடுப்பு?
2019 ஆம் ஆண்டில் உத்தரபிரதேசத்தில் இதுபோன்ற இறப்புக்கள் 21 ஆகவும், குஜராத் (16), தமிழ்நாடு (15), ஹரியானா (14) என்று பதிவாகியுள்ளன.
இதற்கான புள்ளிவிவரம் துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையம் (National Commission for Safai Karamcharis) மூலம் பெறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”