Advertisment

சூரியனை சுற்றும் சிறிய கோளுக்கு இந்திய பாடகரின் பெயரை சூட்டிய சர்வதேச விண்வெளி அமைப்பு

இந்த கோள் விண்வெளியில் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் நடுவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Minor Planet named after Pandit Jasraj

Minor Planet named after Pandit Jasraj

 Amitabh Sinha

Advertisment

Minor Planet named after Pandit Jasraj : இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற பாடகர் பண்டிதர் ஜெஸ்ராஜ் ஆவார். அவருடைய பெயரை விண்வெளியில் இருக்கும் சிறிய கோள் ஒன்றுக்கு சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சூட்டியுள்ளனர். இந்த கோள் விண்வெளியில் செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் நடுவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறு கோள்கள் என்றால் என்ன?

சூரியனை சுற்றும் சற்று பெரிய வடிவிலான பொருள் தான் சிறு கோள்கள் என்று அழைக்கப்படுகிறது. சூரியனின் ஈர்ப்பு விசையால் உள்ளிழுக்கப்பட்டு அதன் வடிவத்தை கோள வடிவமாக மாற்றிக் கொள்ள இயலாது. ஆனால் அவை சூரியனை சுற்றி வரும். அந்த வகையான விண்வெளி பொருட்களுக்கு மைனர் ப்ளானட் அல்லது த்வார்ஃப் ப்ளாண்ட் என்று பெயர். எரிகற்கள், எரி நட்சத்திரங்கள் அல்லது விண்வெளியில் மிதக்கும் ஆப்ஜெட்க்ள் இவ்வாறு அழைக்கப்படுகிறது.

Minor Planet named after Pandit Jasraj : கோள்களுக்கு பெயர் சூட்டுவது எப்படி?

இண்டெர்நேசனல் அஸ்ட்ரோனோமிக்கல் யூனியன் எனப்படும் சர்வதேச அமைப்புகள் தான் கோள்களுக்கு பெயர்களை சூட்டுகின்றன. உலக அளவில் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சியாளர்களை உள்ளடக்கிய இந்த குழு தான் பெயர்களை தேர்வு செய்யும். இது போன்ற கோள்களை முதலில் கண்டுபிடிப்பவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை அவர்களின் பெயர்களை வைத்துக் கொள்ள உரிமை உள்ளது. ஆனால் ஏனோ தானோவென்று விரும்பிய பெயர்களையெல்லாம் வைக்க இயலாது.

புதிதாக ஒரு கோள் கண்டறியப்பட்டால், அதற்கு, அந்த கோள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு, ஏதேனும் இரண்டு ஆங்கில எழுத்துகள் மற்றும் இரண்டு எண்கள் கொண்டு அந்த கோள்களுக்கு பெயர் வைக்கப்பட்டும். ஜெஸ்ராஜீன் பெயர் சூட்டப்பட்ட கோளுக்கு 2006VP32 என்று பெயர் சூட்டப்பட்டிருந்து. இது இடைக்கால பெயராகவே செயல்பட்டது. பின்பு அந்த கோளின் சுற்றுப்பாதை அதன் அமைப்பு போன்றவற்றை அறிந்த பின்பு நிரந்தர எண்கள் அந்த கோளுக்கு வழங்கப்படும். 300128 என்று அந்த கோளுக்கு எண்கள் வழங்கப்பட்டது.

To read this article in English

பெயர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் ?

அனைத்து பெயர்களையும் கோள்களுக்கு வைத்துவிட இயலாது. அதற்கென ஒரு விதிமுறை உள்ளது. 16 எழுத்துகள் அல்லது அதற்கு குறைவான எழுத்துகளை கொண்ட பெயர்கள் பரிந்துரை செய்யப்படலாம். அதே போன்று வன்முறையை தூண்டும் வண்ணமாகவும் பிரச்சனைக்குரிய வகையிலும் அது இருத்தல் கூடாது. ஏற்கனவே உலகில் இருக்கும் புகழ்பெற்ற ஒரு இடம், அல்லது ஒரு விசயத்தில் பெயரையே அதற்உ சூட்டக்கூடாது.

அரசியல் தலைவர்கள் அல்லது ராணுவர தலைவர்கள் அவர்கள் மரணமடைந்த 100 ஆண்டுகளுக்கு பின்பு தான் வைக்கப்படும். விலங்குகள், பறவைகள், செல்லப் பெயர்கள் போன்றவைகள் வைக்கப்படாது.  கோள் கண்டறியப்படும் இடத்தை வைத்தும் பெயர்கள் சூட்டப்படும்.

மேலும் படிக்க : புயல்களுக்கு இப்படித்தான் பெயர் வைப்பார்களா ? அடுத்து உருவாக இருக்கும் 7 புயல்களுக்கு பெயர் தயார் !

Isro Nasa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment