ms dhoni bcci contract indian cricket bcci - பிசிசிஐ ஒப்பந்தத்தில் தோனி இல்லை என்பதற்காக அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஏன் முடிவுக்கு வராது?
அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரையிலான காலக் கட்டத்திற்கான பிசிசிஐ வருடாந்திர ஒப்பந்தத்தில் எம்எஸ் தோனியின் பெயர் விடுபட்டது எதிர்பாராதது அல்ல. இந்தியாவின் முன்னாள் கேப்டன் கடந்த ஆறு மாதங்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறார்.
Advertisment
"பட்டாஸ்" படத்தையும் சுட்டது தமிழ்ராக்கர்ஸ்...
Advertisment
Advertisements
பி.சி.சி.ஐயின் வருடாந்திர ஒப்பந்தங்கள் இந்தியாவுக்காக விளையாடுவோருக்கு மட்டுமே. 2019 உலகக் கோப்பைக்குப் பிறகு தோனி எந்த போட்டி கிரிக்கெட்டிலும் விளையாடியதில்லை. அவர் கடந்த ஓராண்டு ஒப்பந்தத்தில், கிரேடு 'ஏ' (வருடத்திற்கு 5 கோடி) பிரிவில் இருந்தார்.
ஒப்பந்தம் செய்யப்பட்ட வீரர் ஒருவர் காயம் அடையாமல் இருக்கும் பட்சத்தில், எப்படி தொடர்ந்து விளையாடாமல் இருக்க முடியும் என்று முணுமுணுப்புக்கள் பிசிசிஐ வட்டாரத்துக்குள்ளேயே இருக்கின்றன. உலகக் கோப்பைக்கு தோனி முதுகு வலியுடன் தான் சென்றார், அது தொடரின் போது மோசமடைந்தது.
உலகக் கோப்பையின் போது அவருக்கு மணிக்கட்டிலும் காயம் ஏற்பட்டது. ஆனால் ஒரு ஒப்பந்த வீரர் காயத்தில் இருந்து மீண்டு வருவதை தேசிய கிரிக்கெட் அகாடமியில் பரிசோதிக்க வேண்டும். அதற்கு பதிலாக, கெளரவ லெப்டினன்ட் கர்னலாக உள்ள தோனி, உலகக் கோப்பைக்குப் பிறகு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்தின் பாரா ரெஜிமெண்ட்டுடன் இரண்டு வார காலம் பணியில் ஈடுபட்டார்.
விஷயங்களை முன்னோக்கில் பார்க்க வேண்டும்.
தொடர்ந்து விளையாடாத ஒரு வீரருக்கு ஒப்பந்தத்தை பி.சி.சி.ஐ வழங்க முடியாது. அதே நேரத்தில், ஒப்பந்த ரத்து என்பது தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது என்று அர்த்தமில்லை. குறைந்தபட்சம் டி 20 சர்வதேச போட்டிகளில் அவர் களமிறங்கலாம்.
தோனி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து நீண்ட காலத்திற்கு முன்பே ஓய்வு பெற்றவர். அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பைக்கு மூன்று வருடங்கள் உள்ள நிலையில், அவருக்கு நீண்ட கால திட்டம் ஏதுமில்லை. இந்திய அணியின் எதிர்காலமாக கருதப்படும் ரிஷப் பண்ட்டை, பிசிசிஐ தேர்வர்களும், இந்திய அணி நிர்வாகமும் அலங்கரித்து வருகின்றனர்.
இருப்பினும், ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.சி.சி டி 20 உலகக் கோப்பை தொடரும், ஐ.பி.எல் தொடரும் திடீரென தோனிக்கு விஷயங்களை மாற்றும். தோனி தனது வெள்ளை பந்து கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு இன்னும் நேரத்தை குறிக்கவில்லை என்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஒரு தொடரின் நடுவில் தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்தவர் இவர் தான் என்பதை நினைவில் கொள்க. லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கான அவரது முடிவிலும் இதேபோன்ற திடீர் நிலை ஏற்பட்டது.
ரிஷப் பண்ட் தன்னை நிலைப்படுத்த நேரம் எடுத்துக் கொள்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் ஒரு கேட்சைத் தவறவிடும் போதும், ஸ்டம்பிங்கில் தடுமாறும் போதும், தவறான DRS எடுக்கும் போதும் இந்தியாவின் எல்லா இடங்களிலும் எழும் "தோனி, தோனி" எனும் கோஷங்களுக்கு அவர் பழகிவிட்டார்,
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வான்கடேயில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் போது பண்ட் தலையில் பந்து தாக்கிய பிறகு, ஸ்டாண்ட்-இன் க்ளோவ்மேனாக இருந்த கே எல் ராகுல் கூட "தோனி, தோனி" எனும் கோஷங்களை எதிர்கொண்டார்.
இந்தியா ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நியூசிலாந்தில் ஐந்து டி 20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. சவாலான நியூசிலாந்து சூழ்நிலை, ரிஷப் பண்ட்டிற்கு சோதனையாக இருக்கும். ஒருவேளை அவர் தோல்வி அடைந்தால், அது தோனியின் வருகைக்கான கூச்சலை அதிகரிக்கும்.