நியூயார்க் டைம்ஸ், ஆலிஸ் கால்ஹான் மற்றும் டானா ஜி. ஸ்மித்
நினைவாற்றல் இழப்பைத் தடுக்கும் வகையில், வயதானவர்களுக்கு மல்டிவைட்டமின்களின் சாதகமான நன்மைகள் குறித்து சமீபத்திய ஆய்வு கண்டறிந்தது. ஆனால், சில நிபுநர்கள் இந்த கண்டுபிடிப்புகள் ஒப்பீட்டளவில் மிதமானவை என்று பரிந்துரைக்கின்றனர். அனைவரும் மல்டிவைட்டமின்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை.
ஆங்கிலத்தில் படிக்க: What we know about multivitamins and memory
இரண்டு வருடங்கள் தினமும் மல்டிவைட்டமின்கள் எடுத்துக் கொண்ட பெரியவர்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மற்ற மருந்துகளை எடுத்தவர்களை விட நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் சோதனைகளில் அதிக மதிப்பெண் பெற்றதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது - ஊட்டச்சத்து இணை உணவு உண்மையில் ஆரோக்கியமான மக்களுக்கு பயனளிக்கும் என்பது இந்த மருத்துவப் பரிசோதனையின் அரிய எடுத்துக்காட்டு.
"முதியோர்களின் அறிவாற்றல் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான மல்டிவைட்டமின்கள் பாதுகாப்பான, மலிவு மற்றும் அணுகக்கூடிய அணுகுமுறையாக இருக்கும் என்று இது அறிவுறுத்துகிறது" என்று அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் ஆய்விதழில் பாஸ்டனில் உள்ள மாஸ் ஜெனரல் ப்ரிகாமின் மனநோய் தொற்றுநோய் நிபுணரும், இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியருமான டாக்டர் சிராக் வியாஸ் கூறினார்.
ஆனால் விசாரணையில் ஈடுபடாத நிபுநர்கள் இந்த நன்மைகள் சிறிய அளவிலானவை என்று எச்சரித்தனர். மேலும், அவை மக்களின் வாழ்க்கையில் உறுதியான முன்னேற்றங்களுக்கு மாறும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. “நான் இதை நம்பிக்கைக்குரிய இடத்தில் வைப்பேன், ஆனால் நான் அதை முடிவாக எடுத்துச் செல்லமாட்டேன்" என்று மினசோட்டா பல்கலைக்கழகத்தின் பொது சுகாதாரத்தின் இணை பேராசிரியரான மேரி பட்லர் கூறினார், அவர் ஞாபகமறதியைத் தடுப்பதற்கான தலையீடுகளை மதிப்பீடு செய்யும் பல ஆவணங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆய்வு என்ன கண்டுபிடித்தது?
21,000 க்கும் மேற்பட்ட வயதான பெரியவர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய சோதனையின் ஒரு பகுதியாக இந்த ஆராய்ச்சியானது வயது தொடர்பான பல நோய்களுக்கு எதிராக இணை உணவுகளால் பாதுகாக்க முடியுமா என்ற கோகோ சப்ளிமெண்ட் மற்றும் மல்டிவைட்டமின் விளைவு ஆய்வு (COSMOS) என்று அழைக்கப்பட்டது. புதிய அறிக்கையானது 573 பங்கேற்பாளர்களின் - பெரும்பாலும் வெள்ளையர்கள் மற்றும் ஒப்பீட்டளவில் நன்கு படித்தவர்கள் - பல அறிவாற்றல் சோதனைகளை நேரில் எடுத்தவர்களின் முடிவுகளை உள்ளடக்கியது.
மல்டிவைட்டமின் மற்றும் மற்ற மருந்துகளை எடுத்துக்கொண்டவர்களின் குழுக்களில் உள்ளவர்கள் இரண்டு ஆண்டுகளில் தங்கள் அறிவாற்றல் மதிப்பெண்களை மேம்படுத்தினர். ஒருவேளை அவர்கள் ஏற்கனவே சோதனைகளை நன்கு அறிந்திருக்கலாம். ஆனால், மல்டிவைட்டமின் எடுத்துக் கொண்ட பங்கேற்பாளர்கள், நினைவக மதிப்பீடுகளில் மிகப்பெரிய எதிர்பாராத உயர்வு வந்ததுடன், சற்று அதிக பலனைக் காட்டினர்.
5,000 க்கும் மேற்பட்ட நபர்களின் அறிவாற்றலை தொலைபேசி அல்லது ஆன்லைனில் சோதித்த இரண்டு முந்தைய COSMOS கேள்விகளின் முடிவுகளுடன் அந்த கண்டுபிடிப்புகளையும் இந்த ஆய்வு தொகுத்தது. மூன்று ஆய்வுகளில், மல்டிவைட்டமின்களை உட்கொண்டவர்கள், மற்ற மருத்துகளை எடுத்துக்கொண்டவர்களுடன் ஒப்பிடும்போது, நினைவாற்றல் மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் திறன் சோதனைகளில் தங்கள் மதிப்பெண்களில் சீரான முன்னேற்றம் அடைந்துள்ளனர் என்று இந்த விசாரணைகள்ன் ஆய்வாளரும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரும் இணை முதல்வருமான டாக்டர் ஜோஆன் மேன்சன் கூறினார்.
மல்டிவைட்டமின் உட்கொள்ளும் நபர்களின் நினைவாற்றல் அதிகரிப்பு மூளை வயதானதை இரண்டு வருடங்கள் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். அதாவது அவர்கள் கோட்பாட்டளவில் இரண்டு வயது இளையவரை பரிசோதித்தனர் என்று வியாஸ் கூறினார்.
இது சரியானதா?
இந்த ஆய்வில் ஈடுபடாத நிபுநர்கள், இந்த ஆய்வு நன்கு வடிவமைக்கப்பட்டதாகக் கூறினர்: இதில் அதிக எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்கள் இருந்தனர், புகழ்பெற்ற அறிவாற்றல் சோதனைகள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், கண்டுபிடிப்புகள் "ஒப்பீட்டளவில் மிதமானவை" என்று தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உள்ள கெக் ஸ்கூல் ஆஃப் மெடிசின் நரம்பியல் இணைப் பேராசிரியரான டாக்டர் ஹுசைன் யாசின் கூறினார். மல்டிவைட்டமின் மூலம் சிலர் உண்மையிலேயே பயனடைந்திருக்கலாம் என்றாலும், பெரும்பான்மையானவர்கள் அவ்வாறு பயனடையவில்லை என்று அவர் கூறினார்.
மல்டிவைட்டமின் அறிவாற்றல் முதுமையை இரண்டு ஆண்டுகள் குறைக்கும் என்று யாசின் மேலும் கூறினார். இந்த முடிவுக்கு வர, ஆராய்ச்சியாளர்கள் மல்டிவைட்டமின் குழுவின் செயல்திறனை வயது அடிப்படையில் சராசரி சோதனை மதிப்பெண்களுடன் ஒப்பிட்டனர். யாசின் அந்த நுட்பத்தில் சிக்கலை எடுத்து, இந்த விளக்கத்தை "தவறாக வழிநடத்தும்" என்று கூறினார்.
பாஸ்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் ஹெல்த் அலையன்ஸில் சப்ளிமெண்ட்ஸ் (இணை உணவுகள் குறித்து) படிக்கும் இன்டர்னிஸ்ட் டாக்டர். பீட்டர் கோஹன் மேற்கோள் காட்டிய முதன்மைக் கவலையும் அந்தக் கணக்கீடுதான். மல்டிவைட்டமின்களை உட்கொள்வதில் அளவிடப்படும் நுட்பமான முன்னேற்றங்கள் அர்த்தமுள்ளதாக இருக்குமா என்பது தெளிவாக இல்லை என்று அவர் கூறினார். மல்டிவைட்டமின்களை உட்கொள்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் அல்சைமர் நோயால் கண்டறியப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு அல்லது நீண்ட காலம் சுதந்திரமாக வாழ முடியும் என்று சோதனையில் கண்டறியப்பட்டால் அது மிகவும் உறுதியானதாக இருக்கும், என்றார்.
மல்டிவைட்டமின்கள் பற்றிய கூடுதல் ஆராய்ச்சி தேவை என்று மேன்சன் ஒப்புக்கொண்டார், குறிப்பாக இன, மரபு மற்றும் சமூகப் பொருளாதார பன்முகத்தன்மை கொண்ட குழுக்களில் கூடுதல் ஆராய்ச்சி தேவை. பின்தொடர்ந்து ஆய்வுகள் சப்ளிமெண்ட்ஸிலிருந்து யார் பயனடைந்தனர் மற்றும் ஏன் என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று யாசின் மேலும் கூறினார். எடுத்துக்காட்டாக, வைட்டமின் பி 12, வைட்டமின் டி மற்றும் துத்தநாகம் போன்ற மூளை ஆரோக்கியத்திற்கு முக்கியமான சில ஊட்டச்சத்துக்களை முன்பு போதுமான அளவு உட்கொள்ளாதவர்களால் பலன் உந்தப்பட்டிருக்கலாம்.
“எல்லாரும் மல்டிவைட்டமின் எடுக்க வேண்டும் என்று முடிவெடுப்பதற்குப் பதிலாக, மல்டிவைட்டமின்களை உட்கொள்வதால் யார் பயனடைகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்று யாசின் கூறினார்.
இந்த ஆய்வால் என்ன உதவ முடியும்?
மல்டிவைட்டமின்கள் சில நபர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், அதாவது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் திறனை பாதிக்கும் நிலைமைகள் உள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கோஹன் கூறினார். ஆனால், பெரும்பாலான ஆரோக்கியமான மக்களுக்கு இது தேவையில்லை. “இந்த தரவுகளின் அடிப்படையில் நினைவாற்றலை மேம்படுத்த மல்டிவைட்டமின்களை நான் பரிந்துரைக்கப் போவதில்லை” என்று அவர் கூறினார்.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் மற்றும் சாக்லேட் தயாரிப்பாளர் மார்ஸ் இன்க் நிதியளித்த COSMOS ஆய்வு, முதலில் மல்டிவைட்டமின்கள் அல்லது கோகோ ஃபிளாவனால்கள் கொண்ட சப்ளிமெண்ட்ஸ் இதய நோய் அல்லது புற்றுநோய் அபாயத்தை பாதிக்குமா என்பதைப் பார்க்க வடிவமைக்கப்பட்டது. ஆனால், இந்த சோதனையானது இணை பொருட்களில் சிறிய பலனைக் கண்டது.
மல்டிவைட்டமின்கள் அறிவாற்றலை மேம்படுத்தவில்லை அல்லது மறதியைத் தடுக்கவில்லை என்று மற்ற ஆய்வுகள் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, 12 ஆண்டுகளாக கண்காணிக்கப்பட்ட கிட்டத்தட்ட 6,000 ஆண் மருத்துவர்களின் சோதனையில், மல்டிவைட்டமின் எடுத்துக் கொண்டவர்கள், வழக்கமான மற்ற மருந்துகள் எடுத்தவர்களை விட அறிவாற்றல் அல்லது நினைவாற்றல் சோதனைகளில் சிறப்பாக செயல்படவில்லை.
இருப்பினும், ஆரோக்கியமான உணவு மற்றும் பிற வாழ்க்கை முறை தலையீடுகள் மூளைக்கு பயனளிக்கும் என்பதை ஆராய்ச்சி தொடர்ந்து கண்டறிந்துள்ளது. சிகாகோவில் உள்ள ரஷ் யுனிவர்சிட்டி மருத்துவ மையத்தின் ஊட்டச்சத்து தொற்றுநோயியல் நிபுணர் பூஜா அகர்வால், புதிய கண்டுபிடிப்புகளை "ஊக்கமளிக்கிறது" என்று கூறினார். ஆனால், “இந்த உணவு அணுகுமுறைகள் மூலம் நமது ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடிந்தால், அதுவே முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த கட்டுரை முதலில் நியூயார்க் டைம்ஸில் வெளியானது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.