Liz Mathew
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாகவும் பீகாரில் தேர்தல் முடிவுகள் வெளியாக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். பாஜக, பீகாரில் அமைக்கப்பட்டிருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஜூனியராக இருந்தாலும் தேர்தல் முடிவுகளின் போது நிச்சயமாக பெரும்பான்மை பெற்றிருக்கும். மதியம் 1:20 மணி அளவில் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தில் வெளியான தகவலின்படி பாஜக போட்டியிட்ட 110 தொகுதிகளில் 73 இடங்களில் முன்னணி வகிக்கிறது.
ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட 115 தொகுதிகளில் 48 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைகிறதோ இல்லையோ பாஜக நிதிஷ் குமாரை ஓரம் கட்டுவதில் வெற்றியடைந்துள்ளது. இந்த கூட்டணி வெற்றிபெற்றால், எந்த கட்சியினர் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதை கருத்தில் கொள்ளாமல் நிதிஷ்குமார் முதல்வராக பணியாற்றுவார் என்று பாஜக குறிப்பிட்டிருந்தது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க
எல்.ஜே.பி. மீதான பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியின் பதட்டத்தை தேர்தல் முடிவுகள் அதிகரித்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் வாக்குகளை பிரிக்க சிராக் பஸ்வான் பயன்படுத்தப்படுகிறாரா என்று அக்கட்சி சந்தேகம் கொண்டிருந்தது. சிராக் தொடர்ச்சியாக நிதீஷை விமர்சனம் செய்து கொண்டிருந்தார்.
பாஜகவினர் ஒரு பகுதியினர் நிதீஷின் அதிகப்படியான அதிகாரங்களுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டே இருந்தனர். குறிப்பாக மோடியின் வருகையின் போது. நிதீஷின் புகழ் குறைந்து வருவதால், கட்சிக்கு இரண்டாம் நிலை தலைமை இல்லாததால், ஜே.டி (யூ) சிதைந்துவிடும் என்று இவர்கள் நம்புகின்றனர். ஜே.டி.யூவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்கள் விரைவில் பாஜகவிற்கு திரும்புவார்கள் என்றும் இவர்களில் சிலர் நம்புகின்றனர்.
மேலும் படிக்க : நிதிஷ் குமாரை முதல்வராக பாஜக ஏற்கிறதா?
மாநிலங்களில் வலுவான கூட்டணி கட்சிகளை பலவீனப்படுத்துவது எப்போதுமே தேசிய கட்சிகள் பின்பற்றும் ஒரு தந்திரமாகும். மகாராஷ்டிராவில் சிவசேனாவுக்கு எதிராகவும், பஞ்சாபில் அகாலிதளத்திற்கு எதிராகவும் பாஜக ஆதிக்கம் செலுத்த முயன்றது, இறுதியில் இருவரும் கூட்டணியை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியது.
எவ்வாறு இருப்பினும் பாஜக ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் தொடர்ந்து கூட்டணியில் இருக்கும். மேற்கு வங்கம், அஸ்ஸாம், தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வர இருக்கும் சட்டசபைத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு மற்றொரு கூட்டணி கட்சியை இழக்க முடியாது என்ற முடிவை எடுத்துள்ளது பாஜக. நம்பகமான கூட்டணி கட்சி பாஜக கிடையாது என்ற விமர்சனத்தை சமாளித்து வர நிதிஷ் குமாரை முதல்வர் பதவியில் வைத்திருப்பது அக்கட்சிக்கு உதவும் என்று நம்புகிறது பாஜக.
மேலும் படிக்க : பீகார் தேர்தல் முடிவுகள் 2020 : சரிவில் இருந்து மீண்ட இடதுசாரிகள்; 20 இடங்களில் முன்னிலை
பிரதமரை பொறுத்தவரை இது இரட்டை வெற்றியாக கருதப்படுகிறது. இந்தி பேசும் மாநிலங்களில் பீகாரில் பாஜகவின் வெற்றியானது, அடுத்து நடைபெற இருக்கும் தேர்தல்களுக்கு ஒரு ஊக்கமாக அமைவதோடு, இதற்கு முன்பு ஜார்கண்ட், டெல்லி மற்றும் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் அடைந்த தோல்வியில் இருந்து மீள உதவுகிறது. கோவிட்19, பொருளாதார நெருக்கடி மற்றும் சீனாவுடனான எல்லை நிலைப்பாடு என்று பல்வேறு பிரச்சனைகள் இருந்தபோதிலும், மோடியின் புகழ் அப்படியே உள்ளது என்ற பாஜகவின் கூற்றையும் இது பலப்படுத்தும்.
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”