NRC excludes 19 lakhs people : ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி இறுதியாக தேசிய குடியுரிமை பதிவேட்டில் இடம் பெற்ற மக்கள் குறித்தும் அதன் இடம் பெறாதவர்கள் குறித்தும் அறிக்கைகள் வெளியாகியது. அந்த பட்டியலில் மொத்தம் 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 நபர்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இது ஜூலை மாதம் 2018 ஆம் ஆண்டு வெளியான தேசிய குடியுரிமை பதிவேட்டில் இடம் பெறாத மக்களின் எண்ணிக்கையில் பாதியே என பாஜக வருத்தம் தெரிவித்திருந்தது.
அவர்கள் அப்படிக் கூறுவதற்கான காரணம் என்ன? 19 லட்சம் மக்கள் என்பது மிகவும் குறைவான மதிப்பீடாக ஏன் கணக்கிடப்படுகிறது என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை. என்.ஆர்.சி விவகாரம் டிசம்பர் மாதம் 2014ம் ஆண்டு, 17ம் தேதி Assam Sanmilita Mahasangha & Ors vs Union Of India & Ors case என்ற வழக்கின் தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் வெளியிட்ட பின்பே சூடு பிடிக்கத் துவங்கியது.
NRC excludes 19 lakhs people : அசாமில் மட்டும் 40 லட்சம் வெளிநாட்டினர்
அந்த தீர்ப்பின் 13வது பத்தியில், 1998ம் ஆண்டு அசாமின் அன்றைய கவர்னராக இருந்தார் லெஃப்டினண்ட் ஜெனரல் எஸ்.கே சின்ஹா அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர் நாராயணனிடம் சமர்ப்பித்த அறிக்கையை மேற்கோள் காட்டியிருந்தது. அசாம் மாநிலத்தில், வங்கத் தேசத்தில் இருந்து புலம் பெயர்ந்து தஞ்சம் புகும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் சொந்த மண்ணிலேயே அசாம் பூர்வ குடிகள் சிறுபான்மையினராக மாறி வருகின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் பொது வாழ்க்கை ஆகிய இரண்டும் இந்த புலம் பெயர்தலால் பெரிதும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் என்று எஸ்.கே.சின்ஹா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
வீடியோ 103 வயது டெக்கி யூத் இவர் தான்...
தற்போதைய அசாம் மாநில முதல்வர் சர்பானந்த சோனாவால் பதிவு செய்யப்பட்ட வழக்கின் சாராம்சங்களும் அந்த தீர்ப்பில் மேற்கோள் கட்டப்பட்டன. சின்ஹாவின் அறிக்கையில், 1997ம் ஆண்டு உள்த்துறை அமைச்சாரக இருந்த இந்திரஜித் குப்தா பாராளுமன்றத்தில் உரையாடிய அம்சங்களையும் இணைத்திருந்தார். “ இந்தியா முழுவதும் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவில் வசித்து வருகின்றனர் என்று பேசியதை குறிப்பிட்டிருந்தார். மேலும் இந்தியா டுடே இதழின், 1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாத பதிப்பில் இடம் பெற்றிருந்த முக்கிய கட்டுரை ஒன்றையும் இணைத்திருந்தார். அதில் 40 லட்சம் வெளிநாட்டினர் சட்டத்திற்கு புறம்பாக அசாமில் குடியேறியுள்ளனர் என்று பிரசுரிக்கப்பட்டிருந்தது.
மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில், வங்கதேசத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக குடியேறுபவர்கள் பற்றி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, உள்துறை அமைச்சகம் வெளியிட்ட பதில் ஒன்றையும் மேற்கோள் காட்டியிருந்தது. அதன்படி 2001ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் மட்டும் சுமார் 1.20 கோடி வங்கதேசவாசிகள் சட்டத்திற்கு புறம்பாக குடிபெயர்ந்துள்ளனர் என்றும் அதில் 50 லட்சம் நபர்கள் அசாமில் இருக்கின்றார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் 31ம் தேதி, பாஜக தலைவர் ரஞ்சித் தாஸ் கூறுகையில், 1991ம் ஆண்டு, அசாமின் முதல்வராக இருந்த ஹித்தேஸ்வர் சாய்க்கியா “அசாமில் மொத்தம் 30 லட்சம் வங்கதேசத்தினர் வாழ்கின்றனர்” என்று கூறியதையும், காங்கிரஸ் மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் ராஜ்யசபையில் ”42 லட்சம் வங்கதேசத்தினர் சட்டத்திற்கு புறம்பாக அசாமில் வாழ்ந்து வருகின்றனர்” என்று கூறியதையும் மேற்கோள் காட்டி, எப்படி 19 லட்சம் நபர்கள் என்பதை கணக்கில் கொள்ள இயலும் என்று கேள்வி எழுப்பினார். இது போன்ற காரணங்களால் தான் அசாமில் 19 லட்சம் வெளிநாட்டினர் என்ற கணக்கு மிகவும் குறைவானதாக இருக்கின்றது என பா.ஜ.க வருந்தியது.