Advertisment

ஒரே நேரத்தில் நடத்தப்படும் தேர்தல்களால் என்ன பலன்?

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற கொள்கைக்கு வழி வகுப்பதாக இருக்கின்றது - யோகேந்திர யாத்வ், ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
One Country, One Election, Narendra Modi Idea

One Country, One Election, Narendra Modi Idea

Pradeep Kaushal

Advertisment

One Country, One Election, Narendra Modi Idea : இரண்டாவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்ட நரேந்திர மோடி, கடந்த வாரம் ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார். 'ஒரே நாடு, ஒரே தேர்தல்’  - என்ற கொள்கையின் மூலம் ஏற்படும் சாதக பாதகங்களை அறிய கமிட்டி ஒன்று உருவாக்கப்படும் என்றும், அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகள் அதில் கேட்டறியப்படும் என்றும் கூறினார். ஆனால் இன்று வரை பல்வேறு கட்சியினரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணமே உள்ளனர்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன ?

இரு தரப்பில் இருந்தும் மாற்றுக் கருத்துகள் வந்த வண்ணமே உள்ளன. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டால் தேர்தல் பணிகளுக்கான செலவுகள் குறைக்கப்படும், அனைத்து தேர்தல்களும் ஒரே நேரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட்டுவிடும். ஒரு நேரத்தில் ஒரு மாநிலத்தில் தேர்தல், சிறிது காலம் கழித்து மற்றொரு மாநிலத்தில் தேர்தல் என்று அறிவிக்கப்படுவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கான காலம் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடும். அதனால் புதிய திட்டங்களை அறிமுகம் செய்வதற்கும் செயல்படுத்துவதற்கும் கால தாமதம் ஆகின்றது என்று கருதுகின்றனர்.

எதிர்தரப்பு வாதம் என்ன?

எதிர்தரப்பினர், இது போன்ற மிகப்பெரிய தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தினால், ஏற்படும் குழப்பங்களை முன் வைக்கின்றனர். மேலும் தேசிய அளவில் செல்வாக்கு பெற்றிருக்கும் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் மட்டுமே அதிகரிக்கும் தவிர பிராந்திய கட்சிகளின் வெற்றி என்பது கேள்விக் குறிதான். மேலும் இது நடைமுறைக்கு வந்தால், ஆட்சிகாலம் முடிவிற்கு வரும் முன்பே பல்வேறு மாநிலங்களில் ஆட்சி கவிழும் என்று கூறுகின்றனர்.

மாநில அரசுகளை விடுங்கள். ஆனால் மத்திய அரசுகள் கவிழ்வதற்கான வாய்ப்புகளும் இதில் அதிகம் என்கின்றனர். 17 நாடாளுமன்ற அமர்வில் 7 முறை, முழுமையான ஆட்சிக்கு முன்பே ஆட்சி கலைக்கப்பட்டது. 1971, 1980, 1984, 1991, 1998, 1999, மற்றும் 2004. இப்படியான சூழல் மீண்டும் உருவானால் அதற்கு ஏற்றார் போன்று மீண்டும் மீண்டும் தேர்தல் நடத்த முடியுமா என்று கேள்வி எழுப்புகிறார்கள். மேலும் தற்போது உபயோகத்தில் இருக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வீபேட்கள் போல் இரண்டு மடங்கு இயந்திரங்கள் தேவைப்படும்.

சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக எப்போது தேர்தல் நடத்தப்பட்டது ? சட்டமன்ற தேர்தல்களும், நாடாளுமன்ற தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதா?

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் 1952 மற்றும் 1957ல் இந்தியா முழுவதும் நடத்தப்பட்டது. காங்கிரஸ் இரண்டு இடங்களிலும் மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் இந்த தொடர்ச்சி கேரளத்தில் முறிந்தது. 1957ம் ஆண்டு கம்யூனிஸ்ட் தலைமையில் கேரளாவில் ஆட்சியைப் பிடித்தார் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத். சட்டம் 356 - உதவியின் படி மாநில அரசை கலைத்து உத்தரவிட்டது மத்திய அரசு. அதனைத் தொடர்ந்து கேரளாவில் 1960ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறையத் துவங்க, அதன் தாக்கம் பிகார், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், பஞ்சாப், ஒரிசா, மெட்ராஸ், மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் ஏற்பட்டது. அங்கு 1967ம் ஆண்டு தேர்தல்கள் நடத்தப்பட்டன. அதே நேரத்தில் பாரதிய க்ராந்தி தளம், எஸ்.எஸ்.பி., பி.எஸ்.பி, ஸ்வந்திரா கட்சி, ஜன சங்கம் ஆகிய கட்சிகள் இணைந்த மத்தியில் சம்யுக்த விதயக் தளம் ஆட்சியை பிடித்தது. ஆட்சி கலைக்கப்படுதலும், மறுதேர்தல்களும் அன்றைய சூழல்களில் நடைமுறையாகவே மாறிவிட்டது.  தற்போது நடைபெற்ற தேர்தலில், நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்களும் நடத்தப்பட்டன.

முழுமையாக நடைபெறும் சட்டமன்றங்கள்

சட்டமன்றங்கள் கலைக்கப்படுதல் என்பது மிகவும் அரிதாகி வருகின்றன. அதற்கு காரணம் கட்சித்தாவல் தடைச்சட்டமாகும். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, 1985ல் 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது. மேலும் சட்டம் 356ம் ஒரு காரணம். பாராளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ஒரு குடியரசுத் தலைவராலும் கூட சட்டமன்றத்தினை கலைக்க இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்பு இந்த திட்டம் நிறைவேற்ற திட்டம் மேற்கொள்ளப்பட்டதா ?

1983ம் ஆண்டு தேர்தல் ஆணையம் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முயற்சி செய்ததது. 1999ம் ஆண்டு நீதிபதி பி.பி. ஜீவன் ரெட்டி தலைமையில் அமைக்கப்பட்ட நீதி ஆணையத்தின் 170வது அறிக்கையில், நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட காலத்திற்கு நாம் திரும்பிப் போக வேண்டும் என்று பொருள்படும் தொணியில் குறிப்பிட்டிருக்கிறார்.

2003ம் ஆண்டு அடல் பிஹாரி வாஜ்பாய் இந்த திட்டத்தை செயல்படுத்த சோனியா காந்தியுடன் ஆலோசனைகள் நடத்தினார். ஆனால் அந்த திட்டம் பின்பு அப்படியே கைவிடப்பட்டது. 2010ம் ஆண்டு பாஜக தலைவர் எல்.கே. அத்வானி, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் நிதி அமைச்சர் ப்ரனாப் முகர்ஜியை சந்தித்துவிட்டு வந்து பின்பு தன்னுடைய ப்ளாக்கில், இந்த இருவரும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொள்கைகளுக்கு ஆதரவாகவே இருக்கின்றார்கள் என்று கூறினார். மேலும் இந்தியாவில் ஒவ்வொரு இரண்டுகளுக்கு ஒரு முறையும் ஒரு குட்டி நாடாளுமன்ற தேர்தலையே இந்தியா அனுபவிக்கும் நிலை ஏற்படுகிறது. இது மாநில மத்திய அரசுகளுக்கு கேடு விளைவிப்பதாகவே இருக்கிறது என்றும் எழுதியுள்ளார்.

இது தொடர்பான முழுமையான கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பு நிலை எப்படி இருக்கிறது?

ஆட்சிக்கு வந்த பிறகு, 2015ம் ஆண்டில், ஈ.எம். சுதர்சன நாட்சியப்பன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டு அதில் 'Feasibility of Holding Simultaneous Elections to House of People (Lok Sabha) and State Legislative Assemblies' என்ற தலைப்பின் கீழ் அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டன.

அதில் இரண்டு தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தபட்டால் செலவுகள் குறையும், தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்கள் குறைக்கப்படும், தேவையான பொருட்களை கொண்டு சேர்ப்பதில் கொடுக்கப்படும் அழுத்தம் குறையும், தேர்தல் வேலைகளில் ஈடுபடுத்தப்படுபவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வேலைபளு குறையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸோமாட்டோவில் ஆர்டர் செய்தால் இனிமேல் ஃபுட் டெலிவரி ட்ரோனில் தான்

ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்ததுடன் இது ஒருசார்பானது மற்றும் பயன் அளிக்காதது என்று கூறினர். திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு, இது ஜனநாயகத்திற்கு புறம்பானது என்றும், சி.பி.எம். கட்சி இது நடைமுறையில் நிறைய சிக்கல்களை உருவாக்கும் என்றும் கூறினர்.

2017ம் ஆண்டு, பாராளுமன்ற கூட்டத்தொடரில், ப்ரனாப் முகர்ஜி பேசுகையில், தொடர்ந்து தேர்தல்கள் நடத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள், மக்கள் வளம் வீணாகுதல் போன்றவற்றை மேற்கோள் காட்டி பேசினார்.

நிதி ஆயோக்கின் பிபெக் தேப்ராய் மற்றும் கிஷோர் தேசாய் ஆகிய குறிப்பிடுகையில், 2009ம் ஆண்டு தேர்தலின் போது 1,115 கோடி ரூபாய் கருவூலத்தில் இருந்து செலவிடப்பட்டது என்றும் 2014ம் ஆண்டு தேர்தல் செலவானது 3870 கோடி ரூபாய் வரை அதிகரித்தது என்றும் அவர் குறிப்பிட்டனர். மேலும் மொத்த தேர்தலுக்காக செலவிடப்படும் நிதி, தனிநபர் மற்றும் கட்சிகளுக்காக செலவிடப்படும் நிதிகள் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

நீதிபதி பி.எஸ்.சௌஹான் தலைமையிலான நீதி ஆணையத்தின் திட்ட அறிக்கை

ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி, 2018ம் ஆண்டு அன்று ஒரு திட்ட அறிக்கையை வெளியிட்டனர் நீதிபதி பி.எஸ்.சௌஹான் தலைமையிலான நீதி ஆணையம். அதில் தற்போது இருக்கும் இந்திய அரசியல் சாசனத்தை வைத்து ஒரே நேரத்தில் தேர்தல் என்பது சாத்தியமற்றது என்று கூறினார். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற விதிமுறைகள் மற்றும் மக்கள் பிரதிநிதி சட்டம் 1951லும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வரவேண்டும் என்று குறிப்பிட்டார். நம்பிக்கையில்லா தீர்மானம் என்பதிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஆட்சி கவிழும் என்ற நிலை இருப்பதால் அதற்கு பதிலாக constructive vote of no-confidence என்பதை கொண்டு வரலாம் என்றும் அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் துவக்க உரையில் பேசிய குடியரசுத் தலைவர் இந்த தேர்தல்கள் மூலமாக நாட்டுமக்கள் நன்மை அடைவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்படும் பின்விளைவுகள் என்ன ?

தொடர்ந்து எதிர் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் பிராந்திய கட்சிகள் தேசிய கட்சிகளால் ஓரங்கட்டப்படலாம் என்றும், மாநிலக்கட்சிகளுக்கான அங்கீகாரம் என்பது குறையத்துவங்கலாம் என்றும் பலர் கருதி வருகின்றனர். ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஒரே கட்சி, ஒரே தலைவர் என்ற கொள்கைக்கு வழி வகுப்பதாக இருக்கின்றது என்று ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாத்வ் தெரிவித்துள்ளார்.

Narendra Modi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment