Advertisment

விராட் கோலிக்கு அவரது செயல்திறன் தரவுகள் மீது உரிமை உள்ளதா?

ஆனால் நீங்கள் அந்தத் தரவிலிருந்து பணம் சம்பாதிக்கத் தொடங்கும்போது, ​​அங்குதான் பிரச்சனை ஏற்படுகிறது

author-image
WebDesk
New Update
விராட் கோலிக்கு அவரது செயல்திறன் தரவுகள் மீது உரிமை உள்ளதா?

பணம் சம்பாதிக்கலாம் என்று எண்ணுகிறீர்கள் என்றால் அதை எப்படி அனுமதிக்க முடியும்?

Shahid Judge

Advertisment

இங்கிலாந்து முழுவதும் 400 க்கும் மேற்பட்ட கால்பந்து வீரர்கள் ஒன்று சேர்ந்து betting மற்றும் gaming நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். பெட்டிங்கின் போது, அவை சட்டவிரோதமாக வீரர்களின் செயல்திறன் தரவைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்கள் மில்லியன் கணக்கில் வெல்ல உதவி புரிவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த தரவுகள், கால்பந்து போட்டிகளின் பிராட்கேஸ்ட் மூலம் உடனடியாக கிடைத்தாலும், தனிப்பட்ட வீரர்களின் பாதுகாக்கப்பட்ட சொத்தாக கருதப்படுகிறது. ஆனால், வீரர்களின் அனுமதியின்றி இந்த தகவல்கள் சூதாட்டக்காரர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.

வழக்கு எதைப்பற்றியது?

பல ஆண்டுகளாக, பந்தயம் மற்றும் கேமிங் நிறுவனங்கள் வீரர்கள் மற்றும் அவர்களின் செயல்திறனைப் பற்றிய தகவல்களை வைத்திருக்கின்றன, மேலும் விளையாட்டின் குறிப்பிட்ட அம்சங்களான வேகம், தேர்ச்சி, துல்லியம் போன்றவற்றில் அவற்றை மதிப்பீடு செய்கின்றன. எனினும், இந்த செயல்திறன் தகவல், தனிப்பட்ட வீரருக்கு சொந்தமானது, மற்றும் வீரரின் சம்மதத்துடன் மட்டுமே பகிர முடியும். ஆனால், இப்போது அவ்வாறு இது செய்யப்படவில்லை.

லெஃப்ட்-ல வுட்டா ரைட்-ல திரும்பிக்கும் – யுவராஜின் ‘டாப் 4’ லெஃப்ட் ஹேண்ட் லெஜண்ட்ஸ்

இந்தத் தரவில் என்ன உள்ளது?

"The data in question is the performance data" என்று இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சட்ட நிறுவனமான எலியாஸ் பார்ட்னர்ஷிப்பின் இயக்குனர் ரிச்சர்ட் டட்டன் கூறுகிறார். "பல டேட்டா நிறுவனங்கள், மற்ற இதர நிறுவனங்களுக்கும் - betting நிறுவனங்களுக்கும் அல்லது gaming நிறுவனங்களுக்கும் - முரண்பாடுகளை உருவாக்க அல்லது விளையாட்டுகளை உருவாக்க தகவல்களை வழங்குகின்றன. மேலும் இது image உரிமைகளிலிருந்து வேறுபட்டது."

அடிப்படையில், செயல்திறன் தரவு ஒரு கால்பந்து வீரரின் மதிப்பீடாக இருக்கலாம், உதாரணமாக, கடந்து செல்வது, வேகம், shooting துல்லியம் போன்றவற்றைப் பொறுத்து இருக்கலாம். கிரிக்கெட்டிலிருந்து ஒரு எடுத்துக்காட்டுக்கு, ஒரு பந்துவீச்சாளரின் அறிவை குறிப்பிடலாம். அதாவது, இந்த பவுலரின் சிந்தனையின் படி, அவர் வீசும் அந்த ஓவரில் நான்காவது பந்து மெதுவாக வேகத்தில் இருக்கும் என்று கணிக்கப்படும். இதே தகவலைப் பயன்படுத்தி, அடுத்த போட்டி நாளில் எந்த வீரர்கள் ஒரு நல்ல விளையாட்டை வெளிப்படுத்தமுடியும் என்பதைக் கூட ஒரு fantasy லீக்கின் பயனரால் அணுக முடியும்.

போட்டிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், தரவு பகிர்வு ஏன் சட்டவிரோதமானது?

ஒரு ரசிகர் தொலைக்காட்சியின் முன் அமர்ந்து ஒரு தனிப்பட்ட வீரர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைக் குறிப்பிடுவதைத் தடுப்பதில்லை, இது முற்றிலும் சட்டபூர்வமானது. இருப்பினும், அந்த தகவல் அந்த வீரரின் அனுமதியின்றி விற்கப்பட்டால், , அது சட்டவிரோதமானது.

"நீங்கள் அந்தத் தரவைச் சேகரிக்கும்போது, ​​அது உங்கள் பொழுதுபோக்காக இருக்கக்கூடும், அது நன்றாக இருக்கிறது" என்று டட்டன் கூறுகிறார். “ஆனால் நீங்கள் அந்தத் தரவிலிருந்து பணம் சம்பாதிக்கத் தொடங்கும்போது, ​​அங்குதான் பிரச்சனை ஏற்படுகிறது. நீங்கள் மளிகை சாமான்களை வாங்க வேண்டும் என்று கூறி ஒருவரின் காரை கடன் வாங்குவது போன்றது, ஆனால் நீங்கள் அதை ஒரு டாக்ஸி சேவையாகப் பயன்படுத்துகிறீர்கள், அதிலிருந்து பணம் சம்பாதிக்கலாம் என்று எண்ணுகிறீர்கள் என்றால் அதை எப்படி அனுமதிக்க முடியும்?.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

தரவு உரிமைகளுக்கும், இமேஜ் உரிமைகளுக்கும் என்ன வித்தியாசம்?

விராட் கோஹ்லி, ஒரு பெரும் மின்னணு நிறுவனத்தால் தனது முகத்தைப் பயன்படுத்தி அதன் தயாரிப்புகளை விற்க பணம் பெறுகிறார், அல்லது சச்சின் டெண்டுல்கர் ஒரு பான நிறுவனத்துடன் அதன் விளம்பரங்களில் தோன்றுவதற்கு ஒரு ஒப்பந்தம் வைத்திருக்கிறார், அவை image உரிமைகள் ஆகும். வீரரின் பெயர் அல்லது புகைப்படத்தை வீரரின் அனுமதியின்றி பயன்படுத்த முடியாது.

தரவு உரிமைகள் ஒரு வீரரின் ஒப்புதல் இல்லாமல் செயல்திறன் தரவை விநியோகிப்பது பற்றியது. “(இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்) ஜோஃப்ரா ஆர்ச்சரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் தனது வழக்கமான வேகத்தில் ஓடி வந்து 95, 90mph வேகத்தில் வீசுகிறார் என்றும், 75 மைல் வேகத்தில் மெதுவான பந்தை வீசக் கூட அவர் அதே ரன்-அப் பயன்படுத்துகிறார் என்று நாம் கூறலாம். பொதுவாக அவருடைய ஒரு ஓவரின் ஐந்தாவது பந்து மெதுவான ஒன்றாகும் என்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்… இந்த தரவு அனைத்தும் தனிப்பட்ட செயல்திறன் கண்காணிப்பு தரவு ”என்று டட்டன் கூறுகிறார்.

‘ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்’ – சிஇஓ காசி விஸ்வநாதன்

செயல்திறன் தரவு betting அல்லது gaming நிறுவனங்களால் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது?

betting மற்றும் gaming நிறுவனங்கள், பெட்டிங் போது பயனர்கள் தகவல்கள் மூலம் முடிவெடுக்கும் வாய்ப்பை வழங்க புள்ளி விவரங்களை அளிக்கின்றன. எடுத்துக்காட்டாக, கிளப் A-ன் வீரர்கள் கிளப் Bன் வீரர்களிடம் இருந்து எவ்வாறு தகவல்கள் மூலம் நன்மையைப் பெறுவார்கள் என்பதை குறிக்கலாம்.

அடிப்படையில், அந்த தரவுகள் சூதாட்டத்தின் போது, வீரர்களின் முரண்பாடுகளை அறிய சூதாட்டக்காரர்களுக்கு உதவும். இதேபோல், கேமிங்கைப் பொறுத்தவரை, ஒரு பயனர் ஒரு வீரரின் செயல்திறன் தரவைக் கொண்டிருப்பார், அதன்படி ஒரு Fantasy லீக்கில் ஒரு அணியைத் தேர்ந்தெடுக்க முடியும்.

தரவு உரிமைகள் பிரச்சனைக்கு தீர்வு காணும் சட்டங்கள் உள்ளதா?

இங்கிலாந்தில் உள்ளது. இங்கிலாந்தில் 2018 ஆம் ஆண்டின் தரவு பாதுகாப்பு சட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (ஜிடிபிஆர்) ஆகியவை இந்த பிரச்சினையை தீர்க்கின்றன.

செயல்திறன் தரவை ஒளிபரப்ப அனுமதிக்கப்படுகிறார்களா?

ஆமாம், போட்டிகளை ஒளிபரப்ப மற்றும் பிந்தைய மற்றும் போட்டிக்கு முந்தைய பகுப்பாய்வை வழங்குவதற்கான உரிமைகளுக்காக அவர்கள் பணம் செலுத்தியுள்ளதால். அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் fantasy லீக்குகள் இதனால் பாதிக்கப்படுமா?

இதுபோன்ற ஏதாவது ஒன்று வந்தால் இந்த லீக்குகள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஏனெனில் இங்கிலாந்தில் தான் இந்த வழக்கு முதன்மையானது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Virat Kohli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment