பொதுவாக பெரும்பாலானோர் வலது கையைதான் அதிகம் பயன்படுத்துகிறோம். சிலர் மட்டுமே அனைத்து செயல்களுக்கும் இடது கையை பயன்படுத்துவர்.
இடது கை பழக்கமுடையோர் வசதிக்கேற்ப எந்த பொருளும் பயன்பாட்டிற்கு வருவதில்லை. வலது கை பயனாளர்களுக்கு ஏற்பவே தயாரிக்கப்படுகிறது. இதனால் இடது கைப் பழக்கமுள்ளோர் அன்றாட வாழ்வில் பல சவால்களை சந்திக்கின்றனர். அவர்கள் சந்திக்கும் சிரமங்களை மற்றவர்கள் உணரும் வகையில் ஆண்டுதோறும் ஆக.13 ல் சர்வதேச இடது கை பழக்கம் உள்ளோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
‘ஐபிஎல் 2022 வரை தோனி விளையாடுவார் என நம்புகிறோம்’ – சிஇஓ காசி விஸ்வநாதன்
மகாத்மா காந்தி முதல் மாவீரன் அலெக்ஸாண்டர் வரை இடது கை பழக்கமுடையவர்களே. நடிகர் அமிதாபச்சன், சச்சின் டெண்டுல்கர் என ஏராளமான பிரபலங்களும் உள்ளனர்.இடது கையால் ஒரு பொருளைக் கொடுத்தாலோ, வாங்கினாலோ, தொட்டாலோ அவமதிப்பு என்ற எண்ணம் நம்மில் பலரிடம் உள்ளது.
இந்நிலையில், இடது கை கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், தனக்கு பிடித்த நான்கு இடது கை பேட்ஸ்மேன்களை பட்டியலிட்டுள்ளார்.
அதில், பிரைன் லாரா, ஆடம் கில்கிறிஸ்ட், சவுரவ் கங்குலி, மேத்யூ ஹெய்டன் ஆகியோரை குறிப்பிட்டுள்ளார்.
Here’s a tribute to some of the greatest left handed legends the game has produced. Add on to this golden list and share with me your favorite left-handed batsmen #InternationalLeftHandersDay pic.twitter.com/wovMFYSQoR
— Yuvraj Singh (@YUVSTRONG12) August 13, 2020
இதில், பிரைன் லாரா கண்டிப்பாக அனைவருக்கும் பிடித்த பேவரைட் வீரராக இருப்பார் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஒருநாள் போட்டிகளை விட, டெஸ்ட் போட்டிகளில் இவரது ஆதிக்கம் கொடூரமானது. சர்வதேச டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்ஸில் 400 ரன்கள் அடித்த ஒரே வீரர் என்றால் சும்மாவா!!
ஆடம் கில்கிறிஸ்ட் என்ற ஒரு வீரர் இல்லையெனில், தோனி எனும் பொக்கிஷம் இந்தியாவுக்கு கிடைக்காமலேயே போயிருக்கலாம். ஆஸ்திரேலியாவின் இந்த மெகா அதிரடி பேட்ஸ்மேன் + விக்கெட் கீப்பர் தான், தோனிக்கு இன்ஸ்பிரேஷன். இதை தோனியே தெரிவித்திருக்கிறார். யுவராஜுக்கும் இவரைப் பிடிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை.
யுஏஇ செல்லும் 10 ‘எக்ஸ்க்ளூஸிவ்’ நெட் பவுலர்ஸ் – வலுவான அடித்தளமிடும் சிஎஸ்கே
அடுத்து தாதா…. இவரைப் பிடிக்காதவர் எவராவது இருக்க முடியுமா என்ன? பேட்டிங்கிலும், கேப்டன்ஷிப்பிலும் ஆக்ரோஷம் காட்டிய கங்குலி தான், கண்கட்டி நின்ற இந்திய அணிக்கு கேப்டனாகி, ஒட்டுமொத்த டீமையும் கரை சேர்த்தது மட்டுமின்றி, தோனி, யுவராஜ், ஜாகீர், கைஃப், ஜாகீர் என பலரையும் உருவாக்கிவிட்டுச் சென்றார்.
இறுதியாக மேத்யூ ஹைடன். இந்த ஆஜானபாகு மாஸ்டர் எல்லாம் வேற லெவல் பெர்ஃபாமர் எனலாம். ‘நெத்தியடி மேத்தி’ என்று எங்கூர் பக்கம் இவரைச் சொல்வார்கள். யுவராஜுக்கு மட்டும் பிடிக்காமல் போகுமா என்ன!
அதுமட்டுன்றி, ரசிகர்களையும் தங்களுக்கு பிடித்த இடது கை கிரிக்கெட் வீரர்கள் பற்றி குறிப்பிட கேட்டிருக்கிறார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook
Web Title:Yuvraj singh names four greatest left handed legends cricket news
சாரதா அம்மா கேரக்டரில் அந்த நடிகை கிடையாதாம்: தெளிவு படுத்திய ராதிகா
வன்னியர்களுக்கு 20% இடஒதுக்கீடு கேட்ட ராமதாஸ் எப்படி 10.5% ஒப்புக்கொண்டார்? – திருமாவளவன் கேள்வி
ராகுல் காந்தி, அமித் ஷா இன்று தேர்தல் பிரச்சாரம் : முழு விவரம் உள்ளே
அனைத்து துறைகளிலும் திருநங்கைகளுக்கு இடஒதுக்கீடு: சென்னை பல்கலைக்கழகம் முடிவு
தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ளாதது வருத்தம் – மான் கி பாத் நிகழ்ச்சி பிரதமர் மோடி உரை