யுஏஇ செல்லும் 10 ‘எக்ஸ்க்ளூஸிவ்’ நெட் பவுலர்ஸ் – வலுவான அடித்தளமிடும் சிஎஸ்கே

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அவர்கள் அழைத்துச் செல்லும் பிரத்யேக பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கையை இறுதி செய்ய உள்ளது

By: August 11, 2020, 5:47:47 PM

இந்தியன் பிரீமியர் லீக் 2020 தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள நிலையில், குறைந்தது 50 முகம் தெரியாத இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு ஆசீர்வாதமாக இருக்கப் போகிறது. அவர்கள் எட்டு அணிகளுடன் “பிரத்யேக” பந்து வீச்சாளர்களாக பயணம் செய்ய உள்ளனர்.

குறைந்த பட்சம் மூன்று உரிமையாளர்களான சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகியவை இந்த பிரத்யேக பந்து வீச்சாளர்களின் பட்டியலைத் தயாரிக்கின்றன என்பதை உறுதிப்படுத்தின.

இந்த பட்டியலில் பெரும்பாலும் முதல் தர, யு -19 மற்றும் யு -23 மாநில அளவிலான கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர், அவர்கள் எம்.எஸ். தோனி, சுரேஷ் ரெய்னா, ரிஷாப் பந்த் ஆகியோருக்கு ஒரு மாதத்திற்கு மேல் பந்து வீசப் போகிறார்கள்.

யுவராஜ், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் – மரியாதைக்கேற்ற முடிவுரை கிடைத்ததா?

இந்த சீசனில் உள்ளூர் பந்து வீச்சாளர்கள் வலைப் பயிற்சியில் பயன்படுத்தப்பட உள்ளனர். ஆனால் போட்டிகளுக்கான கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்கும். அனைத்து அணிகளும், தரமான பந்து வீச்சாளர்களுக்கு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

“எல்லாம் சரியாக நடந்தால், பயிற்சி அமர்வுகளுக்காக யுஏஇக்கு பிரத்யேகமாக 10 பந்து வீச்சாளர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம். அவர்கள் அணியுடன் வருவார்கள், போட்டி தொடங்கும் வரை இருப்பார்கள்” என்று சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி காசி விஸ்வநாதன் செவ்வாய்க்கிழமை பி.டி.ஐ யிடம் தெரிவித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவர்களுடைய பட்டியலில் 10 பிரத்யேக பந்து வீச்சாளர்களும் இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்தினர், இது மும்பை முன்னாள் கேப்டன் மற்றும் அவர்களின் அகாடமி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் ஆகியோரால் கையாளப்படலாம்.

“இது ரஞ்சி டிராபியில் விளையாடிய வீரர்களின் கலவையாக இருக்கும், சிலர் யு -23 மற்றும் யு -19 நேஷ்னல் லெவல் போட்டிகளில் விளையாடியுள்ளனர்” என்று கே.கே.ஆர் முகாமின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

டெல்லி கேபிட்டல்ஸ் அணி “bio bubble”-ன் ஒரு பகுதியாக இருக்கும் ஆறு பிரத்யேக பந்து வீச்சாளர்களை அழைத்துச் செல்கின்றன.

கேமராக்கள் மெய்மறந்து பந்தை நோக்க சடாரென இடி சத்தம் – ஃபீல்டருக்கு வந்த சோதனை!

“அவர்கள் அணியுடன் தங்கியிருப்பார்கள் மற்றும் பயிற்சியின் போது அணியுடன் பயணிப்பார்கள்” என்று ஒரு உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் அவர்கள் அழைத்துச் செல்லும் பிரத்யேக பந்து வீச்சாளர்களின் எண்ணிக்கையை இறுதி செய்ய உள்ளது.

ஒட்டுமொத்த பிரத்யேக பந்து வீச்சாளர்களின் பட்டியலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ipl 2020 csk to carry 10 exclusive net bowlers to uae

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X