Pfizer vaccine Not top of India wishlist but officials track rollout, push similar vaccine : 70 டிகிரி செல்சியஸ் உறைநிலை ஃபைசர் பையோஎன்டெக்கின் தடுப்பூசிக்கு தேவைப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசி இந்தியாவில் சோதனைப்படுத்தப்படாது. எனவே டெல்லியின் விருப்பப்பட்டியலில் இந்த தடுப்பூசி இல்லை. அதே நேரத்தில் இங்கிலாந்தில் இந்த தடுப்பூசிக்கான ஒப்புதல் மற்றும் பரிசோதனை என்பது கல்வி ஆர்வத்தைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
Advertisment
ஃபைசரின் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த வேண்டும் என்றால் அந்நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனம் கட்டுபாட்டாளரை அணுக வேண்டும். இங்கிலாந்து கட்டுப்பாட்டாளரிடம் இந்த தரவுகளை பகிர்ந்து கொண்ட பிறகு இது தொடர்பாக ஒரு முடிவை அவர்கள் எடுப்பார்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் ஒரு அதிகாரி கூறினார்.
இந்திய தடுப்பூசி திட்டங்களை மேற்பார்வையிட்டுவரும் உயர் அதிகாரிகள், ஃபைசர் தடுப்பூசி இந்தியாவின் உடனடி உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்யாது மேலும் அந்நிறுவனம் ஏற்கனவே மற்ற நாடுகளுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்உம் என்று கூறினார்.
தடுப்பூசி நிர்வாகம் தொடர்பாக உயர்மட்ட தேசிய நிபுணர் குழுவின் தலைவர் வி.கே.பால், ஃபைசர் மற்றும் மாடர்னா போன்ற தடுப்பூசிகளை பொறுத்தவரை இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று கூறியுள்ளார் - அவை வெளிநாடுகளில் 3 ஆம் கட்டத்தில் சாதகமான முடிவுகளைக் காட்டியுள்ளன, ஆனால் இங்கு சோதனை செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த தடுப்பூசி அதிக எண்ணிக்கையில் கிடைக்காது என்று தெரியும். இந்த தடுப்பூசி வர வேண்டும் என்றால், நமக்கு தேவைப்பட்டால், நாம் தான் தயாரிக்க வேண்டும். இது தொடர்பான இணையான திட்டங்கள் உள்ளது. இந்த தடுப்பூசியை பெற நாம் முயன்றோம் ஆனால் நாம் முன்னேறி செல்லுவோம். ஆனாலும் நாம் இந்த தடுப்பூசியை பெற இருக்கின்றோம் என்று உறுதி செய்யப்பட்டாலும் கூட சில மாதங்கள் கழித்தே பெறுவோம் என்றார் அவர்.
இவை அனைத்தும் தற்போது மருத்துவ பரிசோதனைகளில் உள்ள ஐந்து தடுப்பூசிகளை (அஸ்ட்ராஜெனெகா-ஆக்ஸ்போர்டு, ஜைடஸ் காடில்லா, பையோலாஜிக்கல் இ, டாக்டர் ரெட்டி மற்றும் பாரத் பயோடெக்) அடிப்படையாக கொண்டு பெரிய அளவு விநியோகம் குறித்து சிந்தித்து வருகிறது இந்தியா.
நமக்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளன. அவை அனைத்தையும் இந்த ஐந்து தடுப்பூசிகள் நிறைவேற்றும். அவை அனைத்தும் எளிமையான தளங்கள் மேலும் இந்த தடுப்பூசிகளின் கிடைக்கும் அளவும் அதிகம். அதன் மூலம் தொற்றுநோயை கட்டுக்குள் கொண்டு வர இயலும் என்று பால் கூறுகிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
இங்கிலாந்தின் கட்டுப்பாட்டாளரின் புதன்கிழமை முடிவு தொழில்நுட்ப முன்னணியில் இந்தியாவுக்கும் முக்கியமானது. ஃபைசர் மற்றும் மாடர்னாவின் எம்ஆர்என்ஏ தடுப்பூசியைச் சுற்றியுள்ள உலகளாவிய எதிர்பார்ப்பைப் பார்க்கும்போது, நாட்டின் முதல் எம்ஆர்என்ஏ அடிப்படையிலான தடுப்பூசி உற்பத்தி வசதியை புனேவைச் சேர்ந்த ஜெனோவா பயோஃபார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு பயோடெக்னாலஜி துறை வழங்கியுள்ளது.
"ஒருபோதும் எம்ஆர்என்ஏ தடுப்பூசி பயன்படுத்தப்படவில்லை, ஆனால் இந்த தடுப்பூசிகள் செயற்கை மற்றும் உற்பத்தி செய்ய எளிதானவை. திறனை அதிகரிப்பது மிகவும் எளிதானது, ”என்று சிலர் கூறுகின்றனர். "ஆனால் ஒப்புதலுக்கு கூடுதல் தரவு மற்றும் விசாரணை முக்கியமானதாக இருக்கும்."
தற்செயலாக ஜென்னோவாவுடன் திங்கள்கிழமை அன்று பிரதமர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த நிறுவனம் 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் எம்.ஆர்.என்.ஏ அடிப்படையிலான சொந்த கொரோனா தடுப்பூசியை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.