Corbevax approved for 12-14 year-olds: what is it, and how does it work?: 12 மற்றும் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மத்திய ஆரம்பித்துள்ளது. இந்த தடுப்பூசி திட்டத்தில் ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல்-ஈ தயாரித்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியான Corbevax ஐ செலுத்த மத்திய அரசு அனுமதித்துள்ளது. Corbevax என்பது இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரிசெப்டர் பைண்டிங் (ஏற்பி பிணைப்பு) டொமைன் (RBD) புரத துணை அலகு தடுப்பூசி ஆகும். Corbevax என்பது என்ன, அது எப்படி வேலை செய்கிறது? என்பதை இப்போது பார்க்கலாம்.
Corbevax, ஒரு புரத சப்-யூனிட் கொரோனா தடுப்பூசி, இது பாரம்பரிய துணை-அலகு தடுப்பூசி தளத்தில் கட்டப்பட்ட ஒன்றாகும். முழு வைரஸுக்கு பதிலாக, ஸ்பைக் புரதம் போன்ற அதன் துண்டுகளைப் பயன்படுத்துவதன் மூலம் தளமானது நோயெதிர்ப்பு மறுமொழியைத் தூண்டுகிறது. துணை-அலகு தடுப்பூசியில் பாதிப்பில்லாத S-புரதம் உள்ளது, மேலும் மனித நோயெதிர்ப்பு அமைப்பு அதை அங்கீகரித்தவுடன், அது இரத்த வெள்ளை அணுக்கள் போன்ற ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது, இது தொற்றுநோயை எதிர்த்துப் போராடுகிறது.
இதையும் படியுங்கள்: மருத்துவ சாதனங்களுக்கான வரைவுக் கொள்கை ஏன் தேவை?
Corbevax ஒரு பாதுகாப்பு நோயெதிர்ப்பு மறுமொழியைத் தூண்டுவதற்கு வைரஸின் ஆன்டிஜெனிக் பாகங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த ஆன்டிஜென் தடுப்பூசி மேம்பாட்டுக்கான டெக்சாஸ் குழந்தைகள் மருத்துவமனை மையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது மற்றும் பேய்லர் மருத்துவக் கல்லூரியின் ஒருங்கிணைந்த வணிகமயமாக்கல் குழுவான BCM வென்ச்சர்ஸிடமிருந்து உரிமம் பெற்றுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil