Advertisment

உள் அலங்கார நிபுணர் மரணம்: அர்னாப் கைதுக்கு காரணமான தற்கொலை வழக்கு பின்னணி

அதன்யா நாயக் எழுப்பிய புதிய புகாரின் அடிப்படையில், கடந்த மே மாதம் மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்

author-image
WebDesk
New Update
உள் அலங்கார நிபுணர் மரணம்: அர்னாப் கைதுக்கு காரணமான தற்கொலை வழக்கு பின்னணி

2018ஆம் ஆண்டு  உயிரிழந்த  உள் அலங்கார நிபுணர்  அன்வாய் நாயக்  மற்றும் அவரின் தாயார் இருவரையும் தற்கொலை செய்து கொள்ள தூண்டிய குற்றத்திற்காக  ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி  தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisment

“அர்னாப் கோஸ்வாமி தற்போது ராய்காட் கொண்டு செல்லப்படுகிறார். விசாரணை அதிகாரியால் விசாரிக்கப்படுவார். அதற்கு பின், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள்  குறித்து முடிவு செய்யப்படும்”என்று கொங்கன் ரேஞ்ச் ஐ.ஜி சஞ்சய் மோஹிட் தெரிவத்தார்.

என்ன வழக்கு?

கடந்த மே 2018 அன்று, மகாராஷ்டிராவில் அலிபாகில் உள்ள பங்களாவில் உள் அலங்கார வடிவமைப்பாளர் அன்வே நாயக் மற்றும் அவரின் தாயார் இருவரும் இறந்து கிடந்தனர். இதை தற்கொலை என்று காவல்துறை தெரிவித்தது. இருப்பினும், அன்வே நாயக்கின் தாயார் கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக பிரேத பரிசோதனை தெரியவித்தது.

அன்வே நாயக் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது தாயாரை கொலை செய்திருக்கலாம் என்று காவல்துறை யூகித்தது.  எனவே, தற்செயலான மரணம், கொலை வழக்கு ஆகிய இரண்டையும் காவக்துறை பதிவு செய்தது.

அர்னாப் கோஸ்வாமிக்கு எதிராக ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது?

இறப்பதற்கு முன்பு அன்வே நாயக் எழுதிய தற்கொலை கடிதத்தில், " மூன்று நிறுவனங்களின் உரிமையாளர்கள் கட்டணத்தைச் செலுத்தாத காரணத்தால், இந்த மோசமான முடிவை நான் எடுக்கிறேன் " என்று குறிப்பிட்டார். ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமி, ஃபெரோஸ் ஐகாஸ்ட்எக்ஸ் / ஸ்கிமீடியா நிறுவனத்தின் பெரோஷ் ஷேக் , ஸ்மார்ட்வொர் நிறுவனத்தைச் சேர்ந்த நிதீஷ் சர்தா ஆகியோரின் பெயர்கள் அதில் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்த மூன்று நிறுவனங்களும், அன்வே நாயக்கின் கான்கார்ட் டிசைன் நிரிவனத்துக்கு முறையே ரூ .83 லட்சம், ரூ .4 கோடி,  ரூ .55 லட்சம் கடன்பட்டுள்ளன. அனவே நாயக் பயங்கர கடனில் இருப்பதாகவும், ஒப்பந்தக்காரர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த சிரமப்படுவதாகவும் அதிகாரி  ஒருவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும்,  தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து வரும் அர்னாப் கோஸ்வாமி , பணம் செலுத்தியதாகவும் கூறியிருந்தார்.  வாங்கிய பணத்தை திருப்பித் தருமாறு  அடிக்கடி மிரட்டல் விடுத்த ஒருவர் மீது நாயக் மும்பை காவல் நிலையத்தில்  ஏற்கனவே வழக்குப் பதிவு செய்திருப்பதையும் ராய்காட் போலீசார் சுட்டிக் காட்டியிருந்தனர்.

விசாரணையில் என்ன நடந்தது?

இந்த வழக்கை விசாரித்த ராய்காட் காவல்துறை, தற்கொலைக் கடிதத்தில் பெயரிடப்பட்ட அர்னாப் கோஸ்வாமி உள்ளிட்ட  குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறி 2019 ஏப்ரலில் வழக்கை முடித்து வைத்தது.

இந்நிலையில், அன்வேயின் மகள் அதன்யா நாயக் எழுப்பிய புதிய புகாரின் அடிப்படையில், கடந்த மே மாதம் மகாராஷ்ட்ரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

"அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சி சேனல் நிலுவைத் தொகையை செலுத்தாதது குறித்து அலிபாக் போலீஸ் விசாரணை செய்யவில்லை. நிதி நெருக்கடி காரணமாகத் தான் தனது தந்தையும் பாட்டியும் தற்கொலை செய்து கொண்டனர்"   என்று உள்துறை அமைச்சருக்கு எழுதிய புகாரில் அதன்யா நாயக் தெரிவித்தார்.

இதனையடுத்து, மகாராஷ்டிரா உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை சிஐடிக்கு மாற்றியது.

என்ன நடக்கும்?

கட்டட கலைஞர் அன்வே நாயக்க்கு கட்டணத்தை திருப்பி செலுத்தியதற்கான ஆதாரங்களை வழங்குமாறு அர்னாப் கோஸ்வாமியிடம் விசாரணை அதிகாரிகள் கோருவார்கள்.  இந்த, விசாரணையைப் பொறுத்து வழக்கை முடித்து வைப்பதா?   அர்னாப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதா? என்ற முடிவுகள் எடுக்கப்படும்.

இது மும்பை காவல்துறையினரால் தொடரப்பட்ட வழக்குடன் தொடர்புடையதா?

இல்லை. மும்பை காவல்துறையுடன், அர்னாப் எதிர்கொள்ளும் வழக்குகளுக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

முன்னதாக, மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங், காவல்த் துறையினர் டிஆர்பி புள்ளிகளை கையாளுதல் தொடர்பான மோசடி குறித்து விசாரித்து வருவதாக கூறினார். பாட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்ஸில் இந்தியா ( Broadcast Audience Research Council (BARC) India) பயன்படுத்தும் சாதனங்களை தவறாகப் பயன்படுத்துவதன் மூலம் டி.ஆர்.பி புள்ளிகள் கையாளப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

பந்த்ரா ரயில் நிலையத்திற்கு வெளியே கூடியிருந்த புலம்பெயர் தொழிலாளிகள் குறித்தும், பல்காரில் சாதுக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களை வகுப்புவாதமாக மாற்ற முயற்சித்ததாக  ரிபப்ளிக் டிவி மீது இரண்டு எப்ஐஆர் போடப்பட்டது.

 

Arnab Goswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment