வனத் துறையினர் முதன்முதலில் அதன் பணியாளர்களை யானையை பிடிக்கும் பணிக்காக திரட்டிய ஒரு மாதத்திற்குப் பிறகு, முரட்டு யானையான 'அரிக்கொம்பன்' (அதாவது, அரிசியுடன் அதன் தொடர்பு காரணமாக 'அரிக்கொம்பன்') இறுதியாக பிடிபட்டது.
சின்னக்கானல், சந்தன்பாறை, போடிமெட்டு ஆகிய மக்கள் வசிக்கும் பகுதிகளில், அரிசி மற்றும் பிற தானியங்களுக்காக ரேஷன் கடைகளை முற்றுகையிட்ட யானை, ரேஷன் கடைகளை நாசம் செய்தது. பல ஆண்டுகளாக 11 பேரை மிதித்து கொன்றது.
இதையும் படியுங்கள்: போதைப் பொருள் கடத்தல் வழக்கு; சிங்கப்பூரில் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
”2005 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இந்தப் பகுதியில் யானைகள் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த யானைகளில் அரிக்கொம்பன் பழக்கமான கொலையாளியாக இருக்கலாம். அரிக்கொம்பன் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக இப்பகுதியில் இருக்கிறது,” என்று வன அதிகாரி ஒருவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் கூறினார்.
மகத்தான முரட்டு யானையை பிடித்தல்
முரட்டு யானைகளைப் பிடிப்பது எளிதான காரியம் அல்ல. அரிக்கொம்பன் யானையை பிடிப்பதும் பல்வேறு சவால்களை முன்வைத்தது, வேறு எந்த யானையும் இதுபோன்ற சாவல்களை முன்வைத்தது இல்லை.
கடந்த மாதம், அரிசி மற்றும் ரேசன் கடைகளில் அரிசி மூட்டைகளை தேடி அரிக்கொம்பன் வரும் தீவிர ஆர்வத்தை உணர்ந்த வனத்துறை அதிகாரிகள், யானையை பிடிப்பதற்கு முன், டம்மி ரேஷன் கடையை அமைத்தனர். அவர்கள் அதை கும்கியாக மாற்ற திட்டமிட்டனர் (காட்டு யானைகளைப் பிடிக்கும் நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ஒரு பயிற்சி பெற்ற, சிறைப்பிடிக்கப்பட்ட யானை) இது பொதுவான நடைமுறையாகும்.
ஆனால், கேரள உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததால் வனத்துறையால் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த முடியவில்லை. விலங்கு பிரியர்களின் மனுவை ஏற்ற நீதிமன்றம், அரிக்கொம்பனை சிறைபிடிக்காமல், வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்குமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இது வனத்துறை அதிகாரிகளை தங்கள் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியது, இறுதியாக வனத்துறையினர் தங்கள் திட்டத்தை மாற்றி தற்போது அரிக்கொம்பனை பிடித்துள்ளனர்.
தலைமை கால்நடை மருத்துவர் டாக்டர் அருண் ஜக்காரியா தலைமையிலான 150 வனத்துறை அதிகாரிகள் குழுவினர், 5 மயக்க ஊசிகள் மூலம் முரட்டு யானையை பிடித்தனர். இருந்த போதிலும், அரிக்கொம்பன் நான்கு கும்கி யானைகளின் உதவியுடன் கைப்பற்றப்படும் வரை தன்னைக் கைப்பற்றியவர்களை கடுமையாக எதிர்த்தது. பின்னர் லாரியில் ஏற்றப்பட்டு ஜி.பி.எஸ் காலர் பொருத்தப்பட்டது. இது தற்போது வெளிவர முடியாத இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு காடுகளில் வெளியிடப்படும்.
"அரிக்கொம்பனைப் பிடிப்பதற்காக மிஷன் குழு பாதகமான சூழ்நிலையில் செயல்பட்டது ... நீதிமன்ற உத்தரவுப்படி யானையை அடையாளம் தெரியாத இடத்திற்கு மாற்றுவோம்" என்று கேரள அமைச்சர் ஏ.கே சசீந்திரன் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
யானைகளின் தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்க வனத்துறையினர் அரிக்கொம்பனை பிடிக்க முயற்சிப்பது இது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டில், அரிகொம்பன் மயக்க ஊசி துப்பாக்கிகளால் சுடப்பட்டது, ஆனால் யானை வனப்பகுதிக்குள் தப்பித்தது.
யானைகளை மாற்றுவது மோதல்களை மாற்றுகிறது
தற்போது நடைபெற்று வரும் அரிக்கொம்பன் விவகாரத்தில் உயர் நீதிமன்றத்தின் தலையீடு கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. யானையைப் பிடிப்பதை விட இடமாற்றம் செய்யுமாறு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அரிக்கொம்பனை உணவு நிறைந்த வனப்பகுதிக்கு மாற்றுவது, அதன் கழுத்தில் ரேடியோ காலரைப் பொருத்துவது, போன்றவை உள்ளூர் மக்களுக்கு யானை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து குறித்த கவலைகளைத் தணிக்க போதுமானது என்று கூறியது.
இருப்பினும், கிடைக்கக்கூடிய அறிவியல் சான்றுகள் வேறுவிதமாகக் கூறுகின்றன. யானைகள் நிற்கும் பயிரை தாக்காது என்பதால், "இயற்கை உணவு" கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும், கழுத்தைச் சுற்றி ஒரு ரேடியோ காலரைப் பயன்படுத்துவது அதன் பேட்டரியை மிக விரைவில் சார்ஜ் இழக்கச் செய்யும். காலர்களை மீண்டும் பொருத்துவதற்கு அடிக்கடி இடம்பெயர்வதைத் தவிர்க்க, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் இருப்பிடத்தைக் கண்காணிப்பது சிறந்தது, ஆண் யானைக்கு 5-10 கிமீ சுற்றளவில் சில ஆச்சரியங்களை ஏற்படுத்த இது போதுமான நேரம் ஆகும்.
மிகச் சில யானைகளே உண்மையில் மனிதர்களைத் தாக்கும் அதே வேளையில், "ஒரு ஆண் யானை மீண்டும் மீண்டும் அந்தக் கோட்டைக் கடக்கும்போது, குழுவில் உள்ள சிறிய ஆண் யானைகள் அந்த மோசமான செயல்பாட்டை பின்பற்றுவதற்கு முன்பு அந்த யானை அகற்றப்படும்" என்று ஜெய் மசூம்தார் தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு எழுதினார். மேலும், முரட்டு யானைகள் மனிதர்களுக்கும் யானைகளுக்கும் இடையே நல்லெண்ணத்தைத் துண்டிக்கக்கூடும், அதன் விளைவாக அவற்றின் பாதுகாப்பிற்கு பெரிய சவால்களை ஏற்படுத்துகின்றன.
அரிக்கொம்பன் வேறொரு காட்டிற்கு மாற்றப்பட்டதால், அது தொடர்ந்து ஆபத்தான மற்றும் ஆக்ரோஷமான நடத்தையில் ஈடுபடுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.