Liz Mathew
Sadhvi Pragya Thakur Nathuram Godse Remark : போபால் தொகுதியின் பாஜக வேட்பாளர் சாத்வி ப்ரக்யா சிங் தாக்கூர், தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கொலையாளி நாதுராம் கோட்ஸேவினை போற்றும் வகையில் தன்னுடைய கருத்துகளை வெளியிட்டார். அதில் கோட்ஸே சிறந்த நாட்டுப் பற்றாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவருடைய இந்த சர்ச்சைக் கருத்தால் பாஜகவில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ், பிரக்யாவின் இந்த கருத்தினை வைத்து பாஜகவை கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர். காங்கிரஸின் மதசார்பற்ற தேசப்பற்று, பாஜகவின் கலாச்சார தேசப்பற்று இரண்டுக்கும் இடைப்பட்ட புள்ளியில் கோட்ஸேவின் பெயர் அடிக்கடி வருவது வழக்கம்.
கோட்ஸேவின் செயல் தங்களின் கோட்பாட்டிற்கு சற்றும் சம்பந்தமில்லை என்று பாஜகவும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் தங்களை நிரூபிப்பதையும் வழக்கத்தில் கொண்டுள்ளது தான். காந்தியை கோட்ஸே சுட்டுக் கொன்றவுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ப்ரக்யாவின் இந்த சர்ச்சைக்குரிய கருத்து, கமல் ஹாசன், நாதுராம் கோட்ஸேவை சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி என்றும், அவர் ஒரு இந்தும் என்று கூறிய கருத்திற்கு பதில் கருத்தாக ப்ரக்யா குறிப்பிட்டார். மத்திய அமைச்சர்கள் பலர் கமலின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கமல் ஹாசனுக்கு கொலையாளிக்கும் தீவிரவாதிக்குமான வித்யாசம் தெரியவில்லை என்று விமர்சனம் செய்தார்.
கோட்ஸேவை புகழ்ந்த பாஜகவினர்
பாஜகவினர் கோட்ஸேவினை புகழ்வது இது ஒன்றும் முதல் முறையில்லை. உன்னாவ் தொகுதி எம்.பி. சாக்ஷி மஹாராஜ், பாராளுமன்றத்திற்கு வெளியே நின்று கொண்டு, செய்தியாளர்களிடம், நாதுராம் கோட்ஸேவும் ஒரு தேசப்பற்றாளர் தான். மகாத்மா காந்தியும் நாட்டுக்கு நிறைய செய்திருக்கிறார். கோட்ஸே கொஞ்சம் கோபக்காரர் தான். ஏதோ தெரியாமல் ஒரு தவறு செய்திருக்கலாம். அதற்காக அவரை தேச விரோதி என்று கருதிவிட இயலாது என்று கூறி சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.
இந்த சம்பவம் பாஜக ஆட்சி அமைத்து வெறும் 7 மாதங்கள் ஆன நிலையில் கூறப்பட்டது. காங்கிரஸ் பாஜக எம்.பியின் இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்கச் சொல்லி கண்டனங்களை பதிவு செய்தனர். சாக்ஷி மஹாராஜ் அப்போது, நான் அப்படி கூறியிருக்க கூடாது. ஏதோ தவறுதலாக கூறிவிட்டேன் என்று அவர் கூறி வருத்தம் தெரிவித்தார்.
மகாத்மா காந்தியின் புகழ் பாடி, மோடி ஸ்வச்ச் பாரத் திட்டத்தை அறிமுகப்படுத்திய மிக கொஞ்ச காலத்திலேயே இந்த நிகழ்வு நடந்து தான் மிகவும் சோகம். காந்தி குறித்த ஆர்.எஸ்.எஸ் நிலைப்பாட்டை நன்முறையாக வடிவமைக்க பெரும்பாடுபட்டுக் கொண்டிந்தார் மோடி. ஆனால் சாக்ஷியின் கருத்தால் கட்சிக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. அதே தொகுதியில் தான் இந்த தேர்தலிலும் அவர் போட்டியிடுகிறார்.
மகாத்மா காந்தி கொலையைத் தொடர்ந்து கோல்வாக்கர் நேருவிற்கு எழுதிய கடிதம் ஒன்றில் கோட்ஸே ஒரு யோசனையவற்றவர் என்றும், தவறானவர் என்றும், மோசமான செயலை செய்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்று ஆர்.எஸ்.எஸ் தரப்பு கூறுகிறது. மகாத்மா காந்தி கொலையுண்ட பின்னர் ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டு, கோல்வாக்கர் கைது செய்யப்பட்டார்.
தீவிரமான இந்து கொள்கை உடையவர்கள் காந்தியின் கொள்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டிருப்பவர்கள். தங்களின் சிந்தாந்தத்திற்கு முற்றிலும் வேறுபாட்டான கருத்தினை காந்தி கொண்டுள்ளார் என்று அவர் கூறுவதுண்டு.
ஆனால் ஆர்.எஸ்.எஸ் தரப்பு காந்தியை பொதுவெளியில் கொண்டாடித்தான் வந்தது. கோட்ஸே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தது உண்மை தான். ஆனால் கொலை நடப்பதற்கு வெகு முன்பாகவே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து வெளியேறிவிட்டார் என்று ஆர்.எஸ்.எஸ் தரப்பு எப்போதும் கூறுவதுண்டு. பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பையும் கோட்ஸேவுடன் இணைப்பதை அவர்கள் முற்றிலும் விரும்புவதில்லை
மகாத்மா காந்தியின் கொலைக்கு பின்னால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இருந்தது என்று ராகுல் காந்தியின் கூறிய கருத்திற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆர்.எஸ்.எஸ் புகார் அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.