உங்களின் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மெண்ட் ப்ளானை நீங்கள் தொடர வேண்டுமா?

தற்போதைய சூழலில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இருக்கும் வாய்ப்புகளை மட்டுமே கவனிக்க வேண்டும்.

By: August 5, 2020, 12:09:18 PM

Sandeep Singh 

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் சம்பள குறைப்பு மற்றும் பணி நீக்கம் ஆகியவை நடைபெற்று வருகிறது. சுயதொழில் செய்பவர்கள் மற்றும் சம்பளத்திற்கு வேலைக்கு செல்பவர்களின் எதிர்கால வருமானத்தின் ஸ்திரத்தனமை கேள்விக்குறியாகியுள்ளது.
பொருளாதாரம் பலவீனம் அடைவது. நிறுவனங்களின் வருமானம் குறைவது, சந்தைகளில் ஏற்ற இறக்கம், கொரோனா நோய்க்கு மருந்து கண்டு பிடிப்பதற்காக காத்திருத்தல் போன்றவை மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக கையில் பணபுழக்கத்தை வைத்திருக்க விரும்பும் நபர்களுக்கு இது பெரும் கவலையை அளித்துள்ளது. பலருக்கும் அவர்களின் மாதாந்திர மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளை தொடரலாமா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
இந்த  செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இந்த சமயத்தில் நீங்கள் முதலீடு செய்யலாமா?

சந்தை இறங்குமுகத்தில் சென்றாலும் கூட, முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்ய ஒரு வாய்ப்பு தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பங்குகளை தேர்வு செய்வது என்பதில் ஒருவர் கவனமாக இருக்க வேண்டும். இது மியூச்சுவல் ஃபண்டுகளை ஃப்ரீபெர்ட் மோடிற்கு மாற்றுகிறது. ஆனாலும் இந்த சமயத்தில் நீங்கள் பங்குகளில் முதலீடு செய்வது தேவை தானா என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் அனைவருக்கும் ஒரே விதமான பதில் இந்த கேள்விக்கு வழங்க முடியாது. தற்போது வருமானம் குறித்து உறுதியாக இருக்கும் நபர்கள் ஏற்கனவே இருக்கும் முதலீட்டோடு நின்றுவிடாமல் அவை தொடர்ந்து அதிகரிக்க முதலீடு செய்யலாம். ஆனால் மற்றவர்களுக்கு இது சிக்கல் ஆனது தான்.

அனைத்து தரப்பிலும் நிச்சயமற்ற தன்மை நிலவி வருகிறது. பொருளாதாரத்தில் துவங்கி, நிலையான வேலைகள் மற்றும் சம்பளம் ஆகியவை என எதுவும் நிச்சயமற்று இருப்பது பங்குகளில் இருக்கும் அபாயங்களை அதிகரித்து தான் உள்ளது. மேலும் பங்குகளில் முதலீடு என்பது குறைந்தது மூன்று முதல் 5 ஆண்டுகளுக்கானது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவை தேவையில்லை என்று நிலை வரும் போது மட்டுமே வருமானத்தின் குறிப்பிட்ட பகுதியை மட்டுமே பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும். நடைமுறைப்படி யோசித்து ஒருவர் முடிவினை மேற்கொள்ள வேண்டும்.

தன்னுடைய வருமானம் குறித்த நிலைத்தன்மை பற்றி முழுமையாக அறியாத முதலீட்டாளர், சம்பளத்தில் மேலும் குறைப்பு ஏற்படலாம் என்பதை உணர்பவர், தற்போதைய சூழலில் பணப்புழக்கத்தை அதிகரிக்க இருக்கும் வாய்ப்புகளை மட்டுமே கவனிக்க வேண்டும். இந்த பங்கு சந்தை நிலைமை உங்களின் பில்களை செலுத்தாது என்பதை உணர வேண்டும்.

மேலும் படிக்க : இ.எம்.ஐ சலுகை: மீண்டும் கால அவகாசம் அனுமதித்தால் பயன்படுத்த வேண்டுமா?

உங்களின் SIP-ஐ தொடர வேண்டுமா?

உலக நிகழ்வுகள் அல்லது உள்ளூர் நிகழ்வுகளின் காரணமாக பங்குகள் சரிவது உண்மை தான். தற்போது இருக்கும் பெருந்தொற்று காராண்மாக முதலீட்டாளார் பங்குகளில் இருந்து விலக முடியாது. மூலதன முதலீட்டில் இழப்புகளை உருவாக்கும் ஒன்றாக இது இருக்கும். லிக்விடிட்டியை ரிவர்ஸ் செய்யும் காலம் இதுவாகும். எச்சரிக்கையாக ஒருவர் நடந்து கொள்ள வேண்டுமேனில் பங்குகளில் இருக்கும் SIP-ஐ கடன் கேட்டகிரிக்கு மாற்றுவது தான். முதலீட்டாளர்கள் தங்களின் மூலதனத்தை பாதுகாக்கவும், பணபுழக்கத்தை பராமரிக்கவும் சிஸ்டமெடிக் இன்வெஸ்ட்மெண்ட் திட்டங்களை கடன் நிதியாக மாற்றுவது வழக்கம். குறுகிய கால நிதிகள் மற்றும் மிககுறைந்த கால நிதிகளுக்கு ஏற்ற நடைமுறையாகும். கடந்தகால செயல்திறனைக் கண்காணிப்பதற்குப் பதிலாக, முதலீட்டாளர்கள் AAA மதிப்பிடப்பட்ட ஆவணங்களுக்கு அதிக எக்ஸ்போஷர் மற்றும் குறைந்த செலவு விகிதத்தைக் கொண்ட திட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்று விஷால் தவான், ப்ளான் அஹெட் வெல்த் அட்வான்ஸ் நிறுவனத்தின் தலைவர், கூறியுள்ளார். SIP வரவுகளை நிறுத்துவதைத் பதிலாக, முதலீட்டாளர்கள் வேறு இரண்டு விருப்பங்களைக் கருத்தில் கொள்ளலாம்: அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பணப்புழக்கம் குறித்து கவலைப்பட்டால், மியூச்சுவல் நிதிகளை மூன்று மாதத்திற்கு இடைநிறுத்தம் செய்யலாம். அங்கு பணம் மூன்று மாதங்களுக்கு அவர்களின் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படமாட்டாது.

அல்லது SIP-ன் டிக்கெட் அளாவை குறைக்கலாம். SIP நிதியில் ஒருவர் ரூ. 10000 முதல் ஒரு மாதத்திற்கு குறைத்துக் கொள்ளலாம். அல்லது அதைவிட குறைவான அளவு குறைத்துக் கொள்ளலாம். இது மாதாந்தர செலவுகளை குறைக்கும். சந்தைகளின் வீழ்ச்சியின் காரணமாக குறைந்த நிகர சொத்து மதிப்புகளிலிருந்து நீங்கள் தொடர்ந்து சில நன்மைகளைப் பெறுவதையும் இது உறுதி செய்யும்.

குறைவான பாதிப்புகளை சந்திக்கும் நபர்கள் என்ன செய்ய வேண்டும்?

வருமான பிரச்சனைகள் இல்லாதவர்கள், மாதாந்திர செலவீனங்கள் குறைந்ததால் சேமிப்பை அதிகரித்துக் கொண்டவர்கள் தற்போதையை பங்கினை மட்டும் கவனிக்காமல் மேற்கொண்டு இந்த பங்குகளில் தங்களின் சேமிப்பை அதிகரிக்கலாம். தற்போது முதலீடு என்பது மியூச்சுவல் நிதியின் நிகர சொத்து மதிப்பின் அதிக அளவு யூனிட்டுகள் ட்ராப் ஆவதையும் குறிக்கும். இவை பிற்காலத்தில் முதலீட்டாளர்களுக்கு ஆதாயமாக அமையும். எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் முன்னுரிமை குறைந்தபட்சம் ஆறு மாத காலத்திற்கான ஈ.எம்.ஐ செலவுகள், பள்ளி கட்டணம் மற்றும் வீட்டு செலவுகளை பூர்த்தி செய்ய போதுமானதாக கையில் நிதி இருக்க வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

உங்களின் தற்போதைய முதலீடுகளை என்ன செய்ய வேண்டும்?

உங்கள் கையில் இருக்கும் இருப்பு குறைந்து போவதால், பங்கு சந்தைகளில் உங்களின் மாதாந்திர முதலீட்டை குறைக்க நீங்கள் முடிவெடுக்கலாம். ஆனால் மாதாந்திர தேவைகளுக்காக முதலீட்டை கலைக்க கூடாது. நிலையான வைப்ப்நிதி, காப்பீட்டு திட்டத்தில் முதலீடு மற்றும் கடன் மியூச்சுவல் பண்ட் முதலீடு மற்று சிறு சேமிப்பில் முதலீடு செய்துவது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றில் இருந்து வேண்டுமானால் நீங்கள் விலகலாம். பவுன்ஸ்பேக் ஆனாலும் கூட, இந்த ஆண்டில் அதிக வளர்ச்சியை எட்டிய ஜனவரி மாதத்தை காட்டிலும் தற்போது 12% மட்டுமே குறைவாக உள்ளது. 2 அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.ஐ.பி.யில் முதலீடு செய்தவர்களின் மூலதனமும் கூட எதிர்மறையாகவே இருக்கும் என்பதை நீங்கள் காணலாம்.

எஸ்.ஐ.பி. பங்குகள், முதலீடுகள் மற்றும் மீட்புகள் முறையாக திட்டமிடப்பட்டால் மட்டுமே பலன்களை அளிக்கும். னவே சந்தைகள் உயர்ந்த நிலையில் இருக்கும்போது அல்லது உங்கள் நிதி இலக்கை அடையும்போது உங்கள் லாபத்தை பதிவு செய்யுங்கள். இது போன்ற நேரங்களில் முதலீட்டாளர்கள் தங்களின் பங்குகள், நிலையான வைப்பு நிதிகள், தங்கம், கடன் மியூச்சுவல் பண்டுகள் மற்றும் சிறிய சேமிப்பு திட்டங்கள் ஆகியவற்றை ஒரே இடத்தில் வைக்க கூடாது. இது போன்ற சூழலில் நிதி ஆலோசகரின் அறிவுரைகளை கேட்பதும் நல்லது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Should you continue your systematic investment plan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X