இந்தியாவில் இதுவரை எத்தனை முறை இணைய சேவைகள் முடக்கப்பட்டது தெரியுமா?

பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், எகிப்து, காங்கோ, சிரியா, சூடான், புருண்டி, ஈராக், வெனிசுலா ஆகிய நாடுகளிலும் அடிக்கடி இது போன்ற இணைய சேவை முடக்கம் ஏற்படுகிறது.

By: December 17, 2019, 11:32:58 AM

Karishma Mehrotra

Shutting down the Internet a frequently recurring phenomenon : திங்கள் கிழமையன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்படும் இணைய சேவை முடக்கம் குறித்த முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது சாஃப்ட்வேர் ஃப்ரீடம் லா செண்டர் ( Software Freedom Law Center (SFLC)). இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி நிகழும் நிகழ்வுகளில் ஒன்றாக மாறிவிடுகிறது இணைய சேவை துண்டிப்பு. பதட்டமான சூழல் உருவாகின்ற நிலையில் சட்ட அமலாக்கத்துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் இணைய சேவையை முடிக்கிவிட வலியுறுத்துவது இப்போது மிகவும் சாதரணமான ஒன்றாக மாறிவிட்டது. போராட்டக்குழுக்களின் தகவல் பரிமாற்றத்தை தடுப்பது, போலியான, உண்மைக்கு புறம்பான செய்திகள் பரவலை தடுப்பதற்காக இந்த பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது என்ன?

இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அரசின் உத்தரவால் நடைமுறைப்படுத்தப்படும் இணைய முடக்கங்கள் குறித்த தரவுகளை சேமித்து வைப்பதில்லை. பாராளுமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்கும். தேசிய மற்றும் பிராந்திய செய்தித்தாள்களில் வெளியாகும் செய்திகளை அடிப்படையாக கொண்டே தரவுகளை தயாரித்து வருகிறாது எஸ்.எஃப்.எல்.சி. இந்த தரவுகள் அனைத்தும், அதன் மூலங்களில் இருக்கும் தரவுகள் போன்றே நம்பகத்தன்மை கொண்டது என்று குறிப்பிடத் தவறுவதுமில்லை எஸ்.எஃப்.எல்.சி.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

இணைய முடக்கத்திற்காக செலவிடப்படும் நிதியின் அளவும் சற்று அதிகமானது தான். கடந்த 5 ஆண்டுகளில் 16 ஆயிரம் மணி நேரங்கள் இணையம் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டுள்ளது என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது சர்வதேச பொருளாதார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (Indian Council for Research on International Economic Relations (ICRIER)). பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், எகிப்து, காங்கோ, சிரியா, சூடான், புருண்டி, ஈராக், வெனிசுலா ஆகிய நாடுகளிலும் அடிக்கடி இது போன்ற இணைய சேவை முடக்கம் ஏற்படுகிறது என்று எஸ்.எஃப்.எல்.சி அறிவித்துள்ளது.

2019ம் ஆண்டில் நடைபெற்ற மிக முக்கியமான நிகழ்வுகள்

குடியுரிமை சட்டம் : திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பொதுமக்கல் மேற்கு வங்கத்தில் போராட்டம் நடத்தினர். இணைய சேவை மேற்கு வங்கத்தின் வடக்கு தினாஜ்பூர், மால்டா, முர்ஷிதாபாத், ஹௌரா, வடக்கு 24 பார்கனாஸ் மற்றும் தெற்கு 24 பார்கனாஸ் மாவட்டங்களில் இணையசேவை 15ம் தேதி முடக்கப்பட்டது. அதற்கு முந்தைய தினங்களில் உத்திரப்பிரதேசம் மற்றும் வடகிழக்கு மாவட்டங்களின் சில பகுதிகளில் இணைய சேவைகள் முடக்கப்பட்டது.

இதற்கு முன்பு பாராளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது இந்த ஆண்டின் துவக்கத்தில் வடகிழக்கு மாநிலங்களில் இணைய சேவை முடக்கப்பட்டது. பிறகு டிசம்பர் 10ம் தேதி அருணாச்சலப்பிரதேசம் மற்றும் திரிபுராவில் இணைய சேவைகள் லோக் சபாவில் மசோதா நிறைவேறிய ஒரு நாள் கழித்து இணைய சேவை முடக்கப்பட்டது.

டிசம்பர் 11ம் தேதி, மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேறிய போது, அசாம் மாநிலத்தில் இணைய சேவை முடக்கப்பட்டது. டிசம்பர் 12ம் தேதியும் அது தொடர்ந்தது. அதே நாளில் மேகலாயாவில் 48 மணிநேரம் சேவை துண்டிக்கப்பட்டது.  அலிகாரில் டிசம்பர் 13ம் தேதி இணைய சேவை முடக்கப்பட்டது. ஞாயற்றுக்கிழமையன்று மீரத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக இணைய சேவை முடக்கப்பட்டது. சஹரான்பூரில் ஞாயிறு மற்றும் திங்கள் கிழமையன்று இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

அயோத்தி தீர்ப்பு

உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 9ம் தேதி அயோத்தி வழக்கின் முக்கிய தீர்ப்பினை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பதட்டமான சூழலை சரி செய்ய ராஜஸ்தான் மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது.

ஜம்மு – காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தினை வழங்கிய இந்திய அரசியல் சாசனம் உட்பிரிவு 370-ஐ நீக்கியது இந்திய அரசு. இதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆகஸ்ட் 5ம் தேதியில் இருந்து (நேற்று வரை 134 நாட்கள்) இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் ஜம்மு காஷ்மீரில் 133 நாட்கள் (ஜூலை 8 முதல் நவம்பர் 19,2016 வரை) வரை இணைய சேவை இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. டார்ஜிலிங் பகுதியில் ஜூன் 8 முதல் செப்டம்பர் 25 வரை நூறு நாட்களுக்கு இணைய சேவை முடக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அடிக்கடி இணைய சேவைகள் முடக்கப்படும் மாநிலங்கள்

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 2012ம் ஆண்டில் இருந்து இதுவரை 180 முறை இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினர் மற்றும் கலவரக்காரர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்கள், தேடுதல் வேட்டை, பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதல், துப்பாக்கிச்சூடு போன்றவைகள் காரணமாக இது போன்று சேவைகள் முடக்கப்படும்.  பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவர் புர்ஹான் நினைவு தினம், 2017ம் ஆண்டு சுதந்திர தினம், 2016ம் ஆண்டு குடியரசு தினம், 2015 ரம்ஜான் போன்ற நாட்களிலும் இணைய சேவைகள் ரத்து செய்யப்பட்டது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் 2015ம் ஆண்டு முதல் 67 முறை இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 13ம் தேதி அன்று இரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மொபைல் இண்டெர்நெட் சேவை முடக்கப்பட்டது. தேர்வுகளில் ஏமாற்றக் கூடாது என்பற்காக கடந்த வருடம் ஜூலை 14ம் தேதி மட்டும் ஜூலை 15ம் தேதி கன்ஸ்டபிள் தேர்வு நடைபெற்ற போது இணைய சேவை முடக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 11ம் தேதி, 2018ம் ஆண்டு ரீட் தேர்வுகளின் போதும் இந்த சேவைகள் முடக்கப்பட்டது. அம்பேத்கர் ஜெயந்தியின் போதும் சில நேரங்களில் இது போன்று தடை விதிக்கப்படும்.

2015ம் ஆண்டில் இருந்து இது வரை 19 முறைகள் இணைய சேவைகள் இந்த மாநிலத்தில் துண்டிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் கூட்டு வன்முறைக்கு எதிராக போராட்டம் நடத்திய காலங்களில் இது போன்று சேவை முடக்கப்பட்டது. பீம் ஆர்மி தலைவரின் சகோதரர் கொலை செய்யப்பட்ட போது, சிறிய குழந்தை கொலை செய்யப்பட்ட போது, அசாசுதீன் ஓவைசி அலிகார் பல்கலைக்கழகத்திற்கு வருகிறார் என செய்தி ஒளிபரப்பிய நிறுவனத்திற்கும் சில மாணவர்களுக்கும் இடையே போராட்டம் நடைபெற்ற போது என பலமுறை இங்கு போராட்டங்கள் நடைபெற்று உள்ளது.  மாநிலங்களில் உள்துறை அமைச்சகம் தான் இது போன்ற உத்தரவுகளை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக இடும். இதற்கு தற்காலிக தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம் விதிமுறைகள் 2017  (The Temporary Suspension of Telecom Services (Public Emergency or Public Safety) Rules, 2017) பின்பற்றப்பட்டு வருகிறது.

இது போன்று கலவரம் ஏற்படும் காலங்களில் ஊரடங்கு உத்தரவு 144, இந்திய டெலிகிராஃப் சட்டம் 1885 ஆகியவை பிறப்பிக்கப்படும். ஊரடங்கு உத்தரவினை மாவட்ட ஆணையர் அல்லது துணை ஆணையர் பிறப்பிப்பார்கள்.

மேலும் படிக்க : நாடு தழுவிய மாணவர்கள் போராட்டம் : எச்சரிக்கை செய்யும் பிரதமர் நரேந்திர மோடி

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Shutting down the internet a frequently recurring phenomenon in india

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X