VISHNU VARMA
Southwest monsoon kerala flood wayanad malappuram kozhikode rainfall : தொடர்ந்து இரண்டாவது வருடமாக கேரளாவில் வெள்ளம் மக்களின் வாழ்வை மிகவும் மோசமாக்கியுள்ளது. தொடர் நிலச்சரிவின் காரணமாக 90க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். 2.5 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மழை விட்ட பாடாக தெரியவில்லை. வரும் இரண்டு நாட்களுக்கும் கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை மேலும் அனைவருக்கும் வருத்தத்தை அளிக்கிறது. கேரளாவின் வடக்கு மாநிலங்கள் குறிப்பாக மலப்புரம், வயநாடு பகுதிகள் கடந்த ஆண்டைக்காட்டிலும் அதிக சேதத்தினை சந்தித்துள்ளது.
southwest monsoon kerala flood wayanad malappuram kozhikode rainfall
தென்மேற்கு பருவமழை காலங்களின் முதல் இரண்டு மாதங்கள் மிகவும் வறட்சியான சூழல் நிலவியது. மழைப் பொழிவு இயல்பைக் காட்டிலும் 40 முதல் 50% குறைவாக பதிவானது. ஆனால் அனைத்தும் ஜூலை 2ம் தேதி வரை மட்டுமே. அதன் பின்பு கேரளாவில் 365.99 எம்.எம். மழை பதிவானது. இயல்பாக அந்த காலக்கட்டங்களில் 697.8 எம்.எம். மழை பதிவாகும். (48% மழைக்குறைபாடு). மொத்த ஆட்சியர்களும் வறட்சி நிவாரணத்திற்கு தங்களை தயார் செய்து கொண்டனர். ஆகஸ்ட் மாதத்தின் ஆரம்பத்தில் தென்மேற்கு பருவமழைக் காற்றின் தீவிரம் அதிகரிக்க துவங்கியது. ஆனாலும் கோழிக்கோடு மற்றும் காசர்கோடு ஆகிய பகுதிகளில் மட்டும் மிதமான மழை பதிவானது. அப்போது மழைத் தட்டுப்பாடு 34%மாக குறைந்தது.
மேலும் படிக்க : கேரள வெள்ளம் : நிலச்சரிவில் சிக்கி 92 பேர் பலி
ஆனால் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள், அதாவது வெறும் ஒரே வாரத்தில் பருவமழை தட்டுப்பாடு வெறும் 8%மாக குறைந்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் மலப்புரம் 189.4 எம்.எம். மழையைப் பெற்றது (மலப்புரத்தின் சராசரி மழைப்பொழிவு 114.3 எம்.எம். ஆகும்). வயநாடு தன்னுடைய சராசரி மழைப்பொழிவான 184.5 mm-ஐ விட அதிகமாக, 252.3 எம்.எம். என்ற அளவீல் மழைப் பொழிவை பெற்றது. கோழிக்கோட்டின் சராசரி மழைப்பொழிவு 143.6எம்.எம். ஆகும். ஆனால் இந்த ஆண்டு, இந்த குறிப்பிட்ட 8 நாட்களில் பெய்த மழையின் அளவு 219.8 எம்.எம். ஆகும். முறையாக 66%, 37%, மற்றும் 53% அதிக மழைப்பொழிவை இந்த மாவட்டங்கள் பெற்றுள்ளன.
மேலும் படிக்க : தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் உருவான காற்று அழுத்தமும், கேரள, கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் உருவான காற்று அழுத்த தாழ்வு நிலையும் ஒன்றாக இந்த பகுதியில் மழையை கொட்டிச் செல்ல வழிவகுத்தது. கடந்த வருடமும், இதே போன்று ஆகஸ்ட் மாதம் 2-ஆம் வாரம் கனமழை பெய்தது. இந்திய வானிலை ஆய்வு மண்டலத்தில் வேளை பார்க்கும் உயர் அதிகாரி குறிப்பிடுகையில், இந்நிலை வருங்காலத்திலும் நீடிக்கும். பருவநிலை மாறுபாட்டால் இது போன்ற மழை பெய்து வருகிறது. வருங்காலத்தில் நாம் கண்டறிந்துவிடலாம், எப்போது எங்கே மழை பெய்யும் என்று. ஆனால் நம்மால் கணிக்க முடியாத ஒன்று, எவ்வளவு மழைப்பொழிவை நாம் பெறப்போகிறோம் என்பது தான்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒரு நாள் முழுவதும் பெய்ய வேண்டிய மழை, வெறும் ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரத்தில் பெய்கிறது என்கிறார் கேரள பேரிடர் மேலாண்மை அதிகாரி நிதின் தாவிஸ். இங்கு மட்டும் இல்லை, கர்நாடகா, மகாராஷ்ட்ரா என்று இம்மழை ஒரு கை பார்த்துவிட்டது. ஆசாமில் ஆரம்பமாகி, தென்னிந்தியாவின் சில பகுதிகளை ஒருவழியாக்கிவிட்டது. வரும் வருடங்களில் இதே நிலை தான் நீடிக்கும் என்றும் அவர் அறிவித்தார்.