அயோத்தி சர்ச்சையில் சிக்கிக் கொண்ட 67 ஏக்கர் நிலத்தின் கதை என்ன?

ராமர் கோவில் கட்டமைப்பிற்கான முடிவுகளை சுதந்திரமாக எடுக்க இந்த அறகட்டளைக்கு முழுமையான உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

new Ram temple be built on Muslim graves
new Ram temple be built on Muslim graves

Seema Chishti

Story of 67 acres in Ayodhya adjoining Babri site :  பிரதம அமைச்சர் நரேந்திர மோடி புதன்கிழமை அன்று, ராம் ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்ட அறக்கட்டளை ஒன்றை அமைத்து அதன் பெயரை அறிவித்தார். ஸ்ரீராம் ஜன்மபூமி திர்த்த க்ஷேத்ரா என்ற பெயரில் இயங்க இருக்கும் அறக்கட்டளை அயோத்தியின் சர்ச்சைக்குறிய 67.703 ஏக்கர் நிலத்தினை பராமரிக்க உள்ளது. பக்தர்களின் தேவையை அறிந்து செயல்படும் என்று மோடி அறிவித்தார். ராமர் கோவில் கட்டமைப்பிற்கான முடிவுகளை சுதந்திரமாக எடுக்க இந்த அறகட்டளைக்கு முழுமையான உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

ரவி வர்மா ஓவியங்களுக்கு உயிர் கொடுத்த 11 நடிகைகளும் நடனக் கலைஞர்களும்!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு பாபர் மசூதி அமைந்திருக்கும் 2.77 ஏக்கர் அளவுள்ள நிலத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது. மேலும் இந்த கோவிலைக் கட்டும் பணியினை அறக்கட்டளை ஒன்று மேற்பார்வையிடும் என்றும் அறிவித்திருந்தது. டிசம்பர் 6, 1992ம் ஆண்டு வரையில் இந்த நிலமானது பாபர் மசூதியின் வசம் இருந்தது. தற்போது பாபர் மசூதியுடன் கூடிய 67 ஏக்கர் நிலப்பரப்பினையும் அறக்கட்டளைக்கு வழங்கி தீர்ப்பு வெளியிடப்பட்டது. இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க 

கர சேவகர்கள் பாபர் மசூதியை இடித்த பிறகு பாபர் மசூதி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் அமைந்திருந்த சுமார் 67 ஏக்கர் நிலத்தினையும் அன்றைய வி. நரசிம்மராவ் அரசு கையகப்படுத்தியது. இந்த பகுதியில் சில மசூதிகள், கோவில்கள், வேளாண் நிலங்கள் மற்றும் இடுகாடுகள் ஆகியவை உள்ளது குறிப்பிடத்தக்கது.  அயோத்தி பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியை கையகப்படுத்த அவசரச்சட்டம் ஜனவரி மாதம் 1993ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 143-ன் கீழ் அன்றே உச்ச நீதிமன்றத்திற்கு ரெஃப்ரென்ஸ் அதே நாளில் தரப்பட்டது. இந்த அவசரச் சட்டம் பின்னாளில் The Acquisition of Certain Area at Ayodhya Act, 1993 என்று மாற்றப்பட்டது.

மேலும் படிக்க : பாபர் மசூதி விவகாரம் : புதிய மசூதி கட்ட 5 ஏக்கர் நிலத்தை அறிவித்தது உ.பி. அரசு!

மத்திய அரசின் இந்த முடிவினை எதிர்த்து இஸ்மாயில் ஃபரூக்கின் வழக்கில் தீர்ப்பினை வழங்கியது உச்ச நீதிமன்றம் (Dr M Ismail Faruqui and Ors vs Union of India, October 24, 1994). மத்திய அரசு நிலத்தினை கையகப்படுத்தியது சரி தான் என்றும், ஆனால் அந்த கையகப்படுத்தலின் முடிவானது அர்த்தமான முறையில் அமைய வேண்டும் என்றும் கூறியது. மத்திய அரசின் முடிவிற்கு எதிராக போடப்பட்ட 5 வழக்குகளில் ஒன்று வாபஸ் பெறப்பட்டது. மீதம் இருந்த நான்கு வழக்குகளுக்குமான தீர்ப்பினை கடந்த ஆண்டு வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

1996ம் ஆண்டு ராமஜென்மபூமி நியாஸ் மத்திய அரசிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தினை திருப்பி தருமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் அதன் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பினை வழங்கிய பிறகு தான் சர்ச்சைக்குரிய நிலம் குறித்த முடிவினை மேற்ஒள்ள இயலும் என்றும் அறிவிக்கப்பட்டது. அலகாபாத் நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 30ம் தேதி, 2010ம் ஆண்டு சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சரி சமமாக பங்கிட்டுக் கொள்ளுமாறு நிர்மோஹி அக்ரா, சன்னி மத்திய வக்பு வாரியம், ராம்லல்லா விராஜ்மான் ஆகியோருக்கு தீர்ப்பினை வழங்கியது.

மிக சமீபத்தில், 2019 ஜனவரியில், மத்திய அரசு 1993 ல் கையகப்படுத்திய 67.703 ஏக்கரிலிருந்து அளவுக்கு அதிகமாக இருக்கும் நிலத்தினை உண்மையான உரிமையாளர்களுக்கு ” மீட்டெடுக்க / மாற்றியமைக்க / ஒப்படைக்க” அனுமதி தருமாறு உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது. மத்திய அரசு தன்னுடைய விண்ணப்பத்தில் (ஆனாலும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை) இஸ்மாயில் ஃபருக்கி வழக்கின் தீர்ப்பில் The Acquisition of Certain Areas of Ayodhya Act, 1993- சட்டத்தின் அரசியல் அமைப்பை நிலை நிறுத்தியது. ஆனாலும் இஸ்லாமியர்கள் பாபர் மசூதி அமையப்பெற்றிருக்கும் 0.313 ஏக்கர் நிலத்திற்கு மட்டுமே உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் இந்த நிலைப்பாடு குறித்து பேசிய வழக்கறிஞர் எம்.ஆர். ஷாம்சாத் கூறுகையில் “சர்ச்சைக்குரிய 67 ஏக்கர் நிலத்தினையும் மத்திய அரசு ராமர் கோவில் கட்ட இருக்கும் அறக்கட்டளைக்கே வழங்க உள்ளது. ஆனாலும் பாபர் மசூதியின் மூன்று பகுதிகளிலும் இருக்கும் கல்லறைகள் குறித்து மத்திய அரசு நிச்சயம் தெளிவான முடிவு எடுத்திருக்கும். அதனை இஸ்லாமியர்கள் பயன்படுத்துவதற்கு தடை ஏதும் இருக்காது என்றும், அதனையும் இடித்து ராமர் கோவில் கட்டமாட்டார்கள் என்றும் எதிர்பார்க்கின்றேன். ஏன் என்றால் இதனை ராமரும் கூட விரும்ப மாட்டார்.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Story of 67 acres in ayodhya adjoining babri site

Next Story
Direct Tax Vivad se Vishwas சட்ட மசோதா தாக்கல் – எதிர்க்கட்சிகள் துவக்கத்திலேயே எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?vivad se vishwas bill, tax bill, union budget vivad se vishwas bill,, budget 2020, direct tax, direct tax litigation, express explained, indian express
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com