scorecardresearch

தைவான் தனது பாஸ்போர்ட்டில் எவ்வித மாற்றத்தை மேற்கொண்டுள்ளது? – ஏன்?

Taiwan passport redesigned : கொரோனா உள்ளிட்ட தொற்று பாதிப்பு நேரத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் உதவிகளை நேரடியாக பெறும் முறைக்கும் இந்த மாற்றம் பேருதவி புரியும்

Taiwan, Passport, redesign, Republic of China, Republic of Taiwan, taiwan passport redesigned, republic of china, new taiwan passport, china citizens, express explained, indian express

Neha Banka

தைவான் நாடு. தமது பாஸ்போர்ட்டில் முக்கிய மாற்றம் மேற்கொள்ள உள்ளது. பாஸ்போர்ட்டின் முகப்பு கவரில், ‘Republic of China’ என்று ஆங்கிலத்தில் இருக்கும் வாசகத்தை நீக்க, தைவான் சட்டசபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த வாசகம் நீக்கப்படுகிறது. சீன மொழியில் உள்ள அந்த வாசகம் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாஸ்போர்ட், 2021 ஜனவரி முதல் மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் ஏன்?

தைவான் நாட்டு மக்கள், கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதையடுத்து, வெளிநாடுகளுக்கு செல்ல முற்படும்போது அவர்களது பாஸ்போர்ட்டில் ‘Republic of China’ என்ற வாசகம் உள்ளதால், அவர்கள் நிறைய இன்னலுக்கு ஆளாவதாக ராய்ட்டர்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

இந்தியாவின் பூர்வீக நாய் இனங்களின் வரலாறு அறிவோமா?

ராய்ட்டர்ஸ் செய்தியை மேற்கோள் காட்டி, தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ கூறியதாவது, இந்தாண்டின் துவக்கத்தில், சீனாவின் வுஹான் பகுதியில் தான் கொரோனா வைரஸ் தொற்று துவங்கியது. எங்கள் நாட்டவர்கள் தைவான் நாட்டில் பாதுகாப்பாக இருந்துவந்தபோதிலும், பாஸ்போர்ட்டில் ‘Republic of China’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதால், பலரும் எங்களை சீன நாட்டவர் என்று நினைத்து எங்களை புறக்கணிக்கின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச நாடுகளில் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவந்த நிலையில், தைவான் நாடு துரிதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கையாண்டு, பாதிப்பை குறுகிய காலத்திலேயே கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. பல்வேறு நாடுகள், எங்கள் நாட்டவரை, பாஸ்போர்ட் வைத்து சீன நாட்டவர் என்று எண்ணுவதால், சீனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கு நாங்களும் தண்டனை அனுபவிக்க வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாஸ்போர்ட் மாற்றத்திற்கு கொரோனா மட்டும்தான் காரணமா?

சீனாவிடமிருந்து சமீபத்தில் பிரிந்த தைவான் நாடு, இந்த கொரோனா தொற்று பாதிப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சொந்த இறையாண்மையை காக்கும் பொருட்டு, தங்களது பாஸ்போர்ட்டில் இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.
கொரோனா உள்ளிட்ட தொற்று பாதிப்பு நேரத்தில், உலக சுகாதார நிறுவனத்தின் உதவிகளை நேரடியாக பெறும் முறைக்கும் இந்த மாற்றம் பேருதவி புரியும் என்று அந்நாட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னால் பாஸ்போர்ட்டில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா?

2015ம் ஆண்டில், பாஸ்போர்ட்டில், Republic of China’ என்று உள்ள இடத்தில் Republic of Taiwan என்ற ஸ்டிக்கரை, தைவான் நாட்டு மக்கள் ஒட்டிவந்தனர். இதுபோன்று ஸ்டிக்கர் ஒட்டிய பாஸ்போர்ட் கொண்டவர்களை, சீனாவிற்குள் வர அந்நாடு மறுப்பு தெரிவித்தது. சீனாவை தொடர்ந்து, இந்த ஸ்டிக்கர் ஒட்டிய பாஸ்போர்ட் கொண்ட நபர்களுக்கு, மக்காவ் மற்றும் ஹாங்காங் நாடுகளும் தடைவிதித்தன.

2015ம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், சிங்கப்பூர் நாட்டில், இந்த ஸ்டிக்கர் ஒட்டிய பாஸ்போர்ட்களை வைத்திருந்த 3 பேரை கைது செய்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஸ்டிக்கர் கொண்ட பாஸ்போர்ட்களை கொண்டவர்களை, அமெரிக்காவும் வர தடைவிதித்தது.

தைவானின் இந்த ஸ்டிக்கர் நடவடிக்கை, தைவான் சுதந்திரம் பெற விரும்புவதாகவே, பீஜிங் நினைத்தது. இந்த நடவடிக்கையால், தைவான் – சீனா இடையேயான உறவில் மனக்கசப்பு இருந்துவந்ததை மறக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Explained: Here’s why Taiwan is changing its passport

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Taiwan passport redesign republic of china republic of taiwan taiwan passport redesigned