Advertisment

ட்ரைக்லோசன் பயங்கரம் - கை கழுவும் சோப்பிலும் எச்சரிக்கை தேவை

உதாரணமாக இந்த தனிமம் கலந்த பற்பசையை பயன்படுத்தும் போது தோல் அழற்சி ஏற்படுவதுடன் பல்வேறு இனம் புரியாத பாதிப்புகளும் ஏற்படுவது தற்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
triclosan secrets hand wash soaps - ட்ரைக்லோசன் பயங்கரம் -கை கழுவும் சோப்பிலும் எச்சரிக்கை தேவை

triclosan secrets hand wash soaps - ட்ரைக்லோசன் பயங்கரம் -கை கழுவும் சோப்பிலும் எச்சரிக்கை தேவை

நீங்கள் விமானநிலையம், உணவு விடுதி, உடற்பயிற்சிக் கூடம் என எங்கு சென்றாலும் உங்கள் கைகளை கழுவ ஒரு திரவம் வைக்கப்பட்டிருக்கும். நம் கைகளில் தேங்கும் நுண்ணுயிரிகளை கொல்ல டெட்டால் போனற ஒரு சோப்புத் திரவம் தான் அது. நமக்கு அது மணக்க மணக்க தெரிந்தாலும் அதில் இருக்கும் ஆபத்து குறித்து அறிவதும் தற்போது அவசியமாகி விட்டது. காரணம் அதில் இருக்கும் ட்ரைக்லோசான் எனும் தனிமம் தான். நுண்ணுயிரிகளை கொல்லும் திறன் படைத்த இந்த தனிமம் ஆபத்தானது என எத்தனை பேருக்கு தெரியும்?

Advertisment

ட்ரைக்லோசான் எனும் இந்த தனிமம் முகம் கழுவும் திரவத்தில் இருந்து பற்பசை மற்றும் வாசனை திரவியங்கள் வரை ஒரு உட்பொருளாக சேர்க்கப்படுகிறது. இதற்கு காரணம் இந்த தனிமம் குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு ஆன்டி பாக்டீரியல் என்பது தான். தூய்மை எனும் ஒரு வார்த்தையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சில நிறுவனங்கள் மக்கள் பொதுவாக கூடுமிடங்களில் அதாவது உணவகங்கள் போன்ற இடங்களில் நமது கைகளை கழுவ என்று டெட்டால் போன்று சில திரவங்களை வைக்கின்றன. அனால் இவை நுண்ணுயிரிகளை அளிப்பதுடன் நிற்பதில்லை. பல்வேறு பக்க விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன.

FDA என்று சொல்லப்படும் அரசின் உணவு மற்றும் மருந்துகள் துறையின் சமீபத்திய அறிக்கையில் காணப்படும் செய்தி நம்மை மிகவும் யோசிக்க வைக்கிறது. அந்த அறிக்கையில் நம் கைகளை சுத்தம் செய்ய சாதாரண சோப் மற்றும் தூய்மையான தண்ணீரே போதும். வேதியியல் தனிமங்கள் அடங்கிய சோப்புக்கரைசல் தேவையில்லை.இவை நம் உடலை சுத்தம் செய்வதுடன் கெடுதியும் செய்வதாக குறிப்பிட்டுள்ளது. சில மிருகங்கள் மூலமாக நடத்தப்பட்ட சோதனைகளில் ட்ரைக்லோசான் கலந்த திரவங்கள் மூலம் நம்மை சுத்தம் செய்யும் போது தைராய்டு ஹார்மோன் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு மாளிகைக்கடைக்கு சென்று டெட்டால் போன்ற ஒரு நுண்ணுயிர்க்கொல்லியை வாங்கும் முன்பு அதில் கலந்துள்ள தனிமங்களை ஆராய்வது அவசியம்.

ட்ரைக்லோசான் போன்ற ஒரு அபாயகரமான ஒரு தனிமம் கலந்த ஒரு நுண்ணுயிர்கொல்லியால் நமக்கு கிடைக்கும் நன்மைகளை விட தீமைகளே அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்வது அவசியம். இவை நமக்கு நன்மை செய்வதை விட தீமையே செய்யும் என்பது தான் உண்மை. இவை நாளமில்லாச் சுரப்பிகளை கூட பாதிக்க வைக்கும் வல்லமை படைத்தவை.இனப்பெருக்க ஹார்மோனிகளிலும் ஏற்ற இறக்கங்களை செய்ய வல்லவை.

முக்கியமாக இந்த தனிமம் கலந்த பொருட்களை குழந்தைகள் பயன் படுத்தும் போது ஏற்படும் பாதிப்புகள் மிக அதிகம். உதாரணமாக இந்த தனிமம் கலந்த பற்பசையை பயன்படுத்தும் போது தோல் அழற்சி ஏற்படுவதுடன் பல்வேறு இனம் புரியாத பாதிப்புகளும் ஏற்படுவது தற்போது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கு ஒவ்வாமை, ஆஸ்த்மா மற்றும் சிரங்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படம்.

மொத்தத்தில் தைராய்டு சுரப்பியில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதுடன் நாளமில்லா சுரப்பிகளிழும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. திசு வளர்ச்சி குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், இனப்பெருக்க உறுப்புகளில் நச்சுத்தன்மை என இந்த தனிமம் செய்யும் பாதிப்புகள் மெல்லக் கொள்ளும் விஷமாக நம்முள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ட்ரைக்லோசான் பாதிப்புகள் குறித்த சர்ச்சை தொடங்கிய பின்னர் இப்போது பல்வேறு நிறுவனங்களும் இந்த தனிமத்தை பயன்படுத்துவதை நிறுத்த ஆரம்பித்துள்ளன.இனியாவது வேதியியல் தனிமங்கள் மூலம் கைகளையும் உடலையும் சுத்தப் படுத்துவதை நம் தவிர்த்து வினிகர், எலுமிச்சை போன்ற இயற்கை சுத்திகரிப்பான்களை பயன் படுத்தலாம்.

மொத்தத்தில் தைராய்டு சுரப்பியில் ஏற்ற இறக்கங்களை ஏற்படுத்தி நாளமில்லா சுரப்பிகளிழும் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. திசு வளர்ச்சி குறைபாடுகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், இனப்பெருக்க உறுப்புகளில் நச்சுத்தன்மை என இந்த தனிமம் செய்யும் பாதிப்புகள் மெல்லக் கொள்ளும் விஷமாக நம்முள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ட்ரைக்லோசான் பாதிப்புகள் குறித்த சர்ச்சை தொடங்கிய பின்னர் இப்போது பல்வேறு நிறுவனங்களும் இந்த தனிமத்தை பயன்படுத்துவதை நிறுத்த ஆரம்பித்துள்ளன. இனியாவது நாம் வேதியியல் தனிமங்கள் மூலம் கைகளையும் உடலையும் சுத்தப்படுத்துவதை நம் தவிர்த்து வினிகர், எலுமிச்சை போன்ற இயற்கை சுத்திகரிப்பான்களை பயன் படுத்துவது சிறந்தது. இயற்கையில் கிடைக்கும் பெருநசீராக்கம், டி ட்ரீய, திராட்சை, அன்னாசி கலந்த இயற்கை சுத்திகரிப்பன்கள் எந்த பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது. இதை மக்கள் மனதில் ஆழப்பதிய செய்வதே சிறந்தது.

தமிழில்: த.வளவன்

Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment