Amitabh Sinha
Unusual Storm Cyclone Fani : ஒடிசா கடற்கரையை நெருங்கி நகர்கிறது ஃபனி புயல் (உச்சரிப்பு ஃபோனி). வெள்ளிக்கிழமையன்று ஃபோனி புயல் ஒடிசாவில் உள்ள பூரியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்கும் போது சுமார் 200 கி.மீ வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும் என்று ஒடிசா மற்றும் அதன் அண்டை மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு இது போன்று ஒரு புயல் உருவாகி மியான்மரை தாக்கியதில் 1 லட்சத்து 25 ஆயிரம் நபர்கள் உயிரிழந்தனர். முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தாமல் விட்டதும் தான் இதற்கு காரணம்.
ஃபோனி குறித்த அனைத்து தகவல்களையும் முழுமையாக படிக்க
Unusual Storm Cyclone Fani
இலங்கைக்கு வடகிழக்கே புயல் சின்னம் உருவான தினத்தில் இருந்தே கண்காணிப்புப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. புயல் குறித்த ஒவ்வொரு நிகழ்வினையும் உடனுக்குடன் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செய்திகள் அனுப்பப்படுகிறது. மீனவர்களுக்கு எச்சரிக்கை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தேவையான முன்னேற்பாடுகள், மக்களை இடம் மாற்றும் பணிகள் ஆகியவை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புக் குழு கடந்த சில ஆண்டுகளாக சிறந்ந முறையில் மீட்புப் பணிகளை துரிதமாகவும், திறமையுடனும் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பைலின் என்ற புயல் 2013ம் ஆண்டு ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து விரைவாக நாடு மீண்டதிற்கு அவர்களும் காரணம். அந்த புயல் ஃபனியை விட மிகவும் தீவிரமாக இருந்தது.
இந்தியாவின் கிழக்கு கடற்கரை நகரங்களுக்கு புயல் ஒன்றும் புதிதல்ல. ஒரு வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு வரையில் வங்கக் கடலில் புயல் உருவாகும். மழைக்காலம் துவங்குவதற்கு முன்பாகவும், மழைக்காலம் முடிந்தபின்பும் இந்த புயல்கள் உருவாவது வழக்கமான ஒன்றாகும். அக்டோபர் - நவம்பர் மாதங்களில் ஏற்படும் புயல்களை விட ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏற்படும் புயல்கள் சக்தி வாய்ந்தவைகளாக இருப்பதில்லை.
1891ம் ஆண்டு துவங்கி இன்று வரை 14 முறை மட்டுமே ஏப்ரல் - மே மாதங்களில் கடுமையான புயல்கள் வங்கக் கடலில் உருவாகியதாக தகவல்கள் வெளியாகின்றன. 1956ம் ஆண்டு உருவான ஒரே ஒரு புயல் மட்டும் தான் இந்தியாவில் கரையைக் கடந்தது. மற்ற புயல்கள் அனைத்தும் வங்கதேசம் மற்றும் மியான்மர் போன்ற இதர ஆசிய நாடுகளில் கரையைக் கடந்தன. 1990ம் ஆண்டில் இருந்து வெறும் நான்கே புயல்கள் தான் இந்த காலத்தில் உருவாகியுள்ளன.
ஃபனி கடந்து வந்த பாதை
ஃபனி வெறும் தீவிர புயலாக இல்லாமல் அதி தீவிர புயலாக உறுமாறியுள்ளது. பொதுவாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் போது அதன் காற்றின் வேகம் மணிக்கு 30 முதல் 60 கி.மீ வேகத்தில் மட்டுமே இருக்கும். புயலாக (cyclonic storms) மாறும் போது 61 முதல் 88 கி.மீ வேகம் வரையில் காற்று வீசும். தீவிரமான புயலாக (severe cyclonic storms) மாறும் போது 89 முதல் 117 கி.மீ வேகத்தில் காற்று வீசும்.
அதி தீவிர புயலாக (very severe cyclonic storms) மாறுகையில் 118 முதல் 166 கி.மீ வரை காற்று வீசும். extremely severe cyclonic storms என்ற நிலைக்கு புயல் மாறும் போது காற்றி வேகம் 167 முதல் 221 கி.மீ என்று இருக்கும். சூப்பர் சைக்ளோன்கள் உருவாகும் போது காற்றின் வேகம் 222 கி.மீ வேகத்தில் இருக்கும்.
புயல் எப்படி உருவாகிறது ?
பூமத்திய ரேகைக்கு அருகில் உருவானதால், மற்ற புயல்களில் இருந்து மாறியுள்ளது ஃபனி. புயலானது சூடான பெருங்கடல் நீருக்கு மேலே உருவாகும். கடலின் மேற்பரப்பில் இருந்து 60 மீட்டர் ஆழத்தில், குறைந்தது 28 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் புயல் உருவாகும். அதனால் தான் ஏப்ரல் - மே மற்றும் அக்டோபர் - டிசம்பர் காலங்களில் புயல்கள் உருவாகின்றன.
குறைந்த காற்றுடன் கூடிய அந்த சூழலில் எதிர்கடிகார சுழற்சியில் நீர் சுழலும் போது புயல்கள் உருவாகின்றன. இந்த காலகட்டத்தில் வங்கக் கடலின் தெற்கு பகுதியில் காற்றானது மேற்கில் இருந்து கிழக்கும், வடக்கு பகுதியில் கிழக்கில் இருந்து மேற்கிலும் வீசும். இதனால் இந்த சுழல் உருவாகிறது.
புயல் உருவான பின்பு பொதுவாக புயல்கள் வடமேற்காக நகரத்துவங்கும். எவ்வளவு நேரம் புயல் பொறுமையாக நகர்கிறதோ அவ்வளவு தூரம் பாதிப்புகளை தரும் சக்தி வாய்ந்த புயலாக உருமாறும் என்பது புயலுக்கென இருக்கும் விதியாகும். பசுபிக் பெருங்கடலில் உருவாகும் புயல்கள் வங்கக்கடலில் உருவாகும் புயல்களை விட அதிக சக்தி வாய்ந்தவையாக இருக்கின்றன.
ஏப்ரல் மே மாதங்களில் உருவாகும் புயல்கள் பொதுவாக வங்கக் கடலில் உருவாகும். கடற்கரையில் இருந்து சில நூறு கி.மீ தொலைவிற்கு அப்பால் இந்த புயல்கள் உருவாகும். ஆனால் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை உருவாகும் புயல்கள் பசுபிக் கடலில் உருவாகும் புயல்களின் தாக்கத்தால் உருவாகுபவை. தென்கிழக்கு ஆசிய நாடுகளையும், தெற்கு சீன கடலையும் கடந்து வரும் போது அவை வலுவிழந்து விடுகின்றன.
10° அட்ச ரேகையில், சென்னை அல்லது திருவனந்தபுரத்தினை இணைக்கும் கோட்டில் வங்கக் கடலில் உருவாகும். ஆனால் ஃபனி புயலோ பூமத்திய ரேகைக்கு அருகே 2°யில் உருவாகியுள்ளது. வங்கக்கடலில் உருவாகும் புயல்களில் இருந்து அதிக அளவு வித்தியாசப்படுகிறது இந்த புயல் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் சென்னையை நோக்கி நகர்ந்த புயல் மெதுவாக தன் பாதையை மாற்ற வடகிழக்காக நகர்ந்து ஒடிசாவில் நாளை கரையை கடக்க உள்ளது. உருவான இடத்தில் கொஞ்சம் நிலைத்திருந்து தமிழக கடற்கரை மாவட்டங்களில் மழையை கொடுத்திருந்தால் நிச்சயமாக சாதரண புயலாக அது இருந்திருக்கும். என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.