ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ இணைந்து அர்பன்பைபர் நிறுவனத்திற்கு நிதி அளிப்பது ஏன்?

போட்டியாளர்களான Swiggy மற்றும் Zomato இணைவதால் முக்கியத்துவம் பெறு முதலீட்டுச் சுற்று; இரு நிறுவனங்களும் வெவ்வேறு எதிர்கால திட்டங்களுடன் ஸ்டார்ட்அப்களுக்கு வியூக நிதியுதவி

போட்டியாளர்களான Swiggy மற்றும் Zomato இணைவதால் முக்கியத்துவம் பெறு முதலீட்டுச் சுற்று; இரு நிறுவனங்களும் வெவ்வேறு எதிர்கால திட்டங்களுடன் ஸ்டார்ட்அப்களுக்கு வியூக நிதியுதவி

author-image
WebDesk
New Update
ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ இணைந்து அர்பன்பைபர் நிறுவனத்திற்கு நிதி அளிப்பது ஏன்?

Pranav Mukul

Explained: Why have rivals Zomato and Swiggy come together to fund SaaS company UrbanPiper?: உணவு விநியோகத்தில் போட்டி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato இணைந்து SaaS நிறுவனமான UrbanPiper இல் முதலீடு செய்துள்ளனர். UrbanPiper நிறுவனமானது உணவகங்களுக்கு தங்கள் செயல்பாடுகளை இயக்க உதவும் ஒற்றை சாளர தளத்தை (ஒரே தளத்தில் அனைத்து செயல்பாடுகளும்) வழங்குகிறது. மெக்டொனால்ட்ஸ், பீட்ஸா ஹட், கேஎப்சி, சப்வே, டகோ பெல், ரெபெல் ஃபுட்ஸ் போன்ற மார்க்கீ உணவக சங்கிலிகளைக் கையாளும் பெங்களூரை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் நிறுவனமான UrbanPiper, அதன் சீரிஸ் பி நிதி சுற்றில் $24 மில்லியன் திரட்டியதாக திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முதலீட்டு சுற்று

Advertisment

தற்போதைய முதலீட்டாளர்களான Sequoia Capital India மற்றும் Tiger Global ஆகியோரால் ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ ஆகியவை புதிய முதலீட்டாளர்களாக சேர்க்கப்பட்டன. "பங்கஜ் சத்தா (ஷிஃப்ட்), அங்கித் நாகோரி (க்யூர்ஃபுட்ஸ்), சாஹில் கோயல் மற்றும் விஷேஷ் குரானா (ஷிப்ரோக்கெட்), காதிம் பாட்டி மற்றும் வரா குமார் (வாட்ஃபிக்ஸ்) உள்ளிட்ட புகழ்பெற்ற முதலீட்டாளர்களும் நிதிச் சுற்றில் பங்கேற்றனர்," என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் செய்யப்படும் அனைத்து ஆன்லைன் உணவு ஆர்டர்களில் 18 சதவீதத்திற்கும் மேலாக செயலாக்கம் செய்து வருவதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 மடங்குக்கு மேல் வளர்ந்துள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. "தற்போது, ​​ஒரு உணவகம் சராசரியாக 6-10 வெவ்வேறு ஆன்லைன் சேனல்கள்/ஒருங்கிணைப்பாளர்களுடன் பதிவுசெய்கிறது. எனவே பல டேப்லெட்டுகள்/டாஷ்போர்டுகளை நிர்வகிப்பது சவாலானது. UrbanPiper மூலம், உணவகங்கள் இந்த அனைத்து சேனல்களையும் ஒரே டேஷ்போர்டில் ஒருங்கிணைத்து, அதை அவற்றின் விற்பனை புள்ளிகளுடன் இணைக்கலாம், இதன் விளைவாக ஆர்டர் தோல்வியில் 70 சதவீதம் குறைகிறது,” என்று அர்பன்பைபர் கூறியது.

இதையும் படியுங்கள்: Explained: அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் குழந்தைகளை பாதிக்கும் ‘மர்ம’ கல்லீரல் நோய்!

Advertisment
Advertisements

இந்தியாவில் 150க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட இந்நிறுவனம், அடுத்த ஓராண்டில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை 250க்கும் அதிகமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்தின் முக்கியத்துவம்

முதலீட்டுச் சுற்றில் பேசுகையில், Sequoia இந்தியாவின் நிறுவனர் ஷ்ரேயன்ஷ் தாக்கூர் கூறினார்: “தொற்றுநோயால் ஏற்படும் இடையூறுகள் காரணமாக, வணிகர்கள் இப்போது டிஜிட்டல் சேனல்களை ஏற்று தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்த விரும்புகிறார்கள். UrbanPiper இந்த டிஜிட்டல் மாற்றத்தில் முன்னணியில் உள்ளது மற்றும் F&B சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள வணிகர்களுடன் டிஜிட்டல் நிறுவனங்களை இணைக்கும் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு வியூக ரீதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. Sequoia Capital India, UrbanPiper குழுவுடனான கூட்டாண்மையை ஆழமாக்குவதில் உற்சாகமாக உள்ளது, ஏனெனில் அவர்கள் உலகளவில் உணவகங்களை மேம்படுத்துவதற்கான தங்கள் பணியை மேலும் மேம்படுத்தி வருகின்றனர், மேலும், இந்த கூட்டாண்மைக்கு Zomato மற்றும் Swiggy ஐ வரவேற்கிறது.

முதலீட்டுச் சுற்று முக்கியத்துவம் பெறுகிறது, ஏனெனில் இது போட்டியாளர்களான Swiggy மற்றும் Zomatoவை முதல் முறையாக ஒரே மேசையில் கொண்டுவருகிறது. இரு நிறுவனங்களும் வெவ்வேறு எதிர்கால திட்டங்களுடன் ஸ்டார்ட்அப்களுக்கு வியூக நிதியுதவி அளித்து வருகின்றன. ஸ்விக்கி சமீபத்தில் பைக் ஒருங்கிணைப்பு பிளாட்ஃபார்ம் ரேபிடோவில் $180 மில்லியன் முதலீட்டை செய்தது. அதே நேரத்தில் Zomato விரைவு-வணிக நிறுவனமான Blinkit ஐ வாங்க ஒப்புக்கொண்டது, மேலும் உணவு ரோபோட்டிக்ஸ் நிறுவனமான முகுந்தா ஃபுட்ஸ் நிறுவனத்தில் பங்குகளை வாங்கவும் ஒப்புக்கொண்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Swiggy Zomato Economy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: