Om Marathe
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்க-தென் கொரியா உறவுகளில் சிக்கல் இருந்து வருகிறது, இரு நாடுகளும் நீண்டகால பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உடன்படவில்லை. இருப்பினும், மிக சமீபத்தில், அவர்களுக்கு இடையேயான உறவுகள் ஒரு எதிர்பாராத தருணத்தில் மாறியதற்கான காரணம - ஒரு மீசை.
2018 ஆம் ஆண்டில் சியோலில் அமெரிக்க தூதர் ஹாரி ஹாரிஸ் வந்ததிலிருந்து, தென் கொரியர்கள் அவரது முக சிகை அலங்காரத்திற்கு எதிராக தாக்கி பேசி வந்தனர். இரண்டாம் உலகப் போர் முடிவடைவதற்கு மூன்றரை தசாப்தங்களுக்கு முன்னர் ஏகாதிபத்திய ஜப்பான் தங்கள் நாட்டை கொடூரமாக அடக்கியதை நினைவூட்டுவதாக அவரது தடிமனான மீசை இருப்பதாக குற்றம் சாட்டினர்.
இறுதியாக, சனிக்கிழமையன்று, சியோலில் உள்ள அமெரிக்க தூதரகம், ஹாரிஸ் மீசையிலிருந்து எடுத்துவிட்டதாக ட்வீட் செய்தது. ஆனால் வேறு காரணம் தெரிவிக்கப்பட்டது. அதாவது, வெப்பமான கோடை மாதங்களில் “கொஞ்சம் குளிராக” உணர வேண்டும் என்பதற்காக மீசையை எடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
மீசை பிரச்சனை
தென் கொரியாவில் உள்ள பலருக்கு, அமெரிக்க தூதரின் மீசை, 1910 மற்றும் 1945 க்கு இடையில் நாட்டின் காலனித்துவ காலத்தின் வலிமிகுந்த நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது.
கொரோனா பரிசோதனை: வேகம் பிடிக்கும் உ.பி., தமிழ்நாடு- மஹாராஷ்டிரா நிலை என்ன?
ஹாரிஸுக்கு ஜப்பானிய பாரம்பரியம் உள்ளது என்பது அவருக்கு தொல்லைகளை அதிகரித்தது. அவர் ஒரு ஜப்பானிய தாய் மற்றும் அமெரிக்க கடற்படை அதிகாரிக்கு மகனாக பிறந்தார்.
2018 ஆம் ஆண்டில் ஹாரிஸ் தென் கொரியாவின் தூதராக பதவியேற்ற போது, ஜப்பானிய பாரம்பரிய மீசையை வேண்டுமென்றே வைத்துக் கொண்டு வந்தது தங்கள் நாட்டிற்கு அவமானம் என்று பல உள்ளூர்வாசிகள் நினைத்தனர். 2019 ஆம் ஆண்டில் அமெரிக்க கொள்கைகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் முக முடிகளுக்கு பதிலாக ஹாரிஸின் முகத்தைக் காட்டும் பலகைகளை வைத்திருந்தனர்.
டிசம்பர் 2019 இல், கொரியா டைம்ஸ் “ஹாரிஸின் மீசை கொரியாவை அவமதிக்கும் செயல்" என்று குறிப்பிட்டது.
ஹாரிஸ் தனது மீசையால் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார், மேலும் அமெரிக்க கடற்படையில் தனது ஆண்டுகால வாழ்க்கைக்குப் பிறகுதான் மீசை வைக்கத் தொடங்கினார். கடற்படையில், அவர் மீசையை வழித்து எடுத்து பணிபுரிய வேண்டியிருந்தது. ஒரு நேர்காணலில், ஹாரிஸ், “நான் கொரியாவிற்கான அமெரிக்க தூதர், கொரியாவிற்கான ஜப்பானிய-அமெரிக்க தூதர் அல்ல” என்றார்.
இறுதியாக இந்த வாரம் ஹாரிஸ் மீசையை அகற்றினார். ஆனால் கோடை வெப்பத்தின் போது மாஸ்க் அணியும்போது உண்டாகும் அசௌகரியத்தை தடுக்கவே மீசையை எடுத்தேன் என்று கூறினார்.
தென் கொரியா-ஜப்பான் பதட்டங்கள்
தென்கொரியாவும் ஜப்பானும் கிழக்கு ஆசியாவில் அமெரிக்காவின் முக்கிய வர்த்தக மற்றும் பாதுகாப்பு பார்ட்னர்களாக உள்ளன, வாஷிங்டன் இப்போது ஏழு தசாப்தங்களாக இரு நாடுகளிலும் ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்களை நிறுத்தியுள்ளது.
தென் கொரியர்கள் ஜப்பானிய காலனித்துவ ஆட்சியின் வேதனையான நினைவுகளைக் கொண்டிருந்த போதிலும், இரு நாடுகளும் 2018 ல் 88 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு வலிமையான வர்த்தக உறவைக் கட்டியெழுப்பின. சமீபத்திய ஆண்டுகளில், காலனித்துவ காலம் மீண்டும் சியோல்-டோக்கியோ உறவுகளைத் தொந்தரவு செய்துள்ளது.
செவ்வாய்க் கிரகப் பயணம்: நுண்ணுயிர் மாசுபாடுகள் பேராபத்தை ஏற்படுத்துமா?
ஜப்பான் நிறுவனங்களால் பாதிக்கப்பட்ட கொரிய தொழிலாளர்கள், ஜப்பானிய நிறுவனங்களிடமிருந்து இழப்பீடு கோர முடியும் என்று தென் கொரியாவின் உச்ச நீதிமன்றம் 2018 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அளித்த தீர்ப்பு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. இதனால், கோபமடைந்த ஜப்பான், 1965ம் ஆண்டு போடப்பட்ட நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் காலனித்துவ காலத்திலிருந்து எழும் கூற்றுக்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக கூறியது. அதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுவிழந்து வருகின்றன.
பல தசாப்தங்களாக, கிழக்கு ஆசிய சக்திகளுக்கு இடையில் ஒரு மத்தியஸ்தரின் பங்கை அமெரிக்கா வகித்தது. எவ்வாறாயினும், இந்த முறை அமெரிக்கா ஒரு அலட்சிய அணுகுமுறையைக் கொண்டிருந்தது, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து அமெரிக்க துருப்புக்கள் இருப்பதற்காக சியோல் மற்றும் டோக்கியோவிலிருந்து பல பில்லியன்களைக் கோருவதில் மும்முரமாக இருந்தார்.
தி நியூயார்க் டைம்ஸ் கருத்துப்படி, அமெரிக்க தூதர் ஹாரிஸ் தென் கொரியாவில் டிரம்பின் கோரிக்கையை முன்வைத்து வந்தார், மேலும் வட கொரியாவுடன் பரிமாற்றங்களைத் தொடரும் முன், சியோல் அமெரிக்காவுடன் கலந்தாலோசிக்கும்படி கேட்டுக் கொண்டார். இது தென் கொரியாவின் ஆளும் கட்சிக்குள்ளேயே முணுமுணுப்புக்கு வழிவகுத்தது, சில உறுப்பினர்கள் ஹாரிஸ் "ஒரு கவர்னர் ஜெனரலைப் போல செயல்படுகிறார்கள்" என்று புகார் கூறினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil