செவ்வாயன்று, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு (WHO) அமெரிக்க நிதியை முடக்குவதாக அச்சுறுத்தியுள்ளார், சர்வதேச அமைப்பு, கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான சரியான எச்சரிக்கையை தவறவிட்டுவிட்டதாக கூறியுள்ளார்.
COVID-19 விவகாரத்தில் குறித்து WHO தவறாக கணித்ததாகவும், அதன் அணுகுமுறையை அதிகம் சீனாவுக்கு சாதகமகாவே இருப்பதாக டிரம்ப் கூறினார்,
அமெரிக்க ஜனாதிபதி இந்த அமைப்புக்கான அமெரிக்க நிதியை நிறுத்துவதாக அறிவித்தார், பின்னர் பின்வாங்கினார், அத்தகைய நடவடிக்கையை வலுவாக பரிசீலிப்பதாக கூறினார்.
R0 குறியீடு என்றால் என்ன? கொரோனா வைரஸ் பாதிப்பை இதன்மூலம் அளவிட முடியுமா?
WHOக்கு எவ்வாறு நிதி திரட்டப்படுகிறது?
WHO க்கு நிதியளிக்க நான்கு வகையான பங்களிப்புகள் உள்ளன.
இவை மதிப்பிடப்பட்ட பங்களிப்புகள், குறிப்பிட்ட தன்னார்வ பங்களிப்புகள், முக்கிய தன்னார்வ பங்களிப்புகள் மற்றும் PIP பங்களிப்புகள்.
WHO வலைத்தளத்தின்படி, மதிப்பிடப்பட்ட பங்களிப்புகள் என்பது, அமைப்பில் உறுப்பினராக இருப்பதற்கு நாடுகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாகும். ஒவ்வொரு உறுப்பு நாடுகளும் செலுத்த வேண்டிய தொகை நாட்டின் செல்வம் மற்றும் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது கணக்கிடப்படுகிறது.
தன்னார்வ பங்களிப்புகள் உறுப்பு நாடுகளிலிருந்து (அவற்றின் மதிப்பிடப்பட்ட பங்களிப்புக்கு கூடுதலாக) அல்லது பிற கூட்டு நாடுகளிடம் இருந்து வருகின்றன. அவை குறைவான தொகையில் இருந்து அதிகமானது வரை இருக்கலாம்.
முக்கிய தன்னார்வ பங்களிப்புகள் குறைந்த நிதியுதவி நடவடிக்கைகளை அனுமதிக்கின்றன. உடனடி நிதி கிடைக்காதபோது ஏற்படும் சிக்கல்களை இவை எளிதாக்குகின்றன.
மனித தொற்றுநோய்களுடன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களைப் பகிர்வதை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும், மற்றும் வளரும் நாடுகளின் தடுப்பூசிகள் மற்றும் பிற தொற்றுநோய் தொடர்பான பொருட்களுக்கான சப்ளைகளை அதிகரிப்பதற்கும் 2011 ஆம் ஆண்டில் தொற்று காய்ச்சல் தயாரிப்பு (பிஐபி) பங்களிப்புகள் தொடங்கப்பட்டன.
சமீபத்திய ஆண்டுகளில், WHO க்கு மதிப்பிடப்பட்ட பங்களிப்புகள் குறைந்துவிட்டன, இப்போது அதன் நிதியில் நான்கில் ஒரு பங்கிற்கும் குறைவாகவே உள்ளன. இந்த நிதிகள் WHO க்கு முக்கியமானவை, ஏனென்றால் அவை ஒரு கணிக்கக்கூடிய அளவை வழங்குகின்றன மற்றும் குறுகிய நன்கொடையாளர்களை சார்ந்து இருப்பதைக் குறைக்கின்றன.
இந்தியாவில் கொரோனா பரவல் வேகம்: மாநிலம் வாரியாக நிலைமை எப்படி?
மீதமுள்ள பெரும்பாலான நிதிகளுக்கு தன்னார்வ பங்களிப்புகள் உள்ளன.
WHO இன் தற்போதைய நிதி முறை
2019 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில், மொத்த பங்களிப்புகள் 5.62 பில்லியன் டாலர்கள், மதிப்பிடப்பட்ட பங்களிப்புகள் 956 மில்லியன் டாலர்கள், குறிப்பிட்ட தன்னார்வ பங்களிப்புகள் 4.38 பில்லியன் டாலர்கள், முக்கிய தன்னார்வ பங்களிப்புகள் 160 மில்லியன் டாலர்கள் மற்றும் பிஐபி பங்களிப்புகள் 178 மில்லியன் டாலர்கள்.
யுனைடெட் ஸ்டேட்ஸ் தற்போது WHO இன் மிகப்பெரிய பங்களிப்பாளராக உள்ளது, இது 553.1 மில்லியன் டாலர்களை வழங்குவதன் மூலம் மொத்த நிதியில் 14.67 சதவீதத்தை நிரப்புகிறது.
அமெரிக்காவைத் தொடர்ந்து பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை 9.76 சதவீதம் வழங்குகிறது. அதாவது, 367.7 மில்லியன் டாலர்.
மூன்றாவது பெரிய பங்களிப்பாளராக 8.39 சதவீதத்துடன் GAVI தடுப்பூசி அலையன்ஸ் உள்ளது, இங்கிலாந்து (7.79 சதவீதம்) மற்றும் ஜெர்மனி (5.68 சதவீதம்) முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்தில் உள்ளன.
அடுத்த நான்கு பெரிய நன்கொடையாளர்கள் சர்வதேச அமைப்புகள்: மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (5.09 சதவீதம்), உலக வங்கி (3.42 சதவீதம்), ரோட்டரி இன்டர்நேஷனல் (3.3 சதவீதம்) மற்றும் ஐரோப்பிய ஆணையம் (3.3 சதவீதம்). மொத்த பங்களிப்புகளில் இந்தியா 0.48 சதவீதமும், சீனா 0.21 சதவீதமும் ஆகும்.
மொத்த நிதிகளில், 1.2 பில்லியன் டாலர் ஆப்பிரிக்கா பிராந்தியத்திற்கும், கிழக்கு மத்தியதரைக் கடல் பிராந்தியத்திற்கு 1.02 பில்லியன் டாலரும், WHO தலைமையகத்திற்கு 963.9 மில்லியன் டாலரும், தென்கிழக்கு ஆசியா (198.7 மில்லியன் டாலர்), ஐரோப்பா (200.4 மில்லியன் டாலர்), மேற்கு பசிபிக் (2 152.1 மில்லியன்) ), மற்றும் அனைத்து திசைஅமெரிக்காவுக்கும் (39.2 மில்லியன்) முறையே வழங்கப்படுகிறது. இந்தியா, தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும்.
போலியோ ஒழிப்புக்கு தான் அதிகபட்சமாக 26.51 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது, அதனைத் தொடர்ந்து அத்தியாவசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து சேவைகளுக்காக (12.04 சதவீதம்), மற்றும் தடுக்கக்கூடிய நோய்களுக்கான தடுப்பூசிகள் தயாரிக்க (8.89 சதவீதம்) நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.