விமான போக்குவரத்து சந்தையில் குறைந்த கட்டண சேவையை வழங்கும் ஆகாஷாவின் பங்கு என்ன?

ULCC-கள் லாபத்தை உறுதி செய்ய குறைந்த செலவில் செயல்படுகின்றன. இருப்பினும் இந்திய சந்தைகளில் இந்த மாடல்கள் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

airline, ulcc, lcc, rakesh, akasa

Pranav Mukul

Akasa low-cost carrier backed by investor Rakesh Jhunjhunwala : பங்குச் சந்தை முதலீட்டாளர் ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் கீழ் செயல்படும் எஸ்.என்.வி. ஏவியேசன் ஆகாஷா என்ற பெயரில் புதிய ஏர்லைன் சேவையை துவங்க திட்டமிட்டுள்ளது. சிவில் ஏவியேசன் துறையிடம் தற்போது தடையில்லா சான்றிதழை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகாஷா குறைந்த கட்டணம் அல்லது மிகக் குறைந்த கட்டணத்துடன் கூடிய விமான சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. தன்னுடைய சேவையை அடுத்த ஆண்டு கோடைகாலத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகாஷா என்றால் என்ன?

இந்த நிறுவனத்தில் 40% பங்குகளை கொண்ட ராகேஷ் இந்த ஏர்லைன் சேவையை துவங்கியுள்ளார். முன்னாள் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் வினய் துபே மற்றும் இண்டிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆதித்யா கோஷ் போன்ற முக்கிய உறுப்பினர்களை கொண்டு இந்த சேவையை துவங்க உள்ளார் ராகேஷ். மும்பையை தளமாக கொண்ட இந்த முதலீட்டாளர் 35 மில்லியன் டாலர்களை இதில் செலவிட உள்ளார். மேலும் அடுத்த 4 ஆண்டுகளில் 70 விமானங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார பின்புலம் பற்றி பொருட்படுத்தாமல் அனைத்து இந்தியர்களுக்குமான சேவையை அகாஷா வழங்கும் என்று துபே தெரிவித்தார். 2022 கோடையில் இந்தியா முழுவதும் விமான சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் கலைப் பொருட்கள் அரசிடம் தான் உள்ளது; விமான நிறுவனம் மட்டுமே டாட்டாவுக்கு சொந்தம்

யு.எல்.சி.சி. என்றால் என்ன?

அல்ட்ரா லோ காஸ்ட் கேரியர்ஸ் (ULCC (ultra low cost carriers )) ஏர்லைன்ஸ் மாதிரியில், இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற பட்ஜெட் விமான சேவைகளைக் காட்டிலும் மிகவும் குறைவான கட்டணத்தில் விமான சேவைகள் வழங்கப்படும். லோ காஸ்ட் மாடலில் ( low-cost model) பொதுவான விமான சேவையில் வழங்கப்படும் சில முக்கிய வசதிகளை நிறுத்தி வைக்கின்றன. உதாரணமாக கூற வேண்டும் என்றால் இருப்பிட தேர்வு, உணவு, மற்றும் பானங்கள் ஆகியவை இந்த மாடலில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது. அல்ட்ரா லோ காஸ்ட் மாடலில் செக்ட்-இன் பேக்கேஜ், கேபின் பேக்கேஜ் போன்ற மேலும் சில சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்காது. பாரம்பரியமாக, LCC-கள் கணிசமாக குறைந்த கட்டணத்துடன் செயல்படுகின்றன மற்றும் முழு சேவை கேரியர்களை விட ஓரளவு குறைந்த செலவில் மட்டுமே செயல்படுகின்றன, ULCC-கள் லாபத்தை உறுதி செய்ய குறைந்த செலவில் செயல்படுகின்றன. இருப்பினும் இந்திய சந்தைகளில் இந்த மாடல்கள் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்று நிபுணர்கள் கருதுகின்றனர். ஏன் என்றால் இங்கே குறைந்த செலவில் இயங்கும் விமான முனையங்கள் இல்லை. ஆனால் ஐரோப்பாவில் பரவலாக இருக்கும் இத்தகைய முனையங்களை ரியான் ஏர், ஈஸிஜெட் போன்ற விமான சேவை நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்த துறையில் புதிய நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது?

2019ம் ஆண்டு ஜெட் ஏர்வேஸ் மூடப்பட்ட பிறகு, ஏர் இந்தியாவின் டிஸ்இன்வெஸ்ட்மெண்ட் டாட்டா குழுமம் பெற்றுக் கொண்டது, மேலும் இதர நிறுவனங்கள் மிகவும் பலவீனமாக இருக்கின்ற சூழலில் விமான நிறுவனங்கள் முக்கிய பங்குதாரர்களுடன் சந்தைப் பங்கை ஒருங்கிணைக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. ஆனால் அதே நேரத்தில் கொரோனா தடுப்பூசி அதிக அளவு செலுத்தப்பட்ட நிலையில் இந்த துறையில் மேலும் முன்னேற்றம் காணப்படும் என்று நம்புகின்றனர். ப்ளூம்பெர்க் டி.வி.க்கு பேட்டி அளித்த ஜுன்ஜுன்வாலா, இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் இருக்கும் தேவை குறித்து எனக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது. புதிய நிறுவனங்கள் இதில் வந்தால் மீள மாட்டார்கள் என்று நினைக்கின்றேன்” என்று கூறினார்.

மத்திய அரசு vs டாடா நிறுவனம்: ஏர் இந்தியா விற்பனையில் யாருக்கு லாபம்?

தற்போது, ​​இன்டர் க்ளோப் ஏவியேஷன் லிமிடெட் நடத்தும் பட்ஜெட் விமான நிறுவனமான இண்டிகோ, உள்நாட்டு பயணிகள் சந்தையில் பாதிக்கு மேல் சந்தை பங்கைக் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமாகும், அதைத் தொடர்ந்து ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட், கோ ஏர், விஸ்தாரா மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகியவை உள்ளன. ஆரம்பத்தில் கோ ஏர் என்று பொதுவழங்கலில் ஆவணங்களை சமர்பித்த நிறுவனம் கோஃபர்ஸ்ட் என்று பெயரை மாற்றி யூ.எல்.சி.சி. பிஸினஸ் மாடலுக்கு தன்னை தயார்ப்படுத்தி வருகிறது. கோவிட் -19 காரணமாக 2020-21 (ஏப்ரல்-மார்ச்) இல் ஏற்பட்ட இழப்புகளுக்கு பிறகு தற்போது இந்திய விமான சேவைப் பிரிவு எழுச்சியை காண்கிறது. இந்த நிலைமை புதிய நிதியாண்டில் இரண்டாவது அலையுடன் நீடித்தது. ஆனாலும் பெரிய இழப்புகளை, கடன்களை இந்த கோவிட் தொற்று ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான விமான நிறுவனங்கள் மறு முதலீடு செய்வதற்கான மிகக் குறைந்த வழிகளைக் கொண்டுள்ளன. இந்திய அரசு கிட்டத்தட்ட எந்த நேரடி ஆதரவையும் வழங்கவில்லை; மறுசீரமைப்பு நோக்கங்களுக்காகக் கூட கடன் வழங்குபவர்கள் விமான நிறுவனங்களுக்கு கடன் தர மறுத்துவிட்டனர். குத்தகைதாரர்கள், குத்தகை தர மறுக்கும் நிறுவனங்கள் மீது விரைவில் அழுத்தம் செலுத்த துவங்கும். அதே நேரத்தில் நாம் விலை உயர்ந்த விமான சேவை சூழலுக்கு செல்வோம். பணியாளர்களின் மன உறுதியும் குறைந்து வருகிறது என்று இந்தியா ஏர்லைன் அவுட்லுக்இல் விமான ஆலோசனை நிறுவனமான சி.ஏ.பி.ஏ குறிப்பிட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: What is akasa low cost carrier backed by investor rakesh jhunjhunwala

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com