Inflamm-aging. இதனை inflammaging அல்லது inflamm-ageing என்றும் அழைக்கலாம். இது வயதானவர்களிடையே ஏற்படும் வயது மூப்பு காரணமான நோய்களை தீவிரப்படுத்தும் ஒரு பாதிப்பாகும். கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட முதியவர்களிடையே இந்த inflammaging எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இக்கட்டுரையில் காணலாம். புரிதலுக்காக, inflammaging-ஐ அழற்சி என்று குறிப்பிடப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட வயதுகடந்தவுடன், உடல் முழுவதும் வீக்கம் அதிக அளவை அடைகிறது. ‘அழற்சி’ என்று அழைக்கப்படும் இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும். மிகவும் கடுமையான கோவிட் -19 பாதிப்புகள் பெரும்பாலும் வயதானவர்களிடையே ஏற்படுவதால், அழற்சியின் பங்கு இருக்கிறதா என்று ஆராய்ச்சியாளர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜூலை 24ம் தேதி பூமியைக் கடக்கும் ‘2020 என்.டி சிறுகோள்’ ஏன் அபாயகரமானது?
journal Science-ல் வெளியிடப்பட்ட தகவலின் படி, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆராய்ச்சியாளர்களான ஆர்னே அக்பர் மற்றும் டெரெக் கில்ராய் ஆகியோர் வயதான நபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் வீக்கத்தின் தாக்கம் குறித்து விவாதிக்கின்றனர். அழற்சி எதிர்ப்பு மருந்துகளைப் பயன்படுத்தி வீக்கத்தைக் குறைப்பது ஒரு therapeutic சிகிச்சை ஸ்டிராடஜியை அளிக்கக்கூடும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் வயதான நோயாளிகளில் கோவிட் -19 விளைவுகளை மேம்படுத்துவதற்கும் சாத்தியமாகும்.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்த கட்டுரையில், அறிவியல் வெளியீட்டாளர் American Association for the Advancement of Science கூறுகையில், "நமது நோயெதிர்ப்பு அமைப்பு, வயதுக்கு ஏற்ப எவ்வாறு பலவீனமடைகிறது என்பதை விளக்குகிறது. இது நிகழும்போது, நமது உடல் பாதுகாப்பு அமைப்புகள் பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுநோய்களுக்கு மெதுவாக பதிலளிக்கின்றன, இதனால் வயதானவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்" என்கிறது.
அரபு நாடுகளுடன் இந்தியா உறவை வலுப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
நோய் எதிர்ப்பு சக்தி மோசமடைவதோடு கூடுதலாக, வயதான நபர்களின் மற்றொரு பொதுவான சிக்கல் அழற்சி ஆகும். இது தொற்று இல்லாமல் நிகழும் நாள்பட்ட வயதின் மூப்பு காரணமாக ஏற்படும் என்று வகைப்படுத்தப்படுகிறது. நோயெதிர்ப்பு சக்தி பதில் வினைக்கு வீக்கம் அவசியம் என்றாலும், அழற்சி அப்படி இல்லை. பெரும் வீக்கத்தின் இந்த நிலை வயது தொடர்பான பல நோய்களை மோசமாக்கும் என்றும், ஏற்கனவே குறைந்து வரும் நோயெதிர்ப்பு மண்டலத்தின் பதில் வினையை இது மேலும் தடுக்கிறது என்றும் ஆராய்ச்சி கூறுகிறது. கோவிட் வைரஸைப் பொறுத்தவரை, இது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் காணப்படும் தீவிர அழற்சி வினைகளை எதிரொலிப்பதின் ஆரம்ப கட்ட தூண்டுதலாக இருக்கலாம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil