Advertisment

காவல்துறையினர் பாஸ்போர்ட் சரிபார்ப்பின் போது கருத்தில் எடுத்துக்கொள்ளும் அம்சங்கள் என்ன?

இந்த உத்தரவுகளை ஜனநாயகத்துக்கு விரோதம் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
What police verify during passport application

Deeptiman Tiwary

Advertisment

What police verify during passport application : 

ஒரு நபரின் பாஸ்போர்ட் சரிபார்ப்பு பணிகளின்போது காவல்துறையினர் அந்நபரின் சமூக மற்றும் அரசியல் கருத்துக்கள் மற்றும் நிலைப்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொள்வதாக பீகார் மற்றும் உத்தரகாண்ட் காவல்துறை சமீபத்தில் வெளியிட்ட அறிக்கைகளில் அறிவித்துள்ளது.  அரசியல் மற்றும் சமூக நிலைப்பாட்டினை கருத்தில் கொண்டு தான் அவர்களுக்கு பாஸ்போர்ட் ஆல் கிளியர் செய்யப்படும் என்று கூறியுள்ளது.

சட்டம் ஒழுங்கு விவகாரங்கள், போராட்டங்கள் மற்றும் சாலை மறியலில் ஈடுபடும் நபர்கள் பாஸ்போர்ட் பெறுவது மிகவும் கடினம் என்று பீகார் காவல்துறை எச்சரிக்கை செய்துள்ளது.  மேலும் அவர்களுக்கு அரசு பணிகள், மாநில அரசிடமிருந்து நிதி உதவி மற்றும் வங்கிக் கடன் கிடைப்பதிலும் சிக்கல் நிலவும் என்று பீகார் காவல்துறை அறிவித்துள்ளது. உத்தரகாண்ட் மாநில காவல்துறை சமூக வலைதள பக்கங்களில் சமூக விரோத மற்றும் தேசவிரோத கருத்துகளை உருவாக்கும் நபர்களின் தகவல்களை சேகரித்து வைப்பதுடன் பாஸ்போர்ட் சரிபார்ப்பு அறிக்கையின் ஒரு பகுதியாக அது மாற்றப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த உத்தரவுகளை ஜனநாயகத்துக்கு விரோதம் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க : உங்களின் பி.எஃப். பணமும், அதில் கிடைக்கும் வட்டிக்கு புதிய வரியும்!

காவல்துறையின் பாஸ்போர்ட் சரிபார்ப்பு என்றால் என்ன?

விண்ணப்பதாரர் ஒருவர் புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்திருந்தால் அவர் கூறிய தகவல்கள் அனைத்தும் உண்மையா என்பதனை சரிபார்க்க காவல்துறையினர் அனுப்பப்படுவார்கள். முதலில் விண்ணப்பதாரர் அவர் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் தான் வசிக்கிறாரா என்பதை நேரடியாக சென்று சரி பார்ப்பார்கள். மேலும் ஒரு குறிப்பிட்ட முகவரியில் எத்தனை நாட்கள் தங்கி இருக்கிறார்? அவர் மீது ஏதேனும் குற்றம் புகார்கள் இருக்கிறதா? என்பதையும் சரி பார்ப்பார்கள்.

விண்ணப்பதாரர் மீது கிரிமினல் வழக்கு அல்லது நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருந்தால் அதனையும் குறிப்பிடவேண்டும். இதனையும் காவல்துறை சரிபார்ப்பு செய்து பின்னர் அந்த அறிக்கையை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைப்பார்கள்.

Clear, Factual and Not Recommended என்ற மூன்று வகைமைக்குள் தான் அவை வரும்.

முதலாவது என்றால் பாஸ்போர்ட்டினை பெற்றுக் கொள்ளலாம். இரண்டாவது என்றால், விண்ணப்பதாரரின் அனைத்து வழக்கு தகவல்களையும் கொடுத்து அவர் வெளிநாட்டுக்கு செல்லலாமா வேண்டாமா என்பதை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம் முடிவெடுக்கும். மூன்றாவது பாஸ்போர்ட் வழங்க கூடாது. முகவரி தவறாக இருக்கலாம். அல்லது அவருடைய ஆவணங்களில் பிழை இருக்கலாம். அல்லது அவருடைய குற்றவியல் நடவடிக்கைகள் காரணமாக அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கலாம்.

பயனர் தன்னுடைய பாஸ்போர்ட்டினை தொலைத்துவிட்டால் அல்லது திருத்தப்பட்டால் மட்டுமே மீண்டும் காவல்துறையினர் சரி பார்ப்பு இருக்கும். இல்லையென்றால் பாஸ்போட்டினை மீண்டும் வழங்கும் போது காவல்துறை சரிபார்ப்பு பணி நடைபெறாது.

காவல்துறையினர் எந்த வகையான குற்றவியல் பின்புலங்களை ஆராய்கின்றனர்?

காவல்துறையினர் அவர்களின் அறிக்கையில் விண்ணப்பதாரர்களின் முதல் தகவல் அறிக்கையைமட்டுமே பதிவு செய்வார்கள். பாஸ்ட்போர்ட் சட்டம் 1967 மற்றும் பாஸ்போர்ட் விதிகள் 1980 என எதிலும் விண்ணப்பதாரர்களின் சமூக மற்றும் அரசியல் நடத்தை குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று கூறப்படவில்லை. மோட்டார் சைக்கிள் குற்றங்கள், போக்குவரத்து சிக்னலில் குதிப்பது அல்லது வேகமாக செல்வது போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக் கொள்வது இல்லை.

காவல்துறையினர் ”பரிந்துரை செய்யவில்லை” என்ன செய்வது?

உண்மையான குற்றவியல் காரணங்களுக்காகவோ அல்லது ஒரு நபரின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடு குறித்தோ அல்லது அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதாலோ அவர்கள் பரிந்துரை செய்யவில்லை என்பதை குறிக்கலாம். ஆனால் யாருக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டும் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது. அது மத்திய அரசின் கீழ் இயங்கும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தான் காவல்துறையினரின் பரிந்துரையை ஏற்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யும்.

நாடு முழுவதும் காவல்துறையினர் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அறிக்கைகளை சமர்பிக்கின்றனர். சில சமூக விரோத சக்திகள் சில நேரங்களில் காவல்துறையினருக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கலாம். அவர்களுக்கு பரிந்துரை செய்திருக்காது காவல்துறை. ஆனாலும் கூட நீதிமன்ற உத்தரவின் படி அவர்கள் பாஸ்போர்ட் வாங்கியதும் உண்டு என்று மும்பை காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கின்றார்.

எந்த சூழலில் பாஸ்போர்ட்டினை அரசு மறுக்கும்?

பாஸ்போர்ட் சட்டத்தின் கீழ் இரண்டு காரணங்களுக்காக ஒருவருக்கு பாஸ்போர்ட் மறுக்கப்படலாம். இது முறையே அரசாங்கம் மற்றும் நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டிற்கு கீழ் வரும்.

முதலில் ஒரு நபர் உண்மையாகவே இந்திய குடிமகனாக இல்லை என்றால் அவருக்கு பாஸ்போர்ட் மறுக்கப்படும். வெளிநாடுகளில் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு கலங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. இந்தியாவில் இருந்து அவர்கள் வெளியேறுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கு பிரச்சனையை உருவாக்கும். மேலும் மற்ற நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள உறவில் விரிசலை ஏற்படுத்தக் கூடும் என்று யோசிக்கும் பட்சத்தில் பாஸ்போர்ட் மறுக்கப்படும்.

இரண்டாவதாக, ஒரு நபர் எந்த ஒரு நேரத்திலும் விண்ணப்ப நாளுக்கு முந்தைய ஐந்து ஆண்டுகளில், இரண்டு ஆண்டுகளுக்கும் குறையாமல் நீதிமன்றத்தால் தண்டனை அறிவிக்கப்பட்டிருந்தால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்படாது. விண்ணப்பதாரர் செய்ததாகக் கூறப்படும் ஒரு குற்றம் தொடர்பான வழக்கு இந்தியா குற்றவியல் நீதிமன்றம் ஏதேனும் ஒன்றில் நிலுவையில் இருந்தால் அவருக்கு பாஸ்போர்ட் மறுக்கப்படலாம்; அல்லது விண்ணப்பதாரர் ஆஜராக அல்லது சம்மன் அல்லது கைது செய்ய வாரண்ட் இருந்தால், நீதிமன்றம் அவரது வெளிநாட்டு பயணத்தைத் தடுக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இதற்கு தீர்வு என்ன?

எஃப்.ஐ.ஆர். உள்ளிட்ட எதன் அடிப்படையிலும் ஒருவருக்கு அரசு பாஸ்போர்ட்டினை மறுக்கும் நீதிமன்றத்தை அணுகலாம். ஒருவரின் பயணத்தால் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று நீதிமன்றமே தடை செய்யப்பட்ட நபர்களை தவிர்த்து எந்த ஒரு நபருக்கும் ஒரு எஃப்.ஐ.ஆர் அல்லது வழக்கு காரணமாக பாஸ்போர்ட் அளித்தலை மறுக்க கூடாது என்று பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. வெகு அரிதாகவே அவ்வாறு பாஸ்போர்ட்கள் மறுக்கப்பட்டுள்ளன. சில நேரங்களில் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று பயணிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. குற்றவியல் வழக்குகளில் சிக்கியிருக்கும் நபர்கள் பயணங்களை தொடர அரசே நீதிமன்றத்தை அணுகுமாறு கேட்டுக் கொண்டும் உள்ளது.

Passport
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment