By: WebDesk
Updated: December 2, 2020, 01:02:54 PM
Harish Damodaran
Wheat sowing over, farmers have free time to continue agitation : பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் கட்சியினர் அதிகபட்ச நிலைப்பாடுகளை எடுப்பதன் மூலம் பேச்சுவார்த்தைகளை துவங்குகின்றனர். தற்போது மத்திய அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் இடையே விவசாய சீர்திருத்த சட்டங்களால் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் இருந்து இவை வேறுபட்டதல்ல.
உழவர் சங்கங்களில் பிரதிநிதிகள், பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள், மூன்று சட்டங்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். அல்லது பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஒரு கொள்கை அறிவிப்பாக அறிவிப்பதைக் காட்டிலும் சட்டமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மற்றொரு புறம், நரேந்திர மோடி அரசு இந்த மூன்று சட்டங்களில் எந்த மாற்றத்தையும் நிராகரித்தது. நடைமுறைப்படுத்துவதையும் நிறுத்தி வைக்கவில்லை. அரசைப் பொறுத்த வரையில், இந்த சட்டங்கள் வேளாண் உற்பத்தி சந்தைக்குழு என்று கூறப்படும் ஏ.பி.எம்.சியின் (APMCs (agricultural produce market committee)) மண்டிகளின் ஏகபோக உரிமையை விற்பனை மற்றும் பயிர்கொள்முதலில் இருந்து நீக்குதல், ஒப்பந்த முறை விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களில் பங்குக்தாரர்களின் கட்டுப்பாடுகளை நீக்குதல் ஆகியவை ஆகும்.
வாரணாசியில் திங்கள் கிழமை அன்று பேசிய பிரதமர் மோடி, புதிய வேளாண் சட்டங்களை எதிர்ப்பவர்கள் தவறான கருத்துகளை விவசாயிகளிடம் விதைப்பதாகவும் பரப்புவதாகவும் கூறினார். செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தையின் போது மூன்று மத்திய அமைச்சர்கள் 35 விவசாய சங்க உறுப்பினர்களுடம் பேசினார்கள். மூன்று சட்டங்களின் சர்ச்சைக்குரிய விதிகள் குறித்து விவாதிக்க ஒரு அரசியலமைப்பு குழுவை மத்திய அரசு அமைப்பதாக கூறியது. விவசாய வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ள முன்மொழியப்பட்ட குழுவில் விவசாய உறுப்பினர்களை பரிந்துரைக்க அரசு கேட்டுக் கொண்டது. ஆனால் இதற்கு விவசாய சங்கத்தினர் மறுத்துவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
ஒரு பேரம் பேசும் நிலைப்பாட்டில் இருந்து பார்வையிட்டால் விவசாயிகள் சரியான இடத்தில் தான் தற்போதைய சூழலில் வைக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கரீஃப் அறுவடை முடிந்ததோடு மட்டும் அல்லாமல் ராபிக்கான கோதுமை விதைப்பும் முடிந்துவிட்டது. நிறைய விவசாயிகள் அவர்களின் முதல் சுற்று யூரியா பயன்பாடு மற்ரும் நீர்பாசனத்தையும் முடித்துவிட்டனர். இது விதைப்பிற்கு பிறகு 2 அல்லது மூன்று வாரங்களில் நடைபெறுகிறது.
இவர்கள் போராடுதற்கான காலம் இருப்பதையே இது காட்டுகிறது. 15 அல்லது 20 நாட்களுக்கு முன்பு சூழல் இப்படி இல்லை. பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கோதுமை நவம்பர் மாத மத்தியில் நடைபெறும். ஆனால் இதே போன்ற சாதகமான சூழல் அண்டை மாநிலத்தில் கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. தீபாவளிக்கு பிறகு தற்போது தான் சர்க்கரை ஆலைகள் கரும்பில் இருந்து சர்க்கரை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே உ.பி. விவசாயிகள் கரும்பு அறுவடையில் மும்முரமாக உள்ளனர். அவர்களுக்கு இது முக்கியமான பணப்பயிராகும்.
பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளுக்கு கிடைத்திருக்கும் இந்த “நேரம்” மோடி அரசு சற்றும் எதிர்பார்த்திராத ஒன்று. . அவர்கள் தேசிய தலைநகரை முற்றுகையிடும் நேரம் – நெல் விற்பனை மற்றும் கோதுமை விதைத்தபின்னும் – குறைந்தது அடுத்த சில வாரங்களாவது தங்குவதற்கான திறன் போராட்டம் செய்யும் விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
அதே நேரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 202.77 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்துள்ளது. 2019 – 20 ஆண்டு காலத்தில் இது 162.33 லட்சம் டன்களாக இது இருந்தது. தற்போதுள்ள திறந்த-கொள்முதல் மற்றும் ஏபிஎம்சி மண்டி முறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் புதிய சட்டங்கள் குறித்த விவசாயிகளின் அச்சத்தை அகற்றுவதற்காக. மோடி அரசு இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பஞ்சாபில் இருந்து கொள்முதல் செய்திருக்கலாம். இதன் எம்.எஸ்.பி. மதிப்பானது 38, 283 கோடியாக இருக்கலாம்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய நெல்லை அந்த எம்.எஸ்.பி. விலைக்கு விற்ற அதே விவசாயி தற்போது ட்ராக்டரில் அமர்ந்து இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று போராடி வரலாம். இதில் மத்திய அரசுக்கு மோசமான நிலை என்னவென்றால், விவசாயிகள் தொடர்ந்து டெல்லிக்குள் நுழையும் பகுதிகளில் எல்லாம் போராட்டம் நடத்தி தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் நிலை உருவாவது தான். அது இந்த மூன்று சட்டங்களை ரத்து செய்வதோடு மட்டும் அல்லாமல் குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வ உரிமையாக மாற்றும். இது, சீர் திருத்த சட்டங்களுக்கு முந்தையை நிலையை மீண்டும் உருவாக்கும்.
மண்டிகளுக்கு வெளியே பண்ணைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கும் எம்.எஸ்.பிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மோடி அரசு இதுவரை கூறியுள்ளது. எம்.எஸ்.பி. என்பது எப்போதும் சட்டரீதியான ஆதரவு இல்லை என்று விவசாய துறை அமைச்சர் கூறியுள்ளார். எம்.எஸ்.பி. 23 பயிர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அரசாங்க கொள்முதல் மூலமாகவோ அல்லது பிறரை (தனியார் வர்த்தகர்கள், செயலிகள், ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள்) செலுத்தும்படி கட்டாயப்படுத்தினாலும் அதன் அமலாக்கத்திற்கு வரம்புகள் உள்ளன.
விவசாயிகள் முதல் சுற்றில் வென்றுள்ளனர். அரசாங்கம் அதன் அதிகபட்ச நிலைப்பாட்டைப் பற்றி வருத்தப்பட வேண்டியிருக்கும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும், விவசாயிகளுக்கு “எம்எஸ்பியில் விற்க உரிமை” வழங்குவது முதன்மைக் கோரிக்கையாக மாறும் ஒரு சூழ்நிலையை அது ஏற்க முடியாது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil