Advertisment

கொரோனா வைரஸ் உண்மையிலேயே எங்கிருந்து வந்தது?

2016ம் ஆண்டு வூஹான் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் RaTG13 என்ற வைரஸை வைத்து ஆராய்ச்சி செய்து வந்தனர். இந்த வௌவால் கொரோனா வைரஸ், தற்போதைய கொரோனா வைரஸூடன் 96.2% பொருந்துகிறது.

author-image
WebDesk
New Update
Where did Covid-19 virus come from?

 Nirupama Subramanian

Advertisment

Where did Covid-19 virus come from : கொரோனா தொற்றை உருவாக்கும் வைரஸ் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு வந்ததா இல்லை ஆய்வக விபத்தினால் மனிதர்களுக்கு வந்ததா என்பதை அறிய மே 26ம் தேதி அன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அந்நாட்டின் உளவுத்துறையின் செயல்திறனை இரட்டிப்பு மடங்கு அதிகரித்து, உண்மையான முடிவுகளை பெற கூடுதல் தரவுகள் மற்றும் தகவல்களை பெற உத்தரவு பிறப்பித்தார். இவர்களின் அறிக்கை 90 நாட்களுக்கும் சமர்பிக்கப்படும்.

வைரஸின் தோற்றம் குறித்த கேள்விக்கு பலதரப்பட்ட பதில்களை முன்வைக்கின்றனர் அமெரிக்க உளவு அமைப்புகள். ஆனாலும் வூஹான் ஆய்வக கசிவு கோட்பாட்டிற்கு புதிய மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் வலதுசாரி கருத்து என்றும், அமெரிக்க முன்னாள் அதிபர் மற்றும் அவருடைய தொண்டர்களால் முன்வைக்கப்பட்ட இனவெறி சதிக்கோட்பாடு என்று நிராகரிக்கப்பட்டது.

அமெரிக்க வெளியுறவுத்துறை பகிரங்கமாக முன்னர் வெளியிடப்படாத தகவல்களை உள்ளடக்கிய ஒரு உண்மைகளை ஓப்பன் சோர்ஸ் தகவல்களுடன் வெளிப்படுத்திய பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 2020 முதல் ட்ரம்ப் நிர்வாகம் பதவி விலகுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு வரை இந்த கோட்பாடு மிகவும் தீவிரமாக பரிசீலனை செய்யப்பட்டு வந்தது.

மேலும் படிக்க : மத்திய, மேற்கு மாவட்டங்களில் கை கொடுக்காத ஊரடங்கு… மோசமான பாதிப்பை சந்திக்கும் கொங்கு மண்டலம்

முக்கிய மூன்று விசயங்கள்

டிசம்பர் 8, 2019, கொரோனா வைரஸ் தொற்று முதன்முறையாக உறுதி செய்யப்படுவதற்கு முன்பு வூஹான் வைராலஜி ஆய்வகத்தில் உள்ள ஆராய்ச்சியாளார்கள் கொரோனா வைரஸ் மற்றும் பருவகால உடல் நலக் குறைபாடுகளுக்கு ஆளானார்கள்.

2016ம் ஆண்டு வூஹான் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் RaTG13 என்ற வைரஸை வைத்து ஆராய்ச்சி செய்து வந்தனர். இந்த வௌவால் கொரோனா வைரஸ், தற்போதைய கொரோனா வைரஸூடன் 96.2% பொருந்துகிறது. 2012ம் ஆண்டு 6 சுரங்க தொழிலாளர்கள் உயிரிழந்த யூனான் சுரங்கத்தில் இருந்து பெறப்பட்ட வௌவால்களின் கழிவுகளில் இருந்து RaTG13 வைரஸ் 2013ம் ஆண்டில் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் விடுதலை இராணுவத்தின் சார்பாக விலங்கு பரிசோதனைகள் உட்பட இரகசிய இராணுவ ஆராய்ச்சியை WIV மேற்கொண்டது.

அதிகாரிகள் இந்த மூன்று தகவல்களின் நியாயத்தன்மை குறித்து கேள்வி எழுப்பிய பின்னர் வெளியுறவுத்துறையின் இந்த விசாரணை நேரத்தையும் வளங்களையும் வீணடிக்கும் செயல் என்று பைடன் நிர்வாகம் விசாரணையை நிறுத்தியது. ஆனாலும் கொரோனா வைரஸ் இயற்கையாகவே எங்கிருந்து உருவாகிறது என்பதை அறிவதற்கான விசாரணை தொடர்பாக தனது நிலையை மறுபரிசீலனை செய்ய பைடன் மீது அழுத்தம் தரப்பட்டது.

தொற்று நோயின் தோற்றம் குறித்த தெளிவைப் பெறவும் அடைய சாத்தியமான வழிமுறைகள் குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இயற்கை மற்றும் ஆய்வக விபத்து என்ற இரண்டு சாத்தியங்களையும் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் 18 ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு ஒன்று அறிவியல் இதழில் மே 14 அன்று கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

மே 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில், வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், பைடனை இந்த நடவடிக்கைக்கு தள்ளிய விவகாரங்கள் குறித்து இரண்டு செய்திகளை வெளியிட்டிருந்தது.

முதல் செய்தி, அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் விசாரணையில் கூறப்பட்டிருக்கும் ஃபேக்ட் ஷீட்களை மேற்கோள்க்காட்டி மூன்று ஆராய்ச்சியாளர்கள் வூஹான் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் மாதம் உடல் நலக்குறைவுக்கு ஆளானர்கள் என்று கூறியுள்ளது. இரண்டாவது செய்தி யூனானில் உள்ள செம்பு சுரங்கத்தில் 6 சுரங்க தொழிலாளர்கள் இறந்தது குறித்து கூறப்பட்டிருந்தது.

சுரங்கமும் வைரஸும்

வால் ஸ்ட்ரீட் ஜார்னலின் செய்தியில், சுரங்க தொழிலாளர்கள் கடுமையான நிம்மோனியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், தற்போது கொரோனா நோயாளிகள் மத்தியில் காணப்படும் நுரையீரல் தொற்றையும் அவர்கள் அனுபவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அடுத்த ஆண்டில் 276 வௌவால்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளை வூஹான் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து அதில் RaBTCoV / 4991 என்று அழைக்கப்படும் ஒரு கொரோனா வைரஸ் விகாரத்தை அடையாளம் கண்டனர். இந்த ஆராய்ச்சி 2016 ஆண்டில் வெளியிடப்பட்டது. 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், அதே ஆராய்ச்சியாளர்கள் நேச்சரில் ஒரு கட்டுரையை வெளியிட்டனர். இது RATG13-ஐ விவரிக்கிறது, இது SARS-CoV-2 உடன் 96.2% மரபணு வரிசை பொருத்தத்தைக் கொண்டிருந்தது.

உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் மாதிரி தேதிகள் மற்றும் RaBTCOV / 4991 மற்றும் RaTG13 ஆகியவற்றின் பகுதி மரபணு வரிசைகளில் ஒற்றுமையைக் கண்ட பிறகு, WIV ஆராய்ச்சியாளர்கள் இரண்டு வைரஸ்கள் ஒரே மாதிரியானவை என்று கூறினர். ஆனால் 2012 ஆண்டு ஏற்பட்ட சுரங்கத் தொழிலாளர்களின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது இந்த வைரஸ்கள் அல்ல என்று அவர்கள் கூறினர். குறைந்த பட்சம், இரண்டு வைரஸ்கள் ஒரே மாதிரியானவை என்று WIV தாமதமாக ஒப்புக் கொண்டது, அதற்கான அவற்றின் விளக்கங்களில் சில முரண்பாடுகள், தரவுகளின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளன.

வெவ்வேறு பேட் வைரஸ்களின் கூறுகளை இணைப்பதன் மூலம், புதிய தடுப்பூசிகளைக் கண்டுபிடிப்பதற்காக, புதிய வைரஸ்களை உருவாக்க WIV சோதனைகளை மேற்கொண்டுள்ளது என்பதையும், இது தற்செயலாக ஆய்வகத்திலிருந்து தீங்கு விளைவிக்கும் வைரஸ் கசிவுக்கு வழிவகுத்திருக்கக்கூடும் என்பதையும் நிராகரிக்கவில்லை. இவை அனைத்தும் வைரஸின் தோற்றம் பற்றிய WHO அறிக்கையில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளன ஆனாலும் முழுமையான விளக்கம் நிறுவப்படவில்லை.

ஊரடங்கிற்கு முற்றுபுள்ளி வைக்க மக்கள் ஆதரவு தேவை – முதல்வர் மு.க.ஸ்டாலின்

Where did Covid-19 virus come from? உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை

மார்ச் 30, 2021 அன்று வைரஸின் தோற்றம் குறித்து உறுதியற்ற 120 பக்க அறிக்கை வெளியிடப்பட்டது. இது ஒரு விலங்கிலிருந்து மனிதர்களுக்கு ஒரு இடைநிலை ஹோஸ்டாக வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறியுள்ளது. ஒரு ஆய்வக கசிவு "மிகவும் சாத்தியமில்லை" என்று அறிக்கை கூறியது, இருப்பினும் இந்த சாத்தியத்தை போதுமான அளவு ஆய்வு செய்யவில்லை. அனைத்து கருதுகோள்களும் பரிசீலனையில் உள்ளன. இருப்பினும் ஆய்வக கசிவு மிகக்குறைந்த கருதுகோள் என்று முடிவு செய்திருந்தாலும் இது தொடர்பாக கூடுதல் விசாரணை தேவை. இதற்கு கூடுதல் ஆராய்ச்சியாளார்கள் தேவை என்று உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

இந்த அறிக்கை பெரும்பாலான நாடுகளில் கவலையை ஏற்படுத்தியது. அமெரிக்காவும் மற்ற 13 நாடுகளும் உலக சுகாதார சபையில் ஒரு அறிக்கையை வெளியிட்டன அதில் “அண்மையில் சீனாவில் WHO நடத்திய ஆய்வு குறித்து பகிரப்பட்ட தகவல்கள் கவலையை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில் விரைவான, பயனுள்ள, அபிவிருத்தி மற்றும் பயன்பாட்டை நோக்கி ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும், எதிர்காலத்தில் அறியப்படாத தோற்றம் போன்ற வெடிப்புகளை மதிப்பீடு செய்வதற்கான வெளிப்படையான, அறிவியல் அடிப்படையிலான மற்றும் சுயாதீனமான செயல்முறையை வலுப்படுத்துகின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வைரஸின் தோற்றம் மற்றும் இது மக்கள் மத்தியில் எப்படி பரவியது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அறிவித்துள்ளன.

சயன்ஸ் இதழுக்கு கட்டுரை எழுதிய 18 ஆராய்ச்சியாளர்கள், ஆய்வக கசிவு மூலம் நோய் பரவி இருக்கும் என்பது தொடர்பாக முழுமையான ஆய்வுகளை நடத்தாமல் வெளியிடப்பட்டிருக்கும் WHO-வின் கருத்துகளை விமர்சனம் செய்துள்ளது. உலக சுகாதார மையம் கூடியவுடன் பைடன் தனது விசாரணையை அறிவித்தார். சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் இதுவரை அதை எதிர்க்கவில்லை.

சீனாவின் எதிர்ப்பு

அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட “ஹைப்” இது என்று ஆய்வக கசிவு கருதுகோளை முற்றிலுமாக நிராகரித்தது சீனா. மாறாக இந்த வைரஸ் மேரிலாந்தில் உள்ள அமெரிக்க ராணுவ மையம் அமைந்திருக்கும் டெட்ரிக் கோட்டையில் இருந்து வந்தது என்று கூறியது.

விசாரணை வேண்டும் என்று பைடன் குறிப்பிட்ட பிறகு சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் அமெரிக்கா தொற்றுநோயை பயன்படுத்தி அரசியல் கையாளுதல் மற்றும் பழி மாற்றத்தைத் தொடருகின்றனர். அறிவியலுக்கு அவமரியாதையை ஏற்படுத்துகிறார்கள். மக்களின் வாழ்க்கைக்கு பொறுப்பற்றவர்கள் மற்றும் வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாடு

இது தொடர்பான விசாரணைக்கு இந்தியா ஆதரவு அளிக்கிறது. சீனாவின் பெயரை குறிப்பிடாமல், வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்ஜி, உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஆய்வு ஒரு “முக்கியமான முதல் படி” என்றும், கோவிட் -19 இன் தோற்றத்தை உறுதியாக நிர்ணயிக்க அனைவரும் இந்த விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

கோவிட் -19 இன் தோற்றம் குறித்து உலக ஆய்வு உலகளாவிய கூட்டம் ஒரு முக்கியமான முதல் படியாகும். அடுத்த கட்ட ஆய்வுகள் மற்றும் மேலதிக தரவு மற்றும் ஆய்வுகள் வலுவான முடிவுகளை எட்டுவதற்கான தேவையை இது வலியுறுத்தியது. WHO அறிக்கையைப் பின்தொடர்வது மற்றும் மேலதிக ஆய்வுகள் அனைவரின் புரிதலுக்கும் ஒத்துழைப்புக்கும் தகுதியானவை என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

இந்த கோட்பாட்டின் வளர்ச்சி

2019 முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்டது

டிசம்பர் 31ம் தேதி வூஹான் மாகாணத்தில் நிம்மோனியாக் காய்ச்சல் பரவல் குறித்து அறிவித்தது. ஜனவரி 7 அன்று சீன அதிகாரிகள் அந்த காய்ச்சலுக்கு கொரோனா வைரஸ் காரணம் என்று அறிவித்தனர்.

2020: உரிமைகோரல்கள் மற்றும் சந்தேகம்

பிப்ரவரி 3: நேச்சர் பத்திரிக்கையில், வூஹான் வைரலாஜி ஆய்வக ஆராய்ச்சியாளர்கள் SARS-CoV-2 ஒரு பேட் கொரோனா வைரஸ், RaTG13 உடன் 96.2% மரபணு பொருத்தத்தைக் கொண்டுள்ளது என்று கூறினார்கள். மூன்று நாட்களுக்கு பிறகு தென் சீன தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளார் ஒருவர் வூஹான் ஆய்வகத்தில் இருந்து பரவி இருக்கலாம் என்று கூறி ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு பின் திரும்ப பெற்றுக் கொண்டார்.

பிப்ரவரி 19 : தி லான்செட்டில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், 27 விஞ்ஞானிகள் குழு கொரோனா வைரஸ் பற்றிய சதி கோட்பாடுகளை கண்டித்து, அது வனவிலங்குகளில் தோன்றியதாக முடிவு செய்தது. மார்ச் மாதத்தில் நேச்சர் மெடிசினில் ஒரு ஆய்வறிக்கையில், விஞ்ஞானிகள் கோட்பாடுகளை நிரூபிக்கவோ அல்லது நிரூபிக்கவோ முடியாமலோ போகலாம் ஆனால் அது ஒரு ஆய்வகத்திலிருந்து வெளிவந்தது என்று அவர்கள் நம்பவில்லை என்றனர்.

மார்ச் 27 : அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் புதுப்பிக்கப்பட்ட மதிப்பீட்டில் கொரோனா வைரஸ் தோன்றுவதற்கு வழிவகுக்கும் பாதுகாப்பற்ற ஆய்வக நடைமுறைகளின் சாத்தியங்களும் அடங்கும்.

ஏப்ரல் 30 : மக்கள் ஆய்வக கசிவு கோட்பாட்டை மிகவும் வலுவாக பார்க்கிறார்கள் என்று டொனால்ட் ட்ரெம்ப் தெரிவித்தார்.3 நாட்கள் கழித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த மைக் பாம்பியோ, சீன ஆய்வகத்தில் ஏற்பட்ட தோல்விகளின் விளைவாக உலகம் வைரஸ்களுக்கு ஆளாகியிருப்பது இது முதல் முறை அல்ல என்று ஏ.பி.சி. செய்திகளுக்கு பேட்டி அளித்தார்.

ஜூலை 4 : முதன்முறையாக கைவிடப்பட்ட காப்பர் சுரங்கத்தில் SARS-CoV-2 ஐ ஒத்த ஒரு வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாகவும் அதனை வூஹான் ஆராய்ச்சி மையத்தில் வைத்து ஆய்வு செய்ததாகவும் செய்திகள் வெளியானது.

நவம்பர் 17 : SARS-CoV-2 இன் மரபணு அமைப்பு ஒரு ஆய்வக தோற்றத்தை நிராகரிக்கவில்லை என்று பயோ எஸ்ஸேஸ் (BioEssays) கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

2021 வலுவான கோரல்கள்

ஜனவரி 15 : டிரம்ப் நிர்வாகத்தின் கடைசி பதினைந்து நாட்களில், WIV குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் உண்மைத் தாள், ஆய்வக-தோற்றக் கோட்பாட்டிற்கு ஒரு வழக்கை உருவாக்கியது

மார்ச் 30 : ஆய்வக கசிவு என்பது சாத்தியமற்ற கருதுகோள் என்று WHO முடிவற்ற அறிக்கையை வெளியிட்டது. ஆனால் WHO பொதுச்செயலாளர் டெட்ரோஸ் அதானோம் அனைத்து கருதுகோள்களும் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினார்.

மே 14 : கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து அறிய விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றூம், இயற்கை மற்றும் ஆய்வக கசிவு குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று 18 ஆராய்ச்சியாளர்கள் குழு சயன்ஸில் எழுதினர்.

மே 23-24: வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு அமெரிக்க உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி, 2019 நவம்பரில் மூன்று WIV ஆராய்ச்சியாளர்கள் நோய்வாய்ப்பட்டதாகக் கூறியுள்ளது; மற்றொரு அறிக்கையில் இது 2012இல் நோய்வாய்ப்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் குறித்து கூறுகிறது. மேலும் கோவிட் நோயாளிகளிடமும் காணப்பட்ட அதே நுரையீரல் திட்டுகள் சுரங்கத் தொழிலாளர்களிடமும் இருந்தன என்றும் கூறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment