Parthasarathi Biswas
Who are Shetkari Sanghatana, the group backing govt on the farm laws? : ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்க சில விவசாய சங்க உறுப்பினர்கள் திங்கள்கிழமை என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தின. வேளாண் சட்டங்களுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர் . நரேந்திர சிங் தோமரை சந்தித்த விவசாய சங்கங்களில் மகாராஷ்டிராவை சேர்ந்த ஷேத்கரி சங்கதானாவும் அடங்கும். இந்த அமைப்பை விவசாய தலைவர் சரத் ஜோஷி துவங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
ஜோஷியும் அவரது பார்வையும்
ஜோஷி விவசாய பிரச்சனைகளை கையில் எடுப்பதற்கு முன்பு பொருளாதார நிபுணராக சுவிட்சர்லாந்தில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பணியாற்றினார். பின்பு இந்தியா திரும்பிய அவர் புனேவில் அமைந்திருக்கும் கேது தாலுகாவிலுள்ள சக்கன் பகுதியில் நிலம் ஒன்றை விலைக்கு வாங்கினார். பின்பு அவர் முழு நேர விவசாயியாக மாறினார். வெங்காயம் விளைபொருளுக்கு ஏற்ற விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என புனே நாசிக் நெடுஞ்சாலையில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அதுதான் சங்கதானா உருவாக காரணம். விவசாயிகள் வெங்காயத்தை நெடுஞ்சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
இந்தியாவில் விவசாயிகளின் பிரச்சனையை ஆக்ரோசத்துடன் வெளிப்படுத்த வில்லை என்றால் விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்காது என்பதை உறுதியாக ஜோஷி நம்பினார். எனவே பல நேரங்களில் நகர்ப்புறங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் தண்டவாளங்களில் கரும்பின் விலையை அதிகரித்தல் மற்றும் பருத்தி கொள்முதலில் மாநில அரசின் ஏகபோக உரிமையை நீக்குதல் போன்றவற்றிற்காக போராட்டம் நடத்தினார்கள்.
திறந்த சந்தைகளின் மீது நம்பிக்கை
ஆரம்பத்தில் இருந்தே சந்தைக்கான எளிமையான அணுகல் குறித்து சங்கதானா குரல் எழுப்பி வந்தது. விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு மூல காரணம் அவர்கள் சந்தைக்கு மட்டுப்படுத்தப்பட்ட அணுகலில் இருப்பதாக ஜோஷி உறுதியாக நம்பினார். விளைபொருட்களுக்கான விலையை நிர்ணயிக்க சந்தைகள் திறந்ததாகவும் போட்டித்தன்மையுடனும் இருக்க வேண்டும் என்று ஜோஷி கூறுவார். நுகர்வோர் மலிவான விலையில் விவசாயப் பொருட்களை பெறுவதை உறுதி செய்வதற்காக விவசாய விளைபொருட்களின் விலையை அரசாங்கங்கள் வேண்டுமென்றே குறைத்து வருவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் படிக்க : டெல்லியில் பரபரப்பு : விவசாயிகளின் போராட்டத்தில் இணைந்த 2000 பெண்கள்
கரும்பு விவசாயிகள் மீது இருந்த மண்டல வரம்புகளை நீக்க வேண்டும் என்றும் மாநிலங்களுக்கு இடையே பருத்தியின் இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஜோஷியும் அவரின் இயக்கமும் தெருவில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டது. 1984ம் ஆண்டு, பருத்தி கொள்முதலில் மகாராஷ்ட்ரா ஸ்டேட் கோ-ஆப்ரேட்டிவ் காட்டன் மார்க்கெட்டிங் ஃபெடரேசனின் ஏகபோகத்திற்கு எதிராக குரல் கொடுத்தார். அந்த சங்கம் மட்டுமே அப்போது விவசாயிகளிடம் இருந்து பருத்தியை கொள்முதல் செய்யும். தங்களின் பருத்தியை விற்பனை செய்ய விவசாயிகள் நாட்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் ஏற்பட்டது. நெப்போட்டிசம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளும் எழுந்தனர். ஜோஷி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அரசாங்க விதிகளை வெளிப்படையாக மீறி தங்கள் பருத்தியுடன் மகாராஷ்டிராவின் எல்லைகளுக்குச் சென்றனர். அவர்களின் போராட்டம் வெற்றிகரமாக இருந்தது, மேலும் பருத்தியின் மாநிலங்களுக்கு இடையிலான இயக்கத்திற்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெற அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது.
அன்றைய நாளில் இந்தியாவில் இருந்த மூன்று பெரிய விவசாய தலைவர்களில் ஜோஷி மட்டுமே உலகமயமாக்குதல் மற்றும் வேளாண் துறையில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தலை வரவேற்றார். திக்கைத் (பாரதிய கிஷான் சங்க தலைவர்) மற்றும் நஞ்சுண்டசாமி (கர்நாடக ராஜ்ய ரைத்தாவின் தலைவர்) அமெரிக்காவின் துரித உணவு நிறுவனங்களின் விற்பனை நிலையங்களை எதிர்த்த போது இவர் மட்டும் கட்டணங்கள் மற்றும் வர்த்தகம் தொடர்பான பொது ஒப்பந்தத்திற்கு (GATT) ஆதரவாக அணிவகுப்புகளை நடத்தினர். 1995 ஆம் ஆண்டில் இந்தியா உலக வர்த்தக அமைப்பில் (WTO) இணைந்ததை ஜோஷி வரவேற்றார்.
மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டம் : தற்கொலை செய்துகொண்ட பாதிரியார் உருக்கமான கடிதம்
திறந்த சந்தைகளைப் பற்றிய அவரது நம்பிக்கையே ஜோஷி மண்டி அமைப்பை எதிர்க்க வழிவகுத்தது. இந்த கூட்டுறவு சந்தைகள் விவசாயிகளுக்கு நேர்மையான விலையை பெறுவதற்கு ஒரு தடையாக இருப்பதாக அவர் உணர்ந்தார். மற்ற விவசாய தலைவர்கள் அரசாங்க மானியங்களைக் கோரியபோது, ஜோஷி திறந்த சந்தைகளைப் பற்றி பேசினார்.
சங்கதானாவும் தற்போதைய பிரச்சனைகளும்
திறந்த சந்தைகளுக்கான ஆதரவு என்பது சங்கதானாவின் டி.என்.ஏவில் இருக்கிறது. வேளாண் சீர்திருத்தங்கள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட பிறகு அரசுக்கு ஆதரவாக வந்த முதல் அமைப்பு இது தான். அந்த மூன்று சட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி மற்றும் வர்த்தக (ஊக்குவிப்பு மற்றும் வசதி) சட்டம், 2020 (The Farmers Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act, 2020 ) இந்த சங்கத்தினரிடம் நல்ல வரவேற்பை பெற்றது. சங்கதானாவின் தலைவர் அனில் கன்வத் கூற்றுப்படி, அதன் நான்கு சுவர்களுக்குள் விவசாய வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துவதற்கான ஏபிஎம்சிகளின் அதிகாரத்தை சட்டம் கட்டுப்படுத்துகிறது, மேலும் விவசாயிகளுக்கு உண்மையான சுதந்திர சந்தைகள் செயல்பட அனுமதிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
தற்போதைய முறை விவசாயிகளுக்கு சிறந்த விலையைப் பெறுவதைத் தடுக்கிறது என்று கன்வத் கூறினார். "ஒரு சில வர்த்தகர்கள் ஏலத்தை கட்டுப்படுத்துகிறார்கள். இப்போது சந்தைகள் திறக்கப்படுவதால், புதிய வர்த்தகர்கள் வர்த்தகத்தில் நுழைவார்கள் என்று நம்புகிறோம். இது நியாயமான போட்டிக்கு உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். மாற்றங்களின் விளைவாக, கிராமப்புறங்களில் உள்ள பதப்படத்தும் குளிர்சாதன கிடங்குகளில் முதலீடு செய்யப்படும் என்று கன்வத் கூறினார்.
வேளாண் துறை அமைச்சருடனான பேச்சுவார்த்தை குறித்து கேட்ட போது கன்வத், நாற்பது ஆண்டுகளில் முதன்முறையாக விவசாயிகள் திறந்த சந்தைகளில் இருந்து லாபம் அடைய ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. இரண்டு மாநிலங்களில் உள்ள விவசாயிகளின் அழுத்தத்தின் கீழ், மத்திய அரசு இந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கான முடிவை எடுத்தால், இதன் அர்த்தம் முன்முயற்சிக்கான முடிவாகும். விவசாயிகளுக்கு ஒரு இலவச சந்தையை வழங்க எந்தவொரு அரசாங்கமும் மீண்டும் முயற்சிக்காது, என்றார்.
மேலும் படிக்க : சீர்திருத்தம் நோக்கிய மாற்றங்களை செய்யவே எங்களது 303 இடங்கள் பெரும்பான்மை: தோமர்
சங்கதானாவின் அரசியல்
அரசியல் ரீதியாக மத்திய அரசின் கொள்கைகளுக்கு இடது புறத்தில் நிற்பதாக கூறுகிறது. மிகவும் பிரபலமாக இருந்த காலத்தில் சங்கதானாவின் முக்கிய தலைவர்கள் பலரும் மகாராஷ்ட்ராவின் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிவசேனா கட்சியில் இருந்து ஜோஷி ராஜ்யசபைக்கு சென்றார். ஆனால் பெண்களின் இட ஒதுக்கீட்டு மசோதாவிற்கு எதிராக வாக்களித்ததிற்காக நினைவு கூறப்படுகிறார். மகாராஷ்ட்ராவின் பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் ஜில்லா பரிஷாத் உறுப்பினர்களாக இவர்கள் திகழ்கின்றனர்.
வேளாண் சட்டங்களுக்கு சங்கதானம் ஆதரவளித்துள்ள நிலையில், வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் அது கோரியுள்ளது - மேலும் மத்திய அரசு கோரிக்கைக்கு இணங்கவில்லை என்றால் பாஜக எம்.பி.க்களை வெங்காயத்தால் தாக்குவோம் என்று மிரட்டியும் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.