Advertisment

காதில் தெளிக்கப்பட்ட விஷம்; உயிர் பிழைத்த அதிசயம்: யார் இந்த காலீத் மாஷல்?

ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவரான காலீத் மாஷல், கேரளத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் இளைஞர்கள் நடத்திய பாலஸ்தீன ஆதரவு பேரணியில் வெள்ளிக்கிழமை (அக்.27) காணொலி வாயிலாக உரை ஆற்றினார்.

author-image
WebDesk
New Update
Hamas leader who addressed a rally virtually in Kerala

ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவரான காலீத் மாஷல்

ஹமாஸ் இயக்கத்தின் முன்னாள் தலைவரான காலீத் மாஷல், கேரளத்தில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் இளைஞர்கள் நடத்திய பாலஸ்தீன ஆதரவு பேரணியில் காணொலி வாயிலாக உரை ஆற்றினார்.

இந்தப் பேரணி அக்.27ஆம் தேதி மலப்புரத்தில் நடந்தது. அப்போது, அல் அக்ஸாவில் உள்ள மசூதியை மீட்க வேண்டும் என்றும் சியோனிகளை தோற்கடிக்க வேண்டும் என்றும் பேசினார்.

Advertisment

தொடர்ந்து, இஸ்ரேல் நம் மீது பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துவருகிறது. மசூதி மட்டுமின்றி தேவாலயங்கள், கோவில்கள், பல்கலைக்கழகங்கள், ஐ.நா. அலுவலகங்கள் தாக்கப்படுகின்றன” எனக் குற்றஞ்சாட்டினார்.

மேலும், நம்மை காசாவில் இருந்து துரத்துவது மட்டும்தான் அவர்களின் நோக்கம் என்றும் கூறினார்.

இந்த நிலையில் இது குறித்து விசாரணை நடத்தி, “ஹமாஸ் பயங்கரவாதிகள்” மீது மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

டைம் நாளிதழால், “The Man Who Haunts Israel” என அழைக்கப்பட்ட காலீத் மார்ஷெல் தற்போது கத்தாரில் வசிக்கிறார். இவரின் வாழ்க்கையை பற்றி பார்ப்போம்.

யார் இந்த காலீத் மாஷல்?

மாஷல் மேற்குக் கரை நகரமான சில்வாடில் 1956 இல் பிறந்தார். இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே 1967 இல் நடந்த போருக்குப் பிறகு அவரது குடும்பம் தங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, அந்தப் போரில், இஸ்ரேல் வெற்றி பெற்று மேற்குக் கரையைக் கைப்பற்றியது.

இந்த நிலையில், பாலஸ்தீனத்திற்காக வன்முறையைப் பயன்படுத்தத் தயாராக இருந்த ஹமாஸ் என்ற போராளி அமைப்பில் மஷால் உறுப்பினரானார்.

அவர் 1996 முதல் 2017 வரை ஹமாஸின் பொலிட்பீரோ அல்லது அதன் முக்கிய முடிவெடுக்கும் அமைப்புக்கு தலைமை தாங்கினார்.

2017 ஆம் ஆண்டு அல் ஜசீராவுக்கு அளித்த பேட்டியில், “அமைப்பின் நிறுவனர்களில் நானும் ஒருவன். நான் முதல் நாளிலிருந்து அங்கேயே உள்ளேன்.

1987 இல் ஹமாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பே நான் ஸ்தாபனம் மற்றும் துவக்கத்தின் ஒரு பகுதியாக இருந்தேன்.

முதல் நாள் முதல் அதன் ஆலோசனைக் குழு மற்றும் தலைமைக் கட்டமைப்புகளில் உறுப்பினராக இருந்தேன். தற்போது, கத்தாரை தளமாகக் கொண்ட குழுவின் 'வெளிப்புற' பொலிட்பீரோவின் தலைவராக உள்ளேன்” என்றார்.

மஷல் 1967 மற்றும் 1990 க்கு இடையில் குவைத்தில் வசித்து வந்தார். அப்போது குவைத் பல்கலைக்கழகத்தில் பாலஸ்தீனிய இஸ்லாமிய இயக்கத்தை வழிநடத்தினார்.

1990 இல் வளைகுடாப் போர் தொடங்கிய பிறகு, குவைத்தின் மீதான ஈராக் படையெடுப்பு மேற்கத்திய கூட்டணிக்கு எதிராகப் போரிட வழிவகுத்தது.

அப்போது மஷல் ஜோர்டான் சென்றார். அவர் சிரியா மற்றும் ஈராக்கிலும் வாழ்ந்துள்ளார்.

இஸ்ரேலுக்கு எதிர்ப்பு

ஹமாஸ் தலைவர்கள் இஸ்ரேல் மீது கொண்டிருந்த எதிர்ப்பை மஷால் எதிரொலித்தார். நீண்ட காலமாக, இந்த அமைப்பு இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை.

1948 இல் இஸ்ரேல் நிறுவப்படுவதற்கு முன்னர் இருந்த பிரதேசங்கள் பாலஸ்தீனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கூறுகின்றன.

1990 களின் முற்பகுதியில் ஹமாஸ் உருவானது, பாலஸ்தீனிய விடுதலை அமைப்பில் (PLO) இருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டது. உலகில் மிகவும் வளர்ந்த இராணுவ அமைப்புகளில் ஒன்றான இஸ்ரேலை தாக்கும் முயற்சியில், ஹமாஸ் 1994 இல் இஸ்ரேலிய சிவிலியன் இலக்குகளுக்கு எதிராக தற்கொலை படை தாக்குதல் நடத்த தொடங்கியது.

இருப்பினும், 2017 இல் ஒரு ஆவணத்தில், ஹமாஸ் 1967 ஆறு நாள் போரில் இஸ்ரேல் ஆக்கிரமித்த பிரதேசங்களுக்குள் பாலஸ்தீன நாடு என்ற யோசனையை ஏற்றுக்கொண்டதாகக் கூறியது. இது அவர்களின் நிலைப்பாட்டை மென்மையாக்குவதாகக் கருதப்பட்டது.

ஆங்கிலத்தில் வாசிக்க: Who is Khaled Mashal, the Hamas leader who addressed a rally virtually in Kerala?

அந்த ஆவணத்தில் மேலும், “அதில் ஹமாஸ் மத போராட்டம் நடத்தவில்லை. யூதர்களுக்கு எதிராகவும் போராடவில்லை. ஆனால் சியோனியர்களுக்கு எதிராக போடுகிறது.

ஆக்கிரமிப்பு யூதர்களுக்கு எதிராக போராடுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சியோனிசம் என்பது 19 ஆம் நூற்றாண்டின் யூத மூதாதையர் தாயகத்தை உருவாக்குவதற்கான இயக்கம் ஆகும். மேலும் இது இன்றைய இஸ்ரேலின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பைக் குறிக்கிறது.

இதற்கிடையில் 2017-ல் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தை குறித்து மஷல் நேர்காணல் ஒன்றில் விரிவாக பேசினார். “எங்களைப் பொறுத்தவரை, பேச்சுவார்த்தைகள் இல்லை என்பது அல்ல; இது அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம் மற்றும் அது ஆற்றல் மிக்கது.

ற்போது, இஸ்ரேல் அமைதியில் ஆர்வம் காட்டவில்லை. இஸ்ரேல் நமக்கு எதிரான நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யுமாறு நிர்ப்பந்திக்கும் ஒரு யதார்த்தத்தை உருவாக்கும் அளவுக்கு நாம் வலுவாக இருக்கும்போது, பேச்சுவார்த்தைகளுக்கு மதிப்பும் அர்த்தமும் இருக்கும்" என்றார்.

இந்த நிலையில் இம்மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தாக்குதல் நடக்கும் சமயத்தில் மஷல் தி ராய்டர்ஸ்க்கு ஒரு செய்தி அனுப்பினார்.

அதில், "ஜோர்டானின் பழங்குடியினர் ஜோர்டானின் மகன்கள், ஜோர்டாவின் சகோதர சகோதரிகளே இது உண்மையின் தருணம். எல்லைகள் உங்களுக்கு நெருக்கமாக உள்ளன, உங்கள் பொறுப்பு உங்களுக்குத் தெரியும்” எனக் கூறியிருந்தார்.

இஸ்ரேலிய படுகொலை முயற்சி

1997ல் மஷல் ஜோர்டானில் தங்கியிருந்தார். அப்போது இஸ்ரேல் பிரதமராக பெஞ்சமின் நேதன்யாகு இருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட் உளவாளிகள் இருவர் மஷலை கொல்ல முயற்சித்தனர்.

அப்போது இவரின் காதில் விஷம் தெளிக்கப்பட்டது. இது அவரை நீண்ட தூக்கத்துக்கு அழைத்துச் செல்லும் என இஸ்ரேலியர்கள் நம்பினர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மஷல் உயிர் பிழைத்தார். எனினும் இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் நிராகரித்தது.

ஜோர்டான்-இஸ்ரேல் நிலைப்பாட்டை மத்தியஸ்தம் செய்வதில் கிளின்டன் ஈடுபட்டார்.

இதையும் படிங்க : கேரளத்தில் பாலஸ்தீன ஆதரவு பேரணி: வீடியோ காலில் பேசிய ஹமாஸ் முன்னாள் தலைவர்!

மஷால் குணமடைய ஜோர்டானிய மருத்துவர்களுக்கு நெதன்யாகு ஒரு மாற்று மருந்தை வழங்க வேண்டியிருந்தது.

1997 நியூயார்க் டைம்ஸ் கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட பேச்சுவார்த்தையாளர்களின் கூற்றுப்படி, ஜோர்டான் இறுதியில் இஸ்ரேலில் இருந்து தாக்குதலை நடத்த வந்த எட்டு மொசாட் முகவர்களை விடுவிப்பது பற்றி விவாதிக்க ஒப்புக்கொண்டது, மேலும் இஸ்ரேல் இறுதியில் ஷேக் அகமது யாசினை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஹமாஸ் இயக்கத்தின் ஆன்மீகத் தலைவர் ஆவார்.

நெதன்யாகு, அமெரிக்க அழுத்தத்தின் கீழ், மற்ற ஹமாஸ் கைதிகளை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஏனெனில் ஜோர்டானிய மன்னர் எச்சரிக்கை விடுத்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

hamas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment