Advertisment

HDFC லிமிடெட் மற்றும் HDFC வங்கி இணைப்பின் தாக்கம் எப்படி இருக்கும்?

பெரிய அளவிலான உள்கட்டமைப்பு செலவுகளுக்கு கடனுதவி செய்ய முடியும். மலிவான வீடுகள் வாங்க நினைபவர்களுக்கு ஆதரவளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
HDFC லிமிடெட் மற்றும் HDFC வங்கி இணைப்பின் தாக்கம் எப்படி இருக்கும்?


இந்தியாவின் முன்னணி வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான எச்டிஎஃப்சி, தனது துணை நிறுவனமான எச்டிஎஃப்சி வங்கியுடன் இணைய முடிவெடுத்துள்ளது.

Advertisment

இந்திய நிதிசார் துறையில் இது மிகப் பெரிய ஒப்பந்தமாகக் கருதப்படுகிறது. இந்த இணைப்பு அறிவிப்பு இரண்டு நிறுவனங்களின் பங்குகளின் விலையில் உயர்வுக்கு வழிவகுத்தது. இது ஆரம்ப வர்த்தக நேரத்தில் 7 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்தது.

ஒழுங்குமுறை ஒப்புதல்கள் மற்றும் பிற வழக்கமான மூடல் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அடுத்த 18 மாதங்களில் பரிவர்த்தனை முடிவடையும் என்று HDFC வங்கி தெரிவித்துள்ளது.

பரிவர்த்தனை கட்டமைப்பின்படி, இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு நிதி நிறுவனமான HDFC லிமிடெட், ரூ. 5.26 டிரில்லியன் மதிப்புள்ள சொத்துகள் (AUM) மற்றும் ரூ. 4.44 டிரில்லியன் மதிப்புள்ள சந்தை மூலதனம் கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கியுடன்
சந்தை மதிப்பு ரூ.8.35 டிரில்லியனுடன் இணைக்கப்படும்.

HDFC லிமிடெட்டின் துணை அல்லது அசோசியேட்டுகளும் HDFC வங்கிக்கு மாற்றப்படும்.

பரிவர்த்தனையின் பங்கு இடமாற்று விகிதம் என்ன?

HDFC லிமிடெட்டின் பங்குதாரர்கள், பதிவு செய்யப்பட்ட தேதியின்படி, HDFC லிமிடெட்டின் 25 பங்குகளுக்கு HDFC வங்கியின் 42 பங்குகளைப் பெறுவார்கள்.

உரிமை எப்படி மாறும்?

இணைப்பிற்குப் பிறகு, HDFC வங்கியில் HDFC லிமிடெட்டின் பங்குகள் நிறுத்தப்படும். HDFC வங்கி 100 சதவிகிதம் பொது பங்குதாரர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும். HDFC லிமிடெட்டின் தற்போதைய பங்குதாரர்கள் எச்டிஎஃப்சி வங்கியின் 41% பங்குகளை வைத்திருப்பார்கள்.

மத்திய அமைச்சர்களுக்கு எப்படி பங்களாக்கள் ஒதுக்கப்படுகின்றன? வெளியேற்றும் செயல்முறை என்ன?

இணைப்பு இரண்டு நிறுவனங்களுக்கும் எவ்வாறு பயனளிக்கும்?

இது ஒரு பெரிய வாடிக்கையாளர் தளத்திற்கு வித்திடும். அதேவேளையில், நகர்ப்புற, ஊரக மற்றும் கிராமப்புற பகுதிகளில் முழுவதும் அவற்றின் விநியோகத்தை மேம்படுத்த இந்த நடவடிக்கை உதவும்.
ரூ 17.87 டிரில்லியன் மற்றும் ரூ 3.3 டிரில்லியன் நிகர மதிப்பின் ஒருங்கிணைந்த இருப்பு நிலை மிகப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதன்மூலம், பெரிய அளவிலான உள்கட்டமைப்பு செலவுகளுக்கு கடனுதவி செய்ய முடியும். மலிவான வீடுகள் வாங்க நினைபவர்களுக்கு ஆதரவளிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment