Advertisment

ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் அவசியம்; நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்த காரணம் என்ன?

ஆறு மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் கட்டாயம் கொடுக்க வேண்டும்; இப்போது மருத்துவ நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்தக் காரணம் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் அவசியம்; நிபுணர்கள் மீண்டும் வலியுறுத்த காரணம் என்ன?

Anonna Dutt

Advertisment

Explained: Why babies must only be breastfed for 6 months: சமீபத்தில் வெளியிடப்பட்ட ஊட்டச்சத்து குறித்த வழிகாட்டுதல்களில், ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில், புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நெய் மற்றும் தேன், தங்கப் பசை மற்றும் பல மூலிகைகள் ஆகியவற்றைக் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்த வழிகாட்டுதல்கள், பிறந்த முதல் நாளில் சில மூலிகைகளுடன் தேன் மற்றும் வெண்ணெய், இரண்டாவது நாளில் மூலிகைகள் கொண்ட நெய், மற்றும் மூன்றாவது நாளில் நெய் மற்றும் தேனுடன் கொலஸ்ட்ரம் (தாயின் முதல் பால்) ஆகியவற்றை கொடுக்க பரிந்துரைக்கிறது.

தாய்ப்பாலின் நிரூபிக்கப்பட்ட நன்மைகளுக்கு முரணாக பல மருத்துவர்கள் இந்த வழிகாட்டுதல்களை கூறியுள்ளனர். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு தேன் ஊட்டுவது பொட்டுலிசம் எனப்படும் அரிதான ஆனால் தீவிரமான தொற்றுக்கு வழிவகுக்கும் என்று சில மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தாய்ப்பால் கொடுக்க எப்போது தொடங்க வேண்டும்?

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதை விரைவில் தொடங்க வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். “குழந்தைகள் பிறந்த உடனேயே தாய்ப்பால் கொடுக்கத் தொடங்குவது முக்கியம்; கொலஸ்ட்ரமில் ஆன்டிபாடிகள் நிறைந்துள்ளன மற்றும் குழந்தைகளை நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. உண்மையில், தேன், சர்க்கரை, உப்பு, பருப்புகள் மற்றும் பசும்பால் ஆகியவற்றை குழந்தைக்கு 1 வயது வரை கொடுக்கக் கூடாது” என்று மதுகர் ரெயின்போ குழந்தைகள் மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் நிதின் வர்மா கூறினார்.

ஒரு வயதிற்கு முன் தேனை உட்கொள்வது பொட்டுலிஸத்துடன் தொடர்புடையது, பாக்டீரியா தொற்று காரணமாக விஷம் ஏற்படுகிறது, இது கண், முகம், வாய் மற்றும் தொண்டையின் தசைகளின் பலவீனத்திற்கு வழிவகுக்கிறது, இது உடல் மற்றும் கால்களுக்கும் பரவுகிறது. பாக்டீரியா சுற்றுச்சூழலில் பரவலாக இருந்தாலும், அசுத்தமான தேன் குழந்தைகளின் பொட்டுலிசத்திற்கான காரணங்களில் ஒன்றாகும். உலக சுகாதார அமைப்பு, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் மற்றும் மயோ கிளினிக் ஆகிய அனைத்தும் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேனை வழங்குவதை எதிர்த்து பரிந்துரைக்கின்றன.

சப்தர்ஜங் மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவப் பேராசிரியரான டாக்டர் ரூபாலி திவான் கூறியதாவது: ஆரம்பகால தாய்ப்பால் தாய் வெளிப்படுத்தும் பாலின் அளவை அதிகரிக்கிறது மற்றும் அவர்களின் பிணைப்பை அதிகரிக்கிறது. எங்கள் மருத்துவமனையில், பிரசவ அறைக்குள்ளேயே தாய்ப்பால் கொடுப்பதை எங்கள் செவிலியர்கள் உறுதி செய்கிறார்கள். குழந்தைகள் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பாலை தவிர வேறு எதுவும் கொடுக்க கூடாது, ஏன் தண்ணீர் கூட கொடுக்க கூடாது என்று தாய்மார்களிடம் கூறுகிறார்கள்.

ஏன் ஆறு மாதங்கள்?

"குழந்தைக்கு ஆறு மாதங்கள் வரை தேவையான கலோரிகள் தாய்ப்பாலில் உள்ளன. குழந்தைகள் குறிப்பிட்ட அளவு திரவங்களை மட்டுமே உட்கொள்ள முடியும். குழந்தைகள் 800 மில்லி திரவங்களை உட்கொள்ளலாம் என்று வைத்துக் கொள்ளும்போது, நீங்கள் அவர்களுக்கு 100 மில்லி தண்ணீரைக் கொடுத்தால், அவர்கள் 100 மில்லி பாலில் உள்ள கலோரிகளை இழக்கிறார்கள்," என்று டாக்டர் நிதின் வர்மா கூறினார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு அரை திட உணவை (நீர் மற்றும் திட உணவு சேர்ந்த கலவை) அறிமுகப்படுத்த வேண்டும். மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவப் பேராசிரியரான டாக்டர் சுனீலா கார்க் கூறுகையில், "ஆறு மாதங்களுக்குப் பிறகு, குழந்தையின் எடை இரட்டிப்பாகும் போது, ​​தாய்ப்பால் போதுமானதாக இல்லை, மேலும் அவர்களுக்கு அரை-திட உணவுகள் வடிவில் நிரப்பு ஊட்டச்சத்து தேவைப்படுகிறது”, என்றார்.

இதையும் படியுங்கள்: UPI உடன் கிரெடிட் கார்டுகளை இணைக்க ரிசர்வ் வங்கி திட்டம்

டாக்டர் நிதின் வர்மா, “<தேன் மற்றும் மூலிகைகள் பற்றிய> இந்த வகையான செய்திகள் மக்களை குழப்புகிறது, குறிப்பாக அதிகம் படிக்காதவர்களை குழப்புகிறது. ஆறு மாதங்களுக்கு பிரத்தியேக தாய்ப்பால் இருக்க வேண்டும் என்ற ஒரு தெளிவான செய்தியை வைத்திருப்பது நல்லது” என்று கூறினார்.

இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் வழிகாட்டுதல்கள் எவ்வளவு பரவலாக பின்பற்றப்படுகின்றன?

"மருத்துவர்களின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், சுமார் 56% முதல் 60% பெண்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறார்கள். சிலரால் முடியாது, ஆனால் தாய்ப்பால் கொடுக்க முடிந்த நிலையிலும் சிலர் ஃபார்முலா மில்க் கொடுக்கிறார்கள். ஆனால் அது பரிந்துரைக்கப்படவில்லை. பாட்டில்கள் உண்மையில் ஒரு பெரிய கொலையாளி. பாட்டில் உணவுக்காக, ஒவ்வொரு பயன்பாட்டிற்குப் பிறகும் கொதிக்கவைத்த தண்ணீரில் 10 நிமிடங்கள் கிருமி நீக்கம் செய்ய வேண்டும். எல்லா நேரத்திலும் 100% கிருமி நீக்கம் செய்ய முடியாது, இது குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கிறது, ”என்று டாக்டர் கார்க் கூறினார்.

"ஃபார்முலா மில்க்கின் விகிதாச்சாரத்தை சரிசெய்வதும் கடினம். மக்கள் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஃபார்முலா மில்க் போடுகிறார்கள், ஆனால் அது உண்மையில் நீர்த்ததாக இருக்கும். ஃபார்முலா பாக்ஸ் எட்டு முதல் பத்து நாட்களில் முடிந்துவிடும் மற்றும் அது மிகவும் விலை உயர்ந்தது. ஆனால் குறைவான உணவு ஊட்டச்சத்துக் குறைபாட்டிற்கு வழிவகுக்கும்,” என்றும் டாக்டர் கார்க் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Explained Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment