சமீபத்திய ஆண்டுகளில் சார்ஸ் சுவாச நோய்க்குறி (SARS), பறவைக் காய்ச்சல், நாவல் கொரோனா வைரஸ் (nCOV) போன்ற கடுமையான கொடிய வைரஸ்கள் சீனாவில் இருந்து பரவிகின்றன.
சீனா நகரங்களில் இயங்கும் பரபரப்பான சந்தைகளும் இதற்கு முக்கிய முக்கிய காரணமாக இருக்கலாம். இங்கு பழங்கள், காய்கறிகள், அன்றாட இறைச்சிக் கடைகள் யாவும் எலிகள், பாம்புகள், ஆமைகள் விற்கும் கடையின் அருகே தான் இயங்குகின்றன.
சீன மக்களுக்கு இறைச்சிகளின் மேலுள்ள நாட்டம், அதிக மக்கள் தொகை , அடர்த்தியான நகர கட்டமைப்பு ஆகியவை ஜூனோடிக் நோய்த்தொற்றுகள் (விலங்குகளின் மூலம் பரவும் தொற்றுநோய்) பரவுவதற்கான நிலைமைகளை உருவாக்குகின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜூனோடிக் நோய்த்தொற்றுகள் :
ஜஸ்டினியன் பிளேக் (கி.பி 541-542), கருப்பு மரணம் (இது 1347 இல் ஐரோப்பாவில் தொடங்கியது), 16 ஆம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவில் பரவிய மஞ்சள் காய்ச்சல், 1918 இல் உலகளாவிய காய்ச்சல், நவீன தொற்றுநோய்களான எச்.ஐ.வி / எய்ட்ஸ், எஸ்.ஏ.ஆர்.எஸ். எச்1என்1 இன்ஃப்ளூயன்ஸா போன்ற எல்லாவற்றிக்கும் ஒரு பொதுவான அடிப்படையான உண்டு- அது, என்னவென்றால் நோய்களை ஏற்படுத்தும் உயிரினம் விலங்குகளிடமிருந்து உருவாவதுதான்.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில், பில்லியன் கணக்கான நோய்கள், மில்லியன் கணக்கான இறப்புகள் ஜூனோடிக் நோய்த்தொற்றுகள் மூலம் நிகழ்கின்றன. (அதாவது, மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும்(முதுகெலும்பு உள்ள ) இடையில் இயற்கையாகவே பரவும் நோய்த்தொற்றுகள்)
தற்போது உலகில் வளர்ந்து வரும் தொற்று நோய்களில் 60% இந்த வகையான ஜூனோஸ்கள் தான். கடந்த மூன்று தசாப்தங்களாக கண்டறியப்பட்ட 30 க்கும் மேற்பட்ட புதிய மனித நோய்க்கிருமிகளில் (pathogens), 75% விலங்குகளிலிருந்தே தோன்றின.
கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க, இங்கே கிளிக் செய்யவும்
எல்லா இடங்களிலும் விலங்கு சந்தைகள்…
மனிதர்கள் மற்றும் விலங்குகள் நெருக்கமாக கலக்கும் சந்தைகளில், (குறிப்பாக இரத்தம் மற்றும் பிற உடல் தயாரிப்புகளை ஒழுங்கற்ற முறையில் கையாளும் இடங்களில்) விலங்குகளிடமிருந்து ஒரு வைரஸ் மனிதர்களுக்கு பரவுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. மேலும் அந்த வைரஸ் இறுதியாக மனிதர்களுக்கு ஏற்ற மரபணு பிறழ்வை மாற்றியமைத்துக்கொள்கிறது என்று ஜெனீவாவில் இயங்கும் உலக சுகாதரா அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழிடம் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில் ,”சீனாவில் மட்டுமல்ல,வனங்களில் (அல்லது) விலங்குகள் வளர்கப்படும் இடங்களில் மனித-விலங்கு சந்திப்பு ஒழுங்கற்ற முறையில் இருந்தால், இதுபோன்ற பின்விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்தார்.
உதாரணமாக, ஆப்பிரிக்காவில் பரவிய எபோலா அபயாத்தை பற்றி அவர் குறிப்பிடுகையில்”அங்கே காட்டு சிம்பன்சிகளுக்கு அந்த நோய் இருந்தது. இவை கொல்லப்பட்டு மக்கள் நுகர்ந்த பிறகு அது மனிதர்களுக்குள் வந்தது.
குறிப்பாக சீனாவில்
எய்ம்ஸ் முன்னாள் பேராசிரியரும், இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் (பி.எச்.எஃப்.ஐ) தலைவருமான டாக்டர் கே.எஸ்.ரெட்டி இது குறித்து கூறுகையில், கடந்த ஐந்து தசாப்தங்களாக, புதிய தொற்றுநோய்களின் அச்சுறுத்தும் நுண்ணுயிரிகள், விலங்குகளிடமிருந்து தான் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன என்றார்.
சீனாவில் உள்ள இறைச்சி உணவுச் சந்தைகள் பல விலங்குகளின் கலவையைக் கொண்டிருக்கிறது. இதனால் , அங்கே கொடிய வைரஸ்கள் உருவாததற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் தெரிவித்தார்.
அனைத்தையும் எதிர் கொள்ளும் ஒரு கொடுமையான வைரஸ் விகாரங்கள் இறுதியாய் உருவாகுகின்றது. மனித முட்டாள்தனத்தின் மூலம் நுண்ணுயிர் மரபியல் தனது வாய்ப்பை கெட்டியாக பயன்படுத்துகிறது.
கீனி மீனியும் மனித உரிமை மீறல்களும்
நோய்த்தொற்றுகளின் சூழலியல், பரவல்:
ஏறக்குறைய 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்ட நாடு சீனா. உலகின் ஒட்டுமொத்த 50% கால்நடைகள் சீனாவில் தான் இருக்கின்றன. இத்தகைய சூழலியல் புதுமையான நோய்களுக்கு வித்திடிகின்றன. இது சீனாவையும் மட்டுமல்ல, உலகின் பிற பகுதிகளையும் அச்சுறுத்தும் வகையில் உள்ளது என்று அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கருத்து தெரிவித்துள்ளது . உலகின் விமான பயண வழித்தடங்கள் நோய்த்தொற்றுகள் விரைவாக உலகமுழுவதும் பரவுவதற்கான அபாயத்தை வியத்தகு முறையில் அதிகரிக்கின்றன. இது உலக வர்த்தகத்தையே பாதிக்கும்” என்றும் கூறுகிறது.
உதாரணமாக, 2002ஆம் ஆண்டு தென் சீனாவில் உள்ள குவாங்டாங்க் மாகாணத்தில்தான் முதன்முதலில் சார்ஸ் தொற்று கண்டறிப்பட்டது. அதனைத் தொடர்ந்து 26 நாடுகளில் 8,000க்கும் மேற்பட்டோருக்கு சார்ஸ் பாதிப்பு ஏற்பட்டது. 2013 ஆம் ஆண்டின் எச் 7 என் 9 நாவல் ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வெடித்தபின் சீனாவிலிருந்து பல்வேறு வகையான பறவைக் காய்ச்சல் மீண்டும் மீண்டும் தென்பட்டது. 2018 ஆம் ஆண்டில், ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த 68 வயதான நோயாளிக்கு எச் 7 என் 4 தொற்று ஏற்பட்டது. கடந்த ஆண்டு, மேற்கு மேற்கு சின்ஜியாங் பிராந்தியத்தில் ஹோர்கோஸில் எச் 5 என் 6 பறவைக் காய்ச்சல் பரவியது என்று தெரிவித்தார்.