Advertisment

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் அரசின் முன்மொழிவை விவசாயிகள் புறக்கணிப்பது ஏன்?

இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாய அமைப்புகள் ஒன்றுபட்ட போராட்டத்தைத் தொடர உறுதியாக உள்ளன என்று அவர் கூறினார்.

author-image
WebDesk
New Update
Why farmers continue to oppose Centre’s proposal to end deadlock

 Anju Agnihotri Chaba 

Advertisment

Why farmers continue to oppose Centre’s proposal to end deadlock : புதிய வேளாண் சட்டங்களில் மாற்றங்களை கொண்டு வந்து அறிவிக்கப்பட்ட முன்மொழிவினை விவசாயிகள் சிறிது நேரம் கூட தாழ்த்தாமல் நிராகரித்துவிட்டனர். பாரதிய கிஷான் சங்கத்தின் பொது செயலளார் ஜக்மோகன் சிங் பாட்டியாலா ஏன் மத்திய அரசின் முன்மொழிவை எதிர்த்தார் என்பதை பட்டியலிட்டார்.

அரசின் பரிந்துரை : தனியார் மண்டிகலுக்கு கட்டணம் மற்றும் செஸ் வரிகளை விதித்தல்

விவசாயிகளின் எதிர்ப்பு : அரசு நடத்தும் மண்டிகளுடன் தனியார் நிறுவனங்களின் மண்டிகள் துவங்கப்பட்டால் அனைத்து வேளாண் வர்த்தகங்களும் தனியார் சந்தைகளை நோக்கி நகர்ந்துவிடும். அது அரசின் சந்தைகளுக்கும் கமிஷன் ஏஜெண்ட் அமைப்புகளுக்கும் முடிவாக அமைந்துவிடும். அதே போன்று மண்டிகளின் பயன்பாடும் முடிவிற்கு வந்துவிடும். பிறகு தனியார் நிறுவனங்களும் பெரிய வர்த்தக நிறுவனங்களும் தான் அனைத்து வேளாண் பொருட்களையும் கொள்முதல் செய்து விலையை நிர்ணயம் செய்யும். அரசு இரண்டு சந்தைகளுக்கும் ஒரே மாதிரியாக வரி, கட்டணம் மற்றும் செஸ் போன்றவை விதிக்கப்படும் என்று கூறுகிறது. ஆனால் அரசு வேண்டும் என்றே கொள்முதலை தாமதம் செய்து பொது சந்தைகளின் திறனை குறைத்துவிடும்.

அரசின் பரிந்துரை : தற்போது நடைமுறையில் இருக்கும் எம்.எஸ்.பி. திட்டத்தினை தொடர்வதற்கான எழுத்துப்பூர்வ உறுதி

விவசாயிகளின் எதிர்ப்பு : நாங்கள் தற்போது இருக்கும் மண்டிகளை புதிதாக வந்திருக்கும் வேளாண் சட்டங்கள் முடிவுக்கு கொண்டு வரும் என்று அஞ்சமட்டும் இல்லை. இது உண்மையாக நடைபெறும் என்றே நம்புகின்றோம். அதனால் நாங்கள் மத்திய அரசு எம்.எஸ்.பி.க்கு ஒரு விரிவான சட்டத்தை அனைத்து பயிர்களுக்கும் நாடு முழுவதும் வழங்க வேண்டும். ஆனால் அரசோ இதனை சட்டமாக்குவது குறித்து யோசிக்கிறது. ஆனால் வெறும் எழுத்துப்பூர்வ உறுதி மட்டும் வழங்குகிறேன் என்று கூறுகிறது. இது சட்டப்பூர்வ ஆவணமும் இல்லை அதற்கு கேரண்ட்டியும் இல்லை. அதனால் தான் அரசு தர விளையும் எழுத்துப்பூர்வ உறுதியை நாங்கள் வேண்டாம் என்றோம்.

அரசின் பரிந்துரை : மாநில அரசு வர்த்தகர்களை ஒழுங்குப்படுத்த பதிவு செய்யலாம்

விவசாயிகளின் எதிர்ப்பு : தற்போதைய சட்டத்தில் வர்த்தகர்களை ஒழுங்குப்படுத்துவதற்கான எந்த விதமான வழியும் இல்லை. பான் கார்டுகள் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் சந்தையில் இருந்து தானியங்களை விருப்பமான விலைக்கு வாங்கி பதுக்கலில் ஈடுபட வழிவகை செய்கிறது. மத்திய அரசு வர்த்தகர்களை ஒழுங்குப்படுத்தவதற்கு பதிலாக அதனை மாநில அரசிற்கு தள்ளுகிறது. இதன் மூலம் எந்த பொறுப்பையும் மத்திய அரசு எடுத்துக் கொள்ள தயாராக இல்லை. இதுவும் உழவர்கள் கொடுத்த அழுத்ததினால் முன்மொழியப்பட்டது.

மேலும் படிக்க : விவசாயிகள் போராட்டம் : 303 சீட்கள் மாற்றத்திற்கும் சீர்திருத்தங்களுக்கும் தேவை

அரசின் பரிந்துரை : : ஒப்பந்த வேளாண் சட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நீதிமன்றத்தை அணுகுவதற்கான மாற்று இருக்கும், மேலும் விவசாயிகளின் நிலம் மற்றும் அவற்றின் கட்டிடங்களுக்கு அடமானம் வைப்பதன் மூலம் கடன் வழங்கப்படாது என்பதால் அவர்களின் நிலம் பாதுகாப்பாக இருக்கும்.

விவசாயிகளின் எதிர்ப்பு : ஒப்பந்த விவசாயத்தின் கீழ் பெரிய நிறுவனங்களால் விவசாயிகளின் நிலம் அபகரிக்கப்படும் என்று விவசாயிகள் அச்சம் அடைந்தனர். ஆனால் மத்திய அரசு ஒப்பந்த விவசாயத்தின்ன் போது நிலத்தை விற்கவோ, அடமானம் செய்யவோ, மற்றவர்களுக்கு கைமாற்றவோ முடியாது என்று கூறி விவசாயிகளின் அச்சத்தை நீக்க ஒரு பரிந்துரையை முன் வைத்தது. ஆனால் ஒப்பந்த விவசாயத்தின் வரலாறு என்பது தரமற்ற பொருள் என்று கூறி நிறுவனங்கள் பணம் தராமல் போனதும் உண்டு. கரும்புத்துறையில் பல ஆண்டு காலமாக விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படாமலே இருந்தது. அல்லது மோசமான பொருள் என்று கூறி கொள்முதல் செய்யாமல் போனதும் உண்டு. இது விவசாயிகளை கடன்களை வாங்க உந்தியது. அவர்களால் கடனை திருப்பி செலுத்த முடியாத போது நிலத்தை விற்றனர் அல்லது நிலத்தை இழந்தனர். ஒப்பந்த விவசாயம் உலகெங்கிலும் விவசாயிகளை இடம்பெயரவும் அழிக்கவுமே உதவியது. அமெரிக்காவிலும் கூட (பெரிய அளவு மானியங்கள் அளிக்கும் நாடு) விவசாயிகள் தற்கொலைக்கு உந்தப்பட்டனர்.

அரசின் பரிந்துரை : பவர் பில் 2020 என்பது விவாதங்களுக்கான ஒரு வரைவு

விவசாயிகளின் எதிர்ப்பு : மாநில பட்டியலில் இருக்கும் மின்சாரத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மத்திய அரசு வேண்டுகிறது. விவசாயிகளுக்கு வரும் மின் மானியத்தை அரசு நிறுத்த உள்ளாது. உலக வர்த்தக அமைப்பு, மானியங்களை நிறுத்துமாறு தொடர்ந்து கூறியது. அதனால் மோடி அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் மின்சாரத்தை கொண்டு வர முயன்று வருகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு கூறுகின்றனர். இந்த மசோதாவில் மானியத்தை விலக்க அரசு முன்மொழிகிறது. மேலும் மின்சார மானியத்தை பணமாக வழங்குவோம் என்று கூறுகிறது. ஆனால் பெரும்பான்மையான குறுசிறு விவசாயிகள் தங்களின் மின்சார கட்டணத்தையே செலுத்த முடியாத நிலையில் உள்ளனர். எனவே இது நடைமுறையில் சாத்தியமில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

அரசின் பரிந்துரை : இந்திய தலைநகர் பகுதியில் மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான சட்டத்தில் திருத்தம்

விவசாயிகளின் எதிர்ப்பு : மத்திய அரசு சோகைகளை எரிப்பதால் தான் டெல்லியில் மாசு ஏற்படுகிறது என்று அரசு நினைக்கின்றனது. அதனால் இந்த செயல்பாட்டில் ஈடுபட்டால் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. விவசாயிகளின் அழுத்ததால் தற்போது அரசாங்கம் திருத்தங்களை முன்வைக்கிறது. இந்த சட்டம் ஏழை விவசாயிகளை துன்புறுத்த மட்டுமே.

முன்மொழியப்பட்ட திருத்தங்களால் எந்த பலனும் இல்லை. இந்தச் சட்டங்கள் ரத்து செய்யப்படும் வரை விவசாய அமைப்புகள் ஒன்றுபட்ட போராட்டத்தைத் தொடர உறுதியாக உள்ளன என்று அவர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil 

Farmer Farmer Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment