அயர்லாந்து அதன் வரி கட்டமைப்பிற்காக ஏன் போராடியது?

அதன் அலுவலகம் 1980 முதல் தெற்கு நகரமான கார்க்கில் உள்ளது, அங்கு 5,000 பேர் வேலை செய்கிறார்கள்

By: July 17, 2020, 5:31:40 PM

பெரிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரி சலுகைகளை வழங்கும் உறுப்பு நாடுகளை கட்டுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாகக் குழு மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஒரு அடியாக, 27 உறுப்பினர்களைக் கொண்ட இரண்டாவது பெரிய நீதிமன்றம் புதன்கிழமை தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. அதில், அமெரிக்க நிறுவனம் ஐரிஷ் அரசாங்கத்திற்கு 13 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 1.1 லட்சம் கோடி) திரும்ப வரி செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிட்டுள்ளது.

2016ம் ஆண்டின், ஐரோப்பிய ஆணையத்தின் முடிவுக்கு எதிராக ஆப்பிள் மற்றும் ஐரிஷ் அரசாங்கத்தின் கூட்டு மேல்முறையீட்டை பொது நீதிமன்றம் விசாரித்தது. இதில், அயர்லாந்து 2003 முதல் 2014 வரை ஆப்பிள் நிறுவனத்திற்கு நியாயமற்ற வரி சலுகையை அளித்திருப்பதைக் கண்டறிந்தது, மேலும் 13 பில்லியன் டாலர்களை தொழில்நுட்ப நிறுவனத்திடமிருந்து பெற அயர்லாந்து தேசத்திற்கு உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை ஆப்பிள் மற்றும் ஐரிஷ் அரசாங்கம் வரவேற்றுள்ள நிலையில், விமர்சகர்கள் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் வரி வசூல் முயற்சிகளுக்கு ஒரு பின்னடைவு என்று கண்டித்துள்ளனர். கோவிட் -19 இன் பொருளாதார வீழ்ச்சியை அடுத்து இந்த தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சிபிஎஸ்இ: 10,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஏன் மாறுபட்ட வகையில் உள்ளது?

2016 ல் ஐரோப்பிய ஆணையம் என்ன கூறியது?

ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஆப்பிள் நிறுவனத்தின் செயல்பாடுகளின் அடிப்படை அயர்லாந்து ஆகும். அதன் அலுவலகம் 1980 முதல் தெற்கு நகரமான கார்க்கில் உள்ளது, அங்கு 5,000 பேர் வேலை செய்கிறார்கள்.

ஆகஸ்ட் 2016 இல், ஐரோப்பிய ஆணையம் ஐரிஷ் அரசாங்கம் சட்டவிரோதமாக ஆப்பிள் நிறுவனத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூறியது, அயர்லாந்து மற்ற நிறுவனங்களுக்கு வழங்காத நன்மைகளைத் தந்தது. நாட்டில் ஆப்பிளின் “தலைமை அலுவலகம் என்று அழைக்கப்படுவது” “காகிதத்தில் மட்டுமே இருந்தது” என்று அது குற்றம் சாட்டியது, மேலும் அந்நிறுவனம் “பல ஆண்டுகளில் மற்ற வணிகங்களை விட கணிசமாக குறைந்த வரி” செலுத்த அனுமதித்ததாக அயர்லாந்து மீது குற்றம் சாட்டியது.

நாட்டில் உள்ள இணைக்கப்பட்ட இரண்டு shell companies (எந்தவித இயக்கமும், செயல்பாடும் இல்லாத நிறுவனங்கள்) மூலம், ஐரிஷ் வரி அதிகாரிகளின் உடன்படிக்கையோடு, தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், 2003 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் ஈட்டிய லாபத்தில் 1 சதவீத கார்ப்பரேட் வரியை செலுத்த முடிந்தது என்று ஆணையம் கூறியது. 2014 ஆம் ஆண்டில், அதன் வரி செலுத்துதல் 0.005 சதவீதமாக இருந்தது.

அயர்லாந்து ஆப்பிள் நிறுவனத்திற்கு சட்டவிரோத உதவிகளை வழங்கியதாக முடிவுக்கு வந்த ஆணையம், ஐரிஷ் அரசாங்கத்திற்கு 13 பில்லியன் டாலர் திருப்பிச் செலுத்த வேண்டும் என்று நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

செப்டம்பர் 2018 இல், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், ஆப்பிள் வரித் தொகையை செலுத்தியதாகவும் கூடுதலாக 1.2 பில்லியன் டாலர் (சுமார் 10,000 கோடி ரூபாய்) வட்டியாக கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. பணம் ஒரு எஸ்க்ரோ கணக்கில் வைக்கப்பட்டது, அதன் விதி சட்ட நடவடிக்கைகளை முடிக்கக் காத்திருக்கிறது.

அயர்லாந்து ஏன் இந்த பணத்தை மறுத்தது?

அயர்லாந்தின் குறைந்த கார்ப்பரேட் வரி விகிதம் அதன் பொருளாதாரக் கொள்கையின் முக்கிய அம்சமாகும். 12.5 சதவீதம் என்பது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இரண்டாவது மிகக் குறைவானதாகும்.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, ஆப்பிள் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அனைத்து வேலைகளிலும் 20 சதவீதத்தை ஈடுசெய்கின்றன, இந்த காரணிகள், அயர்லாந்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை ஈர்ப்பதில் கருவியாக உள்ளன.

எனவே, பெரிய நிறுவனங்களுக்கான முதலீட்டு இடமாக அதன் நிலையை தக்க வைக்க, ஐரிஷ் அரசாங்கம் ஆப்பிள் வரிகளை திருப்பிச் செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என்ற கருத்தை முன்வைத்தது.

2016 ஆம் ஆண்டின் முடிவை ரத்து செய்த லக்ஸம்பேர்க்கை தளமாகக் கொண்ட நீதிமன்றம், ஐரோப்பிய ஆணையம் அயர்லாந்தின் ஐரோப்பிய ஒன்றிய விதிகளை மீறுவதை நிரூபிக்கத் தவறிவிட்டது என்றும், “சட்டத் தரத்தைக் காண்பிப்பதில் வெற்றி பெறவில்லை” என்றும் கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி: ஆக்ஸ்போர்டு, மாடர்னா பல்கலைக்கழக ஆய்வில் முன்னேற்றம்

இந்த தீர்ப்பை ஐரிஷ் வெளியுறவு அமைச்சகம் வரவேற்றது, “அயர்லாந்து எப்போதுமே யாருக்கும் சிறப்பு சலுகை அளிக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்று கூறினார். ஆப்பிள் நிறுவனமும், “இந்த வழக்கு நாங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறோம் என்பது பற்றியது அல்ல, ஆனால் அதை எங்கு செலுத்த வேண்டும்” என்பதைப் பற்றியது என்று கூறியது .

அடுத்த இரண்டு மாதங்களில், ஐரோப்பிய நீதிமன்றத்தின் பொது நீதிமன்ற தீர்ப்பை மேல்முறையீடு செய்ய ஆணையம் முடிவு செய்யலாம். பைனான்சியல் டைம்ஸ் அறிக்கையின்படி, தேவையான சான்றுகளை கொடுக்காததால், பொது நீதிமன்றத்தில் ஆணைக்குழு வழக்கை இழந்துவிட்டதால், வெற்றிக்கான வாய்ப்புகள் குறைவு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிவிதிப்பு முயற்சிகளில் தாக்கம்

இந்த தீர்ப்பு ஐரோப்பிய ஆணையத்திற்கு ஒரு பின்னடைவு என்று பலர் அழைத்தனர், ஆணைக்குழுவின் முயற்சிகள் ஒரு தடுமாற்றத்தை சந்திப்பது இது இரண்டாவது முறையாகும்; ஸ்டார்பக்ஸ் மீதான வழக்கு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

கார்ப்பரேட் வரி தவிர்ப்பு கையாள்வதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் குறைபாட்டை இந்த தீர்ப்பு அம்பலப்படுத்தியதாக விமர்சகர்கள் கூறியுள்ளனர் – கோவிட் -19 இன் மாபெரும் பொருளாதார செலவுகளை நாடுகள் எதிர்கொள்வதால் இந்த தீர்ப்பின் தாக்கம் அதிகம் உணரப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Why ireland fought for its tax structure apple

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X