scorecardresearch

ஜியோ – ஸ்பேசியல் துறையை விரிவுப்படுத்தும் இந்தியா: காரணம் என்ன?

வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கு தரவு ஏற்றுமதி அதிகரித்தால் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும் என்று அரசு நம்புகிறது.

 Esha Roy

Why is India opening up the geo-spatial sector? : இந்தியாவில் புவி-இடஞ்சார்ந்த (geo-spatial) துறைக்கு புதிய வழிகாட்டுதல்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது, இது தற்போதுள்ள நெறிமுறையை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் இந்தத் துறையை மிகவும் போட்டி அதிகம் கொண்ட இடமாக இதனை மாற்ற முயலுகிறது.

புவி இடம் சார் தரவு என்றால் என்ன?

ஜியோஸ்பேசியல் எனப்படும் புவி இடம்சார் தரவு என்பது ஒரு இடத்தை சுற்றி உள்ள பொருள்கள், நிகழ்வுகள், மற்றும் இதர தரவுகள் ஆகும். சில காலத்திற்கு அந்த இடத்தில் ஏற்படும் முக்கிய நிகழ்வுகள் நிலையானதாக இருக்கும். உதாரணமாக சாலை, பூகம்ப நிகழ்வு, ஊட்டச்சத்து குறைப்பாட்டால் தவிக்கும் குழந்தைகள், அல்லது நிலையற்றதாக இருக்கும் வாகனங்களின் இயக்கம், நடைபயணம் மேற்கொள்வோர்கள், நோய் தொற்று ஆகியவை குறித்ததாக இருக்கும். இந்த தரவுகள், அந்த இடத்தின் தகவல்கள் மற்றும் அதன் பண்புக்கூறுகளை கொண்டிருக்கும்.சாலைகள், ரயில்பாதைகள், நீர் நிலைகள் மற்றும் பொது வசதிகள் போன்ற பொதுநலன்களின் தகவல்களை உள்ளடக்கியது. கடந்த தசாப்தத்தில் ஸ்விக்கி அல்லது ஸோமாட்டோ போன்ற உணவு விநியோக செயலிகள், அமேசான் போன்ற இணைய விற்பனை தளங்கள் மற்றும் வானிலை செய்திகளை வெளியிடும் செயல்களின் இந்த தரவுகளை அன்றாடம் வாழ்வில் தினம் பயன்படுத்தியது.

புவி இடம்சார்ந்த தரவுகள் குறித்த தற்போதைய கொள்கைகள் என்ன?

தற்போதைய ஆட்சியின் கீழ் சேகரித்தல், சேமித்தல், பயன்படுத்துதல், பரப்புதல், மற்றும் விற்பனை செய்தல் போன்றவற்றிற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவில்லை. மேலும் இவை உள் மற்றும் வெளி பாதுகாப்பு பிரச்சனைகளை கொண்டுள்ளது. இது நாள் வரை இந்திய அரசாங்கமும், அரசாங்கத்தால் நடத்தப்படும் சர்வே ஆஃப் இந்தியா ஆதிக்கம் செலுத்துகின்றன. தனியார் நிறுவனங்கள் அரசின் பல்வேறு துறைகளில் இருந்து பாதுகாப்பு மற்றும் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து மனிதியை பெற்ற பிறகே தரவுகளை சேகரித்து, உருவாக்கி பரப்ப முடியும். ஆரம்பத்தில் பாதுகாப்புக்காக மட்டுமே இந்த தரவுகள் மீது அக்கறை செலுத்தப்பட்டது. பிறகு பாதுகாப்புத்துறை மற்றும் அரசின் சிறப்பு பகுதியாக இது பார்க்கப்பட்டது. கார்கில் போருக்கு முன்பு வெளிநாட்டு தரவுகளை அரசு சார்ந்திருந்தது என்பதை கார்கிலுக்கு பிறகு அரசு முதலீடு செய்த நிகழ்வு எடுத்துக் காட்டுகிறது.

இந்த தரவுகளை பெறுவதற்கான கட்டுப்பாடுகளை ஏன் அரசு தற்போது தளர்த்தியுள்ளது?

இதற்கு உரிமங்கள் மற்றும் அனுமதி பெற வேண்டும். ரெட் டேப் இடம் பெற்றிருப்பதால் இதனை பெற நாட்களாகலாம். மேலும் இதனால் திட்டங்கள் தாமதம் அடையும் சூழலும் உருவாகும். அரசு நிறுவனங்களுக்கும் இந்திய நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும்.  இந்த கட்டுப்பாடு நீக்கம் உரிமை பெறுவதையும், அனுமதிகளின் தேவையை ஆராய்வதையும் நீக்குகிறது. இந்திய நிறுவனங்கள், அரசு நிறுவனங்களால் கண்காணிக்கப்படாமல், வழிகாட்டுதல்களுக்கு இணங்குவதாக சான்று அளிக்க முடியும். எனவே இந்த வழிகாட்டுதல்கள் நிறுவனங்களின் மீது நம்பிக்கை வைக்கின்றன.

மேலும் படிக்க : தனியார் துறையை அவமதிக்கும் கலாச்சாரத்தை ஏற்க முடியாது – மோடி

தரவு அடிப்படையிலான உள்கட்டமைப்பு, மேம்பாடு மற்றும் வணிகங்களுக்கான திட்டமிடலுக்குத் தடையாக இருக்கும் தரவுகளின் பற்றாக்குறை அதிகம் உள்ளது. முழு நாட்டையும் வரைபடமாக்குவது, அதுவும் அதிக துல்லியத்துடன் உருவாக்க இந்திய அரசாங்கத்திற்கு பல ஆண்டுகள் ஆகலாம். எனவே இந்திய நிறுவனங்களுக்கு புவி-இடஞ்சார்ந்த துறையை ஊக்குவிப்பதற்கான அவசரத் தேவையை அரசாங்கம் உணர்ந்தது தற்போது தனியார் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கவும் முடிவு செய்துள்ளது. உலகளாவிய தளங்களில் பெரிய அளவிலான புவி-இடஞ்சார்ந்த தரவுகளும் கிடைக்கின்றன, இது பிற நாடுகளில் இலவசமாகக் கிடைக்கும் தரவுகளை ஒழுங்குபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாததாக ஆக்குகிறது.

பல தசாப்தங்களாக, புவியியல்-இடஞ்சார்ந்த தரவு மூலோபாய காரணங்களுக்காகவும், உள் மற்றும் வெளிப்புற பாதுகாப்பு கவலைகளுக்காகவும் முன்னுரிமையாக இருந்து வருகிறது. இந்த முன்னுரிமை கடந்த 15 ஆண்டுகளில் ஒரு மாற்றத்தைக் கண்டது. வளர்ச்சி, சமூக மேம்பாடு, இயற்கை பேரழிவுகள் மற்றும் பொருளாதாரம், வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின்சாரம், நீர், போக்குவரத்து, தகவல் தொடர்பு, சுகாதாரம் (நோய்களைக் கண்காணித்தல், நோயாளிகள், மருத்துவமனைகள் போன்றவை) . உள்கட்டமைப்பைத் திட்டமிடுவதில் புவி-இடஞ்சார்ந்த தரவு இப்போது அரசாங்கத்திற்கு இன்றியமையாததாகிவிட்டது.

இது எத்தகைய மாற்றத்தை உருவாக்கும்?

இந்த அமைப்பை தாராளமயாக்குவதன் மூலம், அரசு இந்த துறையில் அதிக போட்டியாளர்களை உறுதி செய்கிறது. திட்டங்களை வகுக்கவும் நிர்வகிக்கவும் அரசாங்கத்திற்கு கிடைக்கக்கூடிய துல்லியமான தரவுகளை அரசாங்கம் உறுதி செய்யும். இ-காமர்ஸ் மற்றும் புதிதாக தொழில் முனைவோர்கள் இந்த தரவுகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் இந்த துறையில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இந்திய நிறுவனங்கள் இதன் மூலம் உள்நாட்டிலேயே அதிக அளவு செயலிகளை உருவாக்கிக் கொள்ளலாம். கூகுள் மேப்பின் இந்திய பதிப்பு போன்றவை அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். இதனால் பொத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இடையேயான உறவு வலுப்படும். இந்த துறைகளை அனுமதிப்பதன் மூலம் அரசின் பல்வேறு திட்டங்களில் அவர்களால் பணியாற்ற முடியும். அரசு இந்த துறையில் மேலும் புதிய முதலீடுகள் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நாடுகளுக்கு தரவு ஏற்றுமதி அதிகரித்தால் பொருளாதாரமும் வளர்ச்சி அடையும் என்று அரசு நம்புகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Why is india opening up the geo spatial sector