மும்பை உள்பட கொங்கன் பிராந்தியத்தில் இந்த மார்ச் மாதம் ஏன் வெய்யில் சுட்டெரிக்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.
ஏன் அனல் காற்று வீசுவது?
பொதுவாக 40 டிகிரி செல்சியல் வெப்ப நிலை பதிவானாலே கடுமையான அனல் காற்று வீசும். மலைப் பிராந்தியங்களில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானலே அனல் காற்று கடுமையாக இருக்கும்.
கடலோரப் பகுதிகளில், அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி ஆகும். அதிகபட்ச வெப்பநிலை 4.5 முதல் 6 டிகிரி வரை இருக்கும் போது, இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அனல் காற்று குறித்த அறிவிப்பை வெளியிடுகிறது.
உதாரணமாக, ஒரு பகுதியின் இயல்பான வெப்பநிலை 40 டிகிரியாகவும், உண்மையான பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை 45 டிகிரியாகவும் இருந்தால், அந்த இடம் அனலாக இருக்கும்.
அதேபோல, ஒரு பிராந்தியத்தில் இயல்பிலிருந்து புறப்படும் அதிகபட்ச வெப்பநிலை 6.4 டிகிரிக்கு மேல் இருக்கும்போது கடுமையான அனல் காற்று வீசும் என எச்சரிக்கப்படுகிறது.
இதுதவிர, எந்த நாளிலும் உள்ளூரில் 45 டிகிரி மற்றும் 47 டிகிரிக்கு மேல் பதிவானால், வானிலை ஆய்வு மையம் முறையே அனல் காற்று மற்றும் கடுமையான அனல் காற்று என அறிவிக்கிறது.
இந்தியாவில், அனல் காற்று மார்ச் முதல் ஜூன் வரை ஏற்படும். எப்போதாவது ஜூலையில் ஏற்படும். உச்ச அனல் காற்று மே மாதத்தில் பதிவாகியுள்ளன.
பஞ்சாப், ஹரியானா, டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அதிக அளவில் அனல் காற்றால் பாதிக்கப்படும் மாநிலங்கள் ஆகும்.
தமிழகம் மற்றும் கேரளத்தில் எப்போதாவது அனல் காற்று வீசும். குஜராத்தின் அருகிலுள்ள சௌராஷ்டிரா-கட்ச் பகுதிகளில் நிலவும் அனல் காற்றின் நேரடி தாக்கம் இருப்பதால் தான். மும்பை உள்ளிட்ட கொங்கன் பிராந்தியத்தில் தற்போது அனல் காற்று வீசி வருகிறது.
“வடமேற்கு இந்தியாவில் இருந்து வெப்பமான மற்றும் வறண்ட காற்று கொங்கனின் சில பகுதிகளை அடைகிறது. கூடுதலாக, மகாராஷ்டிர கடற்கரையில் கடல் காற்று மெதுவாக வீசுவது மற்றும் தெளிவான வானிலைகள் சேர்ந்து இத்தகைய வெப்பமான சூழலை ஏற்படுத்துகிறது”என்று மும்பையின் பிராந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறினார்.
மார்ச் மாதத்தில் இந்த வெப்பம் வழக்கத்திற்கு மாறானதா?
மும்பையில் உள்ள சான்டாக்ரூஸ் ஆய்வகத்தில் கடந்த திங்கள்கிழமை 39.6 டிகிரி பதிவானது. ரத்னகிரியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 40.2 டிகிரியைத் தொட்டது.
ஆனால் காலநிலை அடிப்படையில், இது அசாதாரணமானது அல்ல, ஏனெனில் மகாராஷ்டிராவின் குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வெப்பநிலைகள் மார்ச் மாதத்தில் படிப்படியாக உயரத் தொடங்குகின்றன என்கிறார் வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர்.
குறிப்பாக, கொங்கனில் இம்மாதம் பல நாட்கள் 35 டிகிரிக்கு அதிகமாக வெப்ப நிலை பதிவானது. 2011, 2019, 2018, 2015 மற்றும் 2013 ஆகிய ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் 40 டிகிரிக்கு மேல் மும்பையில் வெப்ப நிலை பதிவானது. 2013 ஆண் ஆண்டில் தான் அதிகபட்சமாக 41.7 டிகிரி வெப்பநிலை பதிவாகியது.
ரத்னகிரியில் 2011ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் 38 டிகிரி வெப்பநிலை பதிவாகியது. 1982 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் அதிகபட்சமாக 40.6 டிகிரி வெப்பநிலை பதிவானது.
சவுதி அரேபியாவின் 81 பேர் மரண தண்டனை ஈரானில் பதற்றத்தை ஏற்படுத்துவது ஏன்?
முன்னறிவிப்பு என்றால் என்ன?
கட்ச் - செளராஷ்டிராவில் மார்ச் 16 வரை அனல் காற்று கடுமையாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
குஜராத்தின் கொங்கன், குறிப்பாக மும்பை உள்ளிட்ட வட கொங்கன் மாவட்டங்களில் வெப்பம் மற்றும் வறண்ட காற்று தொடர்ந்து வீசுவதால், அதிகபட்ச வெப்பநிலை அடுத்த இரண்டு நாட்களுக்கு குறைந்தபட்சம் 38 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil