தனியார் நிறுவன வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு – கன்னட அமைப்புகளின் இன்றைய ‘பந்த்’ ஏன்?

வேலை ஒதுக்கீட்டு பரிந்துரைகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை, அனைத்து பொதுத்துறை பிரிவுகளிலும், மாநில அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களிலும் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருந்தது

By: Updated: February 13, 2020, 01:16:01 PM

கர்நாடகத்தில் தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று 1984 சரோஜினி மஹிஷி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் கன்னடர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத்தர வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்று (பிப்ரவரி 13) பந்த்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

கன்னட அமைப்புகள் இன்று ஏன் கர்நாடகவில் பந்திற்கு அழைப்பு விடுத்துள்ளன?

முன்னாள் மத்திய அமைச்சர் சரோஜினி பிந்துராவ் மஹிஷியின் கீழ் 1984 இல் அமைக்கப்பட்ட மஹிஷி கமிட்டி, கர்நாடகாவில் பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் ஒரு குறிப்பிட்ட வேலைகளை கன்னடர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

வேலை ஒதுக்கீட்டு பரிந்துரைகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை, அனைத்து பொதுத்துறை பிரிவுகளிலும், மாநில அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களிலும் கன்னடர்களுக்கு 100 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருந்தது. கூடுதலாக, மத்திய அரசு துறைகள் மற்றும் மாநிலத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் குரூப்-சி மற்றும் குரூப்-டி வேலைகளில் கன்னடர்களுக்கு 100 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய பரிந்துரைத்தது.

தனியார் துறையில், தேவைப்பட்டால், மூத்த / திறமையான பதவிகளைத் தவிர்த்து, கன்னடர்களுக்கு அனைத்து வேலைகளும் ஒதுக்கப்பட வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. இந்த குழு, மொத்தம் 58 பரிந்துரைகளை வழங்கியது. இதில், மத்திய அரசு பிரிவுகள் மற்றும் கர்நாடகாவில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் குழு-ஏ மற்றும் குரூப்-பி பணிகளில் முறையே குறைந்தபட்சம் 65 மற்றும் 80 சதவீத வேலைகளை கன்னடர்களுக்கு ஒதுக்குதலும் அடங்கும்.

டெல்லி அரசியலில் காங்கிரஸ் தன்னுடைய இடத்தை தக்கவைக்க என்ன செய்ய வேண்டும்?

இது தவிர, மாநிலத்தில் தொழில்துறை பிரிவுகளில் உள்ள அனைத்து பணியாளர்கள் அதிகாரிகளும் கன்னடர்களாக இருக்க வேண்டும் என்று குழு பரிந்துரைத்தது. தொழில் நிறுவனங்கள் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அறிக்கை மேலும் கூறியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Explained News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Why pro kannada outfits called for bandh today

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

JUST NOW
X