/tamil-ie/media/media_files/uploads/2018/07/s634.jpg)
FIFA World Cup 2018, England vs Croatia: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இன்று இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. இரவு 11.30 மணிக்கு இப்போட்டி தொடங்கியது.
This was the scene just two hours ago... Now fans are filling the stadium from all directions! #CROENG#ENG#WorldCuppic.twitter.com/dNkOdy8UUd
— Laure James, FIFA (@FIFAWorldCupENG) July 11, 2018
குரோஷியா அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் இன்று களமிறங்குகிறது. 1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வரை முன்னேறி இருந்ததே அந்த அணியின் சிறந்த செயல்பாடாகும். அந்த ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி கண்டது. இதன் பின்னர் பங்கேற்ற 4 உலகக் கோப்பை தொடர்களிலும் குரோஷிய அணி முதல் சுற்றுடன் வெளியேறியிருந்த நிலையில், தற்போது நடப்பு உலகக் கோப்பையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க - முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா குரோஷியா?
இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை, நடப்பு உலகக் கோப்பையில் ‘அனுபவமில்லாத அணி’ என்று இத்தொடருக்கு முன்பு அழைக்கப்பட்டாலும், 28 ஆண்டுகளுக்கு பிறகு அரைஇறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளது இங்கிலாந்து. லீக் சுற்றில் துனிசியா, பனாமா அணிகளை தோற்கடித்து பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2-வது சுற்றில் கொலம்பியாவை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வென்ற இங்கிலாந்து அணி, கால்இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் சுவீடனை வீழ்த்தியது.
இந்த நிலையில், இன்றைய போட்டியில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் உள்ளது ஹேரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி.
FIFA World Cup 2018, England vs Croatia: இங்கிலாந்து vs குரோஷியா இடையிலான அரையிறுதிப் போட்டியின் லைவ் ஸ்கோர் இங்கே,
நள்ளிரவு 02.10 - குரோஷியா அணி வெற்றிப் பெற்றது. எக்ஸ்டிரா டைமில் கோல் அடித்ததால், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்.
#CRO WIN! @HNS_CFF are in the #WorldCupFinal! #CROENG // #WorldCuppic.twitter.com/nAdhl2xumJ
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 11, 2018
நள்ளிரவு 01.51 - கோல்ல்ல்ல்... குரோஷியாவின் மன்ட்சுகிச் கோல் அடிக்க, குரோஷியா 1-2 என முன்னிலை பெற்றுள்ளது.
நள்ளிரவு 01.48 - எக்ஸ்டிரா டைமின் 15 நிமிடம் கொண்ட இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது. இதிலும், இரு அணியும் கோல் அடிக்கவில்லை எனில், பெனால்டி ஷூட் வாய்ப்பு தான்.
நள்ளிரவு 01.45 - எக்ஸ்டிரா டைமின் 15 நிமிடம் கொண்ட முதல் பாதி முடிந்தது.
நள்ளிரவு 01.37 - கார்னர் கிக் மூலம் வந்த பந்தை இங்கிலாந்தின் ஸ்டோன்ஸ் கோலாக்க முயற்சித்தார். ஆனால், அந்த கோலை குரோஷியா வீரர்கள் திறம்பட தடுத்தனர்.
நள்ளிரவு 01.27 - 30 நிமிடங்கள் கொண்ட எக்ஸ்டிரா டைம் ஆட்டம் தொடங்கியது.
Some more numbers for you. #CROENG // #WorldCuppic.twitter.com/XzqStvUw5H
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 11, 2018
நள்ளிரவு 01.17 - வழக்கமான இரண்டாம் பாதி ஆட்டம் முடிந்தது. அதன்பிறகு 3 நிமிடம் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. அதிலும் இரு அணியும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதனால் 30 நிமிடம் கொண்ட எக்ஸ்டிரா டைம் வழங்கப்பட்டது.
நள்ளிரவு 01.10 - குரோஷியா அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இரண்டாம் பாதியில் கோல் போஸ்ட்டை அதிகம் டார்கெட் செய்வது குரோஷியா தான்.
நள்ளிரவு 12.56 - கோல்ல்ல்ல்ல்.... ஆட்டத்தின் 68வது நிமிடத்தில் குரோஷியாவின் பெரிசிச் அற்புதமாக கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை வகிக்கிறது.
Game on in Moscow! #CROENG // #WorldCuppic.twitter.com/tnh1ryIqNF
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 11, 2018
நள்ளிரவு 12.50 - ஆக்ரோஷமாக சென்றுக் கொண்டிருந்த ஆட்டத்தின் 64வது நிமிடத்தில் குரோஷியாவிற்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வாக்கர் உட்பட இங்கிலாந்தின் பவர்புல்லான டிபன்சால் அது தடுக்கப்பட்டது.
நள்ளிரவு 12.42 - ஆட்டத்தின், 52-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் வாக்கருக்கு மஞ்சள் ஆட்டை காண்பிக்கப்பட்டது.
நள்ளிரவு 12.34 - குரோஷியா வீரர் ரபிச்சிற்கு, நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்தார்.
நள்ளிரவு 12.32 - இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.
நள்ளிரவு 12.16 - முதல் பாதி ஆட்டம் முடிந்தது. அதன் முடிவில், இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.
Advantage to @England in Moscow...#CROENG // #WorldCuppic.twitter.com/ngkuWV81ie
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 11, 2018
நள்ளிரவு 12.08 - இங்கிலாந்து வீரர் லிங்கார்டுக்கு ஒரு அருமையான கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அதனை தவற விட்டுள்ளார்.
இரவு 11.56 - குரோஷியா வீரர்கள் எப்படியாவது கோல் அடித்து ஆட்டத்தை முதல் பாதியிலேயே சமன் செய்துவிட வேண்டும் என முனைப்புடன் விளையாடி வருகின்றனர்.
Enjoying the first 25 minutes, @England fans? #CROENG 0-1 // #WorldCuppic.twitter.com/HTGgaId8oD
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 11, 2018
இரவு 11.45 - இங்கிலாந்து அணி தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.
இரவு 11.35 - ஆட்டம் தொடங்கிய நான்காவது நிமிடத்தில், ப்ரீ கிக் வாய்ப்பு கிடைக்க, அதனை அருமையாக பயன்படுத்திய இங்கிலாந்தின் ட்ரிப்பர் அற்புதமாக கோல் அடிக்க இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இரவு 11.30 - இதோ, பரபரப்பான அரையிறுதிப் போட்டி தொடங்கியது.
இரவு 11.24 - இரு அணிகளும் களத்திற்குள் வந்தது. இரு அணிகளின் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
இரவு 11.08 - குரோஷிய அணியில் ஒரேயொரு மாற்றமாக ஆண்ட்ரே க்ராமாரிக்கிற்கு பதிலாக மார்சிலோ போரோசோவிக் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. காலிறுதிப் போட்டியில் ஸ்வீடனுக்கு எதிராக விளையாடிய அதே அணி தான் இன்று களமிறங்குகிறது.
இரவு 11.02 - இங்கிலாந்து, குரோஷியா அணி வீரர்களின் விவரம்
FORMATIONS // #CROENG
????#WorldCuppic.twitter.com/uMi7msByS9
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) July 11, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.