FIFA World Cup 2018, Brazil vs Costa Rica: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இன்று முதலாவது ஆட்டமாக பிரேசில் மற்றும் கோஸ்டா ரிகா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மாலை 5.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.
Formations for #BRACRC…
Score predictions on this one? pic.twitter.com/VLmhqbXWMK
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) June 22, 2018
தனது முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணியுடன் மோதிய பிரேசில் 1-1 என போராடி டிரா செய்தது. இதுவரை பிரேசில் பங்கேற்ற 20 உலகக் கோப்பைத் தொடரின் முதல் ஆட்டங்களில் 16 முறை வெற்றியை பதிவு செய்துள்ளது. அத்தகைய வலிமையான அணியை அன்றைய ஆட்டத்தில் டிராவில் முடிக்கவைத்து, பிரேசில் தொடர் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்தது ஸ்விட்சர்லாந்து. அன்றைய ஆட்டத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நெய்மர் மீதே எதிரணியினரின் குறி இருந்தது. அவரை இறுதி வரை கோல் அடிக்க விடாமல், கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டனர்.
மேலும் படிக்க – இன்றைய ஆட்டங்கள் முழு விவரம்
நிச்சயம் இன்றைய போட்டியிலும், நெய்மர் மீதே கோஸ்டா ரிகா குறி வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. முடிந்தால், அவருக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் ஆட்டத்தைக் கூட வெளிப்படுத்தலாம். ஏனெனில், ஏற்கனவே நெய்மர் காயத்தால் அவதிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், நேற்று மெஸ்ஸியின் அர்ஜென்டினா அணி, குரோஷியாவிடம் 3-0 என தோல்வி அடைந்து, ஏறக்குறைய தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் உள்ளது. குரோஷியாவிடம், அர்ஜென்டினா இப்படி மோசமாக தோற்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனை மனதில் வைத்து, கோஸ்டா ரிகாவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், மிகுந்த எச்சரிக்கையுடன் பிரேசில் அணி இன்று களமிறங்க உள்ளது.
FIFA World Cup 2018, Brazil vs Costa Rica: பிரேசில் vs கோஸ்டா ரிகா இடையிலான ஆட்டத்தின் ஸ்கோர் இங்கே,
இரவு 07.30 – வாவ்! பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் ஆட்டம் முடியும் தருவாயில் கோல் அடித்தார். 2018 உலகக் கோப்பையில் நெய்மரின் முதல் கோல் இதுதான். இதனால், பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.
இரவு 07.22 – ஒருவழியாக முதல் கோல் அடித்தது பிரேசில்…. ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் பிரேசிலின் கவுண்டின்ஹோ கோல் அடிக்க பிரேசில் 1-0 என முன்னிலை
இரவு 07.10 – ஆட்டம் முடிய இன்னும் பத்து நிமிடங்களே உள்ளன.
இரவு 07.00 – இரு அணிகளுக்கும் கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தும், இரு அணிகளின் சிறப்பான டிஃபென்ஸ்சால் அது தடுக்கப்பட்டுவிட்டது.
மாலை 06.47 – ஜஸ்ட் மிஸ்ஸானது கோல்… பிரேசில் வீரர் அடித்த பந்து, கோஸ்டா ரிகா வீரர் ஒருவரின் ஒற்றை காலில் பட்டு திசை மாறியதால், அருமையான கோல் வாய்ப்பை இழந்தது பிரேசில்.
மாலை 06.38 – இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது. பிரேசிலுக்கு எதிரா எதோ திட்டம் போடுறாங்க போல!!
மாலை 06.20 – முதல் பாதி ஆட்டம் முடிந்தது. இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் ஆட்டம் 0-0 என சமநிலையில் உள்ளது.
Not too much to report on so far, to be honest. A tight affair at the Saint Petersburg Stadium. #BRACRC pic.twitter.com/yy6eBH20ud
— FIFA World Cup ???? (@FIFAWorldCup) 22 June 2018
மாலை 06.12 – போட்டியை கண்காணிக்கும் VAR தொழில்நுட்ப வல்லுனர்களின் அறை.
மாலை 06.02 – கோல்ல்ல்ல்ல்! ஆனா, பாருங்க பிரேசில் அந்த கோல்-ஐ ஆஃப் சைடில் அடிச்சுட்டாங்கலாம்.. அதனால், கோல் அடிச்சும் பலனில்லை.
மாலை 06.00 – மூன்றாவது முறையாக பிரேசிலுக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு. மீண்டும் அதை வீணடித்தது அந்த அணி.
மாலை 05.52 – மீண்டும் பிரேசிலுக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு. ஆனால், எப்படியும் கோல் போஸ்ட்டில் இருந்து 35 யார்டுகள் தொலைவு குறைவு. சற்று கடினம் தான். எதிர்பார்த்தது போல் கோல் கிடைக்கவில்லை.
மாலை 05.49 – ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் கோல் அடிக்க கோஸ்டா ரிகாவுக்கு அருமையான வாய்ப்பு கிட்டியது. ஆனால், ஜஸ்ட் மிஸ்…!
மாலை 05.45 – பிரேசிலுக்கு ஒரு ஃப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. நெய்மர் அடிக்க, மற்ற வீரர்கள் அதனை கோலாக மாற்ற முயற்சித்தும் பலனில்லை. இதனால், ஒரு நல்ல வாய்ப்பு பிரேசிலுக்கு பறிபோனது.
மாலை 05.36 – இதோ, 5 முறை உலக சாம்பியனின் ஆட்டம் தொடங்கியது.
மாலை 05.28 – பிரேசில் மற்றும் கோஸ்டா ரிகா அணிகளின் தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Fifa News by following us on Twitter and Facebook
Web Title:Fifa world cup 2018 live score brazil vs costa rica live streaming