Advertisment

FIFA World Cup 2018, Colombia vs Japan Highlights: வாவ்! உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்த ஆசிய அணி!

FIFA World Cup 2018, Colombia vs Japan: கொலம்பியா vs ஜப்பான் இடையிலான ஆட்டத்தின் ஸ்கோர் இங்கே,

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
FIFA World Cup 2018, Colombia vs Japan Highlights: வாவ்! உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்த ஆசிய அணி!

FIFA World Cup 2018: Colombia vs Japan

FIFA World Cup 2018, Colombia vs Japan: ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், இன்று முதலாவது ஆட்டமாக 'H' பிரிவில் இடம்பெற்றுள்ள கொலம்பியா மற்றும் ஜப்பான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மாலை 5.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது.

Advertisment

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள கொலம்பியா 6-வது முறையாக உலக கோப்பையில் விளையாட இருக்கிறது. போலந்து, செனகல் அணிகள் கொலம்பியாவுக்கு சவாலாக விளங்கும். செனகலுடன் மோதும் ஆட்டம் அந்த அணியின் நாக் அவுட் சுற்றை நிர்ணயம் செய்யலாம். அந்த அணி சிறப்பான நிலையில் இருப்பதால் ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவதில் சிரமம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

மேலும் படிக்க - 12 வருடங்கள் கழித்து வெற்றி பெற்ற ஸ்வீடன்

ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் கொலம்பிய அணியின் நட்சத்திர வீரராக விளங்குகிறார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இன்றைய போட்டியில் அவர் களமிறங்கவில்லை.

 FIFA World Cup 2018, Colombia vs Japan: கொலம்பியா vs ஜப்பான் இடையிலான ஆட்டத்தின் ஸ்கோர் இங்கே,

இரவு 07.31 - உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், தென் அமெரிக்காவைச் சேர்ந்த அணியை முதன் முதலில் வீழ்த்திய ஆசிய அணி எனும் பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.

publive-image

இரவு 07.25 - முடிந்தது... ஆட்டம் முடிந்தது...! 1-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது ஜப்பான். ஜப்பான் வெற்றி!

இரவு 07.20 - இரண்டாம் பாதி ஆட்ட முழுமையாக முடிந்தது. கூடுதலாக 5 நிமிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இரவு 07.18 - ஜப்பான் அணிக்கு இரண்டாவது கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்த ஒசாகோ, களத்தில் இருந்து வெளியேறுகிறார்.

publive-image

இரவு 07.02 - அட! அட! அட! ஜப்பானின் ஒசாகோ தலையால் முட்டி ஒரு அற்புதமான கோல் அடிக்க, ஜப்பான் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது.

publive-image

மாலை 06.52 - நட்சத்திர வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் மாற்று வீரராக களம் இறங்கியுள்ளார்.

மாலை 06.37 - இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கியது.

publive-image

மாலை 06.22 - முதல் பாதி ஆட்டம் முடிந்துள்ளது. 1-1 என இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. குறிப்பாக, ஜப்பான் முதல் கோல் அடித்த பிறகு எழுச்சி கண்ட கொலம்பியா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

மாலை 06.15 - கோல்ல்ல்ல்!!! கொலம்பியாவின் ஜுவான் ஃப்ரீ-கிக் மூலம் கோல் அடிக்க, ஆட்டம் தற்போது 1-1 என சமமாகியுள்ளது.

publive-image

மாலை 06.01 - கடுமையான வெயிலுக்கு மத்தியில், கடுமையாக போராடும் இரு அணிகள். கோல் அடிப்பதில் தீவிரம்.

மாலை 05.51 - ஆட்டத்தின் 14வது நிமிடத்தில், ஜப்பானுக்கு மற்றொரு கோல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதனை ஜப்பான் தவற விட்டுள்ளது.

மாலை 05.46 - கொலம்பிய வீரர் கார்லசுக்கு ரெட்கார்டு காட்டப்பட்டது. இந்த உலகக் கோப்பையில் ரெட் கார்டு வாங்கிய முதல் வீரர் கார்லஸ் தான். அதுமட்டுமின்றி, உலகக் கோப்பை வரலாற்றில், மிகவிரைவில் ரெட்கார்டு பெற்ற நிகழ்வில் இது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

publive-image

publive-image கொலம்பிய வீரர் கார்லஸ் கையில் பந்து பட்ட போது

publive-image 2018 உலகக் கோப்பையில் ரெட் கார்டு வாங்கிய முதல் வீரர் கார்லஸ் (மஞ்சள் ஜெர்ஸி)

மாலை 05.42 - கடவுளே! ஜப்பான் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதை கச்சிதமாக பயன்படுத்திய ஜப்பான் வீரர் ககாவா, முதல் கோல் அடித்தார். இதனால், ஜப்பான் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. அதேசமயம், கொலம்பிய வீரர் கார்லசுக்கு ரெட்கார்டு காட்டப்பட்டது. இந்த உலகக் கோப்பையில் ரெட் கார்டு வாங்கிய முதல் வீரர் கார்லஸ் தான்.

publive-image

மாலை 05.36 - இதோ, கொலம்பியா மற்றும் ஜப்பான் அணிகள் இடையேயான ஆட்டம் தொடங்கியது.

publive-image இரு அணி வீரர்கள் விவரம்

Fifa 2018
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment