/indian-express-tamil/media/media_files/vpnpMa6Fvwi73H9mMwRk.jpg)
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலானவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு. இதன் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்திக்கும் அவர்கள் எப்படியாவது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று முடிவு செய்து பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் உடல் எடை அதிகரிப்பால் பெரிய சிரமத்தை சந்தித்து வருவது வழக்கமாகி வருகிறது.
அந்த வகையில் 40 வயதை கடந்த பெண்கள் உடல் எடையை குறைக்க ஒரு சிறந்த மற்றும் எளிய வழி உள்ளது. பிரியாணி உள்ளிட்ட உணவுகளை செய்யும்போது பயன்படுத்தப்படும், நட்சத்திர சோம்பு அல்லது அன்னாசி பூ என்று சொல்லக்கூடிய அந்த பூவை எடுத்து தண்ணீரில், கொதிக்க வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை குடிக்கலாம். 40 வயதை கடந்த பெண்கள் தினமும் இதை செய்யும்போது, உடல் எடையை கட்டுப்படுத்த முடியும்.
40 வயது கடந்த பெண்கள் உடல் எடை குறைக்க... Dr.M.S.UshaNandhini விளக்கம் #gainingweight #womenshealth #weightgaining #weightlosstips #healthcare #womencare #yugamconnect #Puthuyugamtv
Posted by Puthuyugamtv on Sunday, September 15, 2024
பூண்டு 2 பல், பட்டை லவங்கம் சிறிதளவு எடுத்து, கால் ஸ்பூன் சீரகம் மற்றும் கால ஸ்பூன் சோம்பு சேர்த்து, 2 டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். இந்த தண்ணீர் அரை டம்ளர் அளவுக்கு சுண்டியவுடன், குடிக்கலாம். இந்த முறையில் குடிக்கும்போது உடலில் தேவையற்ற சதைகளை தவிர்க்க முடியும். உடல் எடையையும் குறைக்க முடியும். இந்த இரு மருத்துவ முறைகளை பின்பற்றினால், கண்டிப்பாக உடல் எடையை குறைக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us