சர்க்கரை அளவை 5 நாட்களில் குறைக்க ஐந்து சூப்பர் உணவுகள்
1.தேங்காய்
2.நெய்
3.முட்டை
4.பன்னீர்
5.நிலக்கடலை, பாதாம், பிஸ்தா போன்ற நட்ஸ்
சர்க்கரை அளவை 5 நாட்களில் குறைக்க ஐந்து சூப்பர் உணவுகள்
தேங்காயுடன் சேர்த்து மென்று சாப்பிடும்போது, நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது. அதனால், சர்க்கரை நோயாளிகள் தினமும் தேங்காய் சட்னி, தேங்காய் துவையல் போல எடுத்து கொள்ளாமல், துருவிப்போடும் பொரியல்களை சாப்பிடலாம்.வெறும் தேங்காயை அதிக அளவில் அப்படியே சாப்பிட கூடாது.
நீரிழிவு உள்ளவர்கள் உணவில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்ப்பது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
சர்க்கரையை அதிகப்படுத்தக்கூடிய கார்போஹைட்ரேட் ஒரு முட்டையில் மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. இதில் உள்ள அதிகமான அளவு புரதம் செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்ட உடனே ரத்த சர்க்கரை அளவை அதிகப்படுத்தாமல் தடுக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் காலை மற்றும் இரவு உணவுக்கு முன்னர் பன்னீரை எடுத்து கொள்ளலாம். ஒரு நாளைக்கு 80 முதல் 100 கிராம் வரையிலான பன்னீரை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு வேர்க்கடலை மிகவும் நல்லது. சர்க்கரையின் அளவு இதில் குறைவு என்பதுடன், இதிலுள்ள மெக்னீசியம், இன்சுலினை சுரக்க செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி, சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.சர்க்கரை நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை படி வேர்க்கடலை சாப்பிடலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“