75% பெண்களுக்கு இந்தச் சத்து குறைவு... அதுக்கு நெல் அரிசி வேணாம்; இத மட்டும் சாப்பிட்டு வாங்க: மருத்துவர் சிவராமன்
இன்றைய உணவுமுறையால் பெண்கள் பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளது. அதை சரிசெய்ய பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
இன்றைய உணவுமுறையால் பெண்கள் பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு உள்ளது. அதை சரிசெய்ய பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் பற்றி டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
கம்பு, வட மாநிலங்களில் பஜ்ரா என அழைக்கப்படும் ஒரு பாரம்பரிய மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த தானியம். இது பல நூற்றாண்டுகளாக இந்திய உணவுமுறையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. நவீன அறிவியல் ஆய்வுகளும் கம்பின் சிறப்பான ஆரோக்கிய நன்மைகளை பற்றிூறுவதாக டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
Advertisment
கம்பு பெண்களுக்கு மிக முக்கியமான தானியமாகும். மாதவிடாய், கர்ப்பகாலம், மற்றும் பாலூட்டும் காலங்களில் பெண்களுக்கு இரும்புச்சத்து தேவை அதிகமாக இருக்கும். யுனிசெஃப் அறிக்கைப்படி, இந்தியாவில் 75% பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு உள்ளது, குறிப்பாக கிராமப்புறப் பெண்களுக்கு இது அதிகமாக உள்ளது.
இதற்கு முக்கிய காரணம், அவர்களின் உணவுமுறையில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளின் பற்றாக்குறையே. கம்பில் நெல் அரிசியை விட எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்தும், 20 மடங்கு அதிக கால்சியமும் உள்ளது. இது ரத்த சோகையைத் தடுக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது என்று டாக்டர் சிவராமன் கூறுகிறார்.
கம்பு பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் தினசரி உணவில் சேர்க்கப்பட வேண்டிய ஒரு சிறந்த தானியம். இது உடலுக்குத் தேவையான ஆற்றலை அளித்து, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Advertisment
Advertisements
கம்பை உங்கள் அன்றாட உணவில் பல வழிகளில் சேர்க்கலாம்:
கம்பஞ்சோறு: சாதாரண அரிசி சோறுக்குப் பதிலாக கம்பஞ்சோறு சமைத்து குழம்பு, தயிர் அல்லது மோர் சேர்த்து சாப்பிடலாம்.
கம்பு மோர் சோறு: இது ஒரு சுவையான மற்றும் குளிர்ச்சியான உணவு. ஈரோடு, கோயம்புத்தூர், சேலம் போன்ற பகுதிகளில் திருமண நிகழ்வுகளிலும் இது பரிமாறப்படுகிறது.
கம்பங்கூழ்: காலை உணவாக கம்பங்கூழ் அருந்துவது உடலுக்கு ஆறு மணி நேரம் வரை ஆற்றலை அளிக்கும். மோர் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து கம்பங்கூழ் சாப்பிடுவது அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கிறது.
வெண் பொங்கல், இட்லி, பூரி, சப்பாத்தி போன்ற பிரபலமான காலை உணவுகளை விட கம்பங்கூழ் அதிக ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. இதில் கார்போஹைட்ரேட், புரதம், நல்ல கொழுப்புகள், பைட்டோ மாலிக்கியூல்ஸ், இரும்பு, கால்சியம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய கனிமங்கள் நிறைந்துள்ளன.
பூச்சிக்கொல்லிகள் இல்லாமல் இயற்கையாக விளைவிக்கப்படும் கம்பு, நம் உடலை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் வைத்திருக்க மிகச்சிறந்த ஒரு தானியமாகும். பெண்கள் வாரத்திற்கு குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது கம்பை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கிய நன்மைகளை பெறலாம் என டாக்டர் சிவராமன் கூறுகிறார்.